ilakkiyainfo

ilakkiyainfo

“எப்பவுமே டார்ச்சர்.. தம்பி பொண்டாடியையும் விட்டுவைக்கல.. அதான்”.. கணவனை கொன்ற நித்யா பகீர்

“எப்பவுமே டார்ச்சர்.. தம்பி பொண்டாடியையும் விட்டுவைக்கல.. அதான்”.. கணவனை கொன்ற நித்யா பகீர்
February 08
23:05 2020

திருப்பத்தூர்: கள்ளக்காதலன், சொந்த தம்பியுடன் சேர்ந்து.. சரக்கில் விஷம் கலந்து கணவனை கொலை செய்துள்ளார் மனைவி.. 2 முறை மதுவில் விஷம் கலந்து கணவனுக்கு தந்துள்ளார்.. ஆனால் அவர் சாகவில்லை..

அதனால் கல்லை தூக்கி போட்டு கொன்றுவிட்டார்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள பகுதி சின்ன மூக்கனூர்… இங்கு வசித்து வருபவர் ரமேஷ்குமார்… 34 வயதான இவர், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 4-ந் தேதி தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக்கடை பின்புறம் பிணமாக கிடந்தார்.. இவரது தலையில் ரத்த காயம் இருந்தது.

ஆனால் இவரை யார், எதற்காக கொன்றார்கள் என்று தெரியவில்லை. இதனால் அவரது மனைவி நித்யா ஜோலார்பேட்டை போலீசில் புகார் தந்தார்…

ஆனால் போலீசாருக்கு நித்யா மீதுதான் முதல் சந்தேகமே விழுந்தது.. அதனால் அவரை லேசாக விசாரித்தனர்..

அதற்கே நித்யா கன்னாபின்னாவென்று உளற தொடங்கினார்.. அதனால் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் எல்லா விஷயத்தையும் கக்கினார்.

அவர் சொன்னதாவது: “என் கணவர் ரமேஷ்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.. ஊதாரி.. வீட்டு செலவுக்கு பணமும் தர மாட்டார்… என் தம்பி மனைவியிடம் சில்மிஷமும் செய்தார்…

இந்த விஷயம் தெரிந்து என் தம்பி அரவிந்தன், நான், தம்பி மனைவி எல்லோருமே கோபத்திலும், ஆத்திரத்திலும் இருந்தோம். எனக்கு என் தம்பியின் நண்பர் மேஸ்திரி கணபதியுடன் கள்ள உறவு ஏற்பட்டது.

எங்களுக்கு ரமேஷ்குமார் தொல்லையாக இருப்பதால், நான், கணபதி, தம்பி அரவிந்தன் எல்லோரும் சேர்ந்து என் கணவனுக்கு மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்தோம்..

அவர் மயங்கி விழுந்தாரே தவிர உயிர் பிழைத்துவிட்டார்.. ஆனால் தொடர்ந்து என் தம்பி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்து கொண்டே இருந்தார்.. அதனால்தான் திரும்பவும் கொலை செய்ய முடிவு செய்தோம்.

ஏற்கனவே செய்ததைபோலவே மதுவில் விஷத்தை கலந்து.. ஏரிக்கரைக்கு அழைத்து சென்று குடிக்க செய்தோம்..

அப்படி குடித்தும் இந்த முறையும் அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அதனால் பக்கத்தில் கிடந்த கல்லை தூக்கி அவர் தலையில் போட்டு கொன்றான் என் தம்பி..” என்றார்.

இதையடுத்து நித்யா, தம்பி அரவிந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

ஆனால், அந்த கள்ளக்காதலன் கணபதியை காணோம்.. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2020
M T W T F S S
« Feb    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News