ஹட்டன் – திம்புள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபில்ட் தோட்டத்தின் சமாஸ்பிரிவில் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

24 வயதுடைய ராஜதுரை நவலெட்சுமி என்பவரே இன்று (23) காலை இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையின் குடி பழக்கம் காரணமாகவே தான் இந்த முடிவை எடுத்ததாகவும், தினமும் குடித்துவிட்டுவந்து அவர் சண்டைபிடிப்பதாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டே இந்த விபரீத முடிவை நவலெட்சுமி எடுத்துள்ளார்.

இதையடுத்து குறித்த யுவதியின் பிரதேச பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் திம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90-1-17625.0.560.320.160.600.053.800.700.160.90-20