Weather , , 0°C

ilakkiyainfo

சேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலைக்கு காரணம் என்ன? போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்

சேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலைக்கு காரணம் என்ன? போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்
January 12
23:54 2020
சேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கருப்பூர், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஜம்மனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் திருமலை. இவருடைய மகள் நிவேதா (வயது 23). இவர் சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்சி தாவர வியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நிவேதா பல்கலைக் கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார். நேற்று முன்தினம் மின் விசிறியில் துப்பட்டாவால் நிவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-மாணவி நிவேதா விடுதியில் கடந்த 10-ந் தேதி அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். ஆனால் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தான் மாணவிகள் வார்டனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே விடுதியில் மாணவியுடன் தங்கி இருந்தவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வறிக்கை தயாரிப்பதற்காக கள ஆய்வுக்கு சென்று விட்டனர். இதனால் நிவேதா மட்டும் விடுதியில் தனியாக இருந்துள்ளார். மாணவி பயன்படுத்திய டைரி, 3 பக்க காதல் கடிதம் மற்றும் செல்போன் கைப்பற்றப் பட்டுள்ளது.202001130123101779_What-causes-student-suicide-at-Salem-Periyar-University_SECVPF.gif சேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலைக்கு காரணம் என்ன? போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல் சேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலைக்கு காரணம் என்ன? போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல் 202001130123101779 What causes student suicide at Salem Periyar University SECVPFஒருதலை காதல்

மாணவி ஒருதலைப்பட்சமாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த வாலிபர் மாணவியின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இதனால் நிவேதா கடுமையான மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக தான் மாணவி விடுதியில் தனியாக இருந்த நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.மேலும் மாணவியின் செல்போனில் பதிவாகி உள்ள எண்களை ஆய்வு செய்து, அவர் யார், யாரிடம் பேசி உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளோம்.
விசாரணை முடிந்தால் தான் மாணவி தற்கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் மாணவி எழுதிய காதல் கடிதத்தில் என்ன எழுதப் பட்டிருந்தது என்பதை கூற போலீசார் மறுத்துவிட்டனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்