ilakkiyainfo

ilakkiyainfo

தினம் 100 உயிர்களை கொல்லும் கொரோனா – சீனாவில் பலி எண்ணிக்கை 1,113 ஆக உயர்வு

தினம் 100 உயிர்களை கொல்லும் கொரோனா – சீனாவில் பலி எண்ணிக்கை 1,113 ஆக உயர்வு
February 12
11:48 2020

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயினால் பலியானோர் எண்ணிக்கை சீனாவில் 1,113 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீஜிங்: சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.

சீனா, மலேசியா, தைவான், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரசுக்கான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன.

நேற்றைய தகவலின்படி, சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 1,011 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 ஆயிரத்து 640 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்து 113 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சீன சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதால் சீன மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Coronavirus News: கொரோனா வைரஸால் உருவாகியுள்ள நோய்க்கு ‘கோவிட்-19’ என பெயர் அறிவிப்பு

_110868197_f5676c60-b8ce-4e2f-a201-e172bc38551f  தினம் 100 உயிர்களை கொல்லும் கொரோனா - சீனாவில் பலி எண்ணிக்கை 1,113 ஆக உயர்வு 110868197 f5676c60 b8ce 4e2f a201 e172bc38551f

தற்போது உலகை அச்சுறுத்தி வரும் புதிய கொரோனோ வைரஸால் தற்போது உருவாகியுள்ள நோய்க்கு கோவிட்-19 என அதிகாரபூர்வமாக பெயரிட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின்தலைவர் டெட்ரோஸ், ”தற்போது இந்த நோய்க்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது இந்த பெயர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் இந்த நோயால் பல ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முடிந்தவரை இந்த புதிய வைரஸை எதிர்த்து கடுமையாக போரிட வேண்டும் என உலக நாடுகளையும், மக்களையும் டெட்ரோஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

_110851193_beijingcheck  தினம் 100 உயிர்களை கொல்லும் கொரோனா - சீனாவில் பலி எண்ணிக்கை 1,113 ஆக உயர்வு 110851193 beijingcheck

கடந்த சில நாட்களாகவே குழப்பங்களை தவிர்க்கவும், எந்த நாடு அல்லது குழு மீது முத்திரை குத்தப்படுவதை தவிர்க்கவும் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நோய்க்கு அதிகாரப்பூர்வ பெயர் வைத்திட வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.

”எந்த ஒரு தனி நபர், குழு, அல்லது விலங்கு என்று யாரையும் தொடர்புபடுத்தாமல் இருக்கும் விதத்திலும், அதேவேளையில் எளிதில் உச்சரிக்கும் விதத்திலும், இந்த நோய்க்கு தொடர்புடையதாகவும் இருக்கும் ஒரு பெயரை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவாலாக இருந்தது” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் இது குறித்து குறிப்பிட்டார்.

”கொரோனா”, ”வைரஸ்” மற்றும் ”நோய்” ஆகிய வார்த்தைகளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புதிய பெயருடன் இணைந்துள்ள 19 என்ற எண், இந்த வைரஸ் பரவ தொடங்கிய 2019 என்ற ஆண்டை குறிப்பதாகும். (கடந்த 31 டிசம்பரில் இந்த வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனத்துக்கு செய்தி அனுப்பப்பட்டது).

_110868199_mediaitem110862410  தினம் 100 உயிர்களை கொல்லும் கொரோனா - சீனாவில் பலி எண்ணிக்கை 1,113 ஆக உயர்வு 110868199 mediaitem110862410

இதனிடையே சீனாவில் மேலும் 42000 பேருக்கு கொரோனோ வைரஸ் தாக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2002-2003-இல் கடுமையான பாதிப்பை உருவாக்கிய சார்ஸ் நோய் தொற்றால் ஏற்பட்ட மரணங்களை விட தற்போது கொரோனோ வைரஸ் தாக்குதலால் அதிக மரணங்கள் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள சீனாவின் ஹூபே மாகாணத்தில் திங்கள்கிழமையன்று 103 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 1016 பேர் இறந்துள்ளனர்.

முன்னதாக கடந்த திங்கள்கிழமையன்று, கொரோனா வைரஸ் குறித்துப் பொய் செய்திகளைப் பரப்பாதீர்கள். அது குறித்து கிண்டல் செய்யாதீர்கள் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.

பொய் பரப்புரைகள் எங்களது முயற்சிகளை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.

_110868202_42064277-f58f-4e6b-9c37-31c20b50377f  தினம் 100 உயிர்களை கொல்லும் கொரோனா - சீனாவில் பலி எண்ணிக்கை 1,113 ஆக உயர்வு 110868202 42064277 f58f 4e6b 9c37 31c20b50377f

மீட்புப் பணியில் நமது கதாநாயகர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்று கூறி உள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ், “தற்போது வெளிவரும் பல பொய் செய்திகள் நமது கதாநாயகர்கள் மேற்கொண்டுள்ள பணியை மேலும் சிரமமாக்கிவிடுகிறது,” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர், “உண்மையில் நாங்கள் வைரஸை எதிர்த்து போராடுவதைவிட, இதுபோன்ற பொய் செய்திகளை, கிண்டல்களை எதிர்த்துதான் அதிகம் போராடுகிறோம்,” என்று அவர் கூறி உள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News