ilakkiyainfo

10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்… சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி

10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்… சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி
January 21
20:28 2020

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் மது குடிக்கும் போட்டியில் கலந்துகொண்டு, அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் ரத்த வாந்தி எடுத்து மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உகான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர சிங் (55). இவர் கடந்த வெள்ளிக்கிழமை காலை, இஸட்நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் பிரதீப் என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மது குடிப்பது தொடர்பாக இருவருக்குமிடையே பந்தயம் நடந்தது.

202001211510124804_55yearold-man-dies-after-winning-liquor-drinking-contest_SECVPF.gif 10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி 10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி 202001211510124804 55yearold man dies after winning liquor drinking contest SECVPF20 நிமிடத்திற்குள் யார் 4 குவாட்டர் பாட்டில்களை குடிக்கிறாரோ அவர்தான் வெற்றியாளர். தோல்வி அடைபவர், இரண்டு பேருக்கான 8 குவார்டர் பாட்டில்களுக்கான விலையை கொடுக்க வேண்டும். ராஜேந்திர சிங்கின் மகன் தர்மேந்திரா உள்ளிட்ட 9 பேர் உடனிருந்தனர்.

ஆனால் போட்டி ஆரம்பித்த பத்து நிமிடத்திலேயே ராஜேந்திர சிங் நான்கு குவாட்டர் பாட்டில்களை, தண்ணீர் உள்ளிட்ட எந்த பானமும் கலக்காமல் ராவாக குடித்து முடித்து பந்தயத்தில் வென்றார்.

இந்த உற்சாகத்துடன் தன் வீட்டிற்கு வந்து படுத்த ஒரு மணி நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கினார்.

இதை கண்ட அவரது மகன், தந்தையை காப்பாற்ற மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சை அழைத்தார்.

ஆனால் ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு வரும் முன்னரே ராஜேந்திர சிங் இறந்து விட்டார். இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்