கடந்­த­வாரம் நிகழ்ந்த அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்­போது, எதிர்­பார்ப்­புக்­கு­ரி­ய­தாக இருந்த சில விட­யங்­களில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்­கு­ரிய பத­வியும் ஒன்­றாகும்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு, பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பத­விக்குப் பதி­லாக, சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்­கப்­படக் கூடும் என்ற எதிர்­பார்ப்பு பர­வ­லாகக் காணப்­பட்­டது.

சட்டம் ஒழுங்கு அமைச்சர் பத­வியில் இருந்து, சாகல ரத்­நா­யக்க வில­கிய பின்னர், அந்தப் பதவி சரத் பொன்­சே­கா­வுக்கு வழங்­கப்­ப­டலாம் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது என்­பதை விட, அவரை அந்தப் பத­விக்கு நிய­மிப்­பதே பொருத்தம் என்றே பலரும் கரு­தி­யி­ருந்­தனர்.

சரத் பொன்­சே­கா­வுக்கும் கூட அந்தப் பத­வியின் மீது ஓர் ஈர்ப்பு இருந்­தது. ஆனாலும், அந்தப் பதவி திலக் மாரப்­ப­ன­விடம் கொடுக்­கப்பட்டது.

பின்னர், அதனை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எடுத்­துக்­கொண்டார். கண்டி கல­வ­ரத்­துக்குப் பின்னர், சட்டம் ஒழுங்கு அமைச்சு, யாரும் எதிர்­பா­ராத வகையில் ரஞ்சித் மத்­தும பண்­டா­ர­விடம் கொடுக்­கப்­பட்­டது.

சட்டம் ஒழுங்கு அமைச்சு இவ்­வாறு கைமாற்­றப்­பட்டுக் கொண்­டி­ருந்த போது, சரத் பொன்­சே­காவும் சரி, அவரை அந்தப் பத­விக்கு நிய­மிக்­கப்­பட வேண்டும் என்று எதிர்­பார்த்­த­வர்­களும் சரி- கடு­மை­யாக ஏமாற்­ற­ம­டைந்­தனர்.

ரஞ்சித் மத்­தும பண்­டா­ரவும் கூட தனக்கு இந்தப் பதவி கிடைக்கும் என்று எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை. அதனால், கடந்த வாரம் நடந்த அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்­போது, அது மற்­றொ­ரு­வரின் கைக்கு மாறலாம் என்று வலு­வாக எதிர்­பார்க்­கப்­பட்­டது.

பெரும்­பாலும் சரத் பொன்­சே­கா­வுக்கே அந்தப் பதவி வழங்­கப்­படும் என்றே நம்­பப்­பட்­டது. ஆனால் கடை­சியில் அவ­ருக்கு, ஏற்­க­னவே வகித்து வந்த பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்­சுடன், வன ஜீவ­ரா­சிகள் அமைச்சே கூடு­த­லாக வழங்­கப்­பட்­டது.

ஜனா­தி­ப­தி­யிடம் இருந்து நிய­மனக் கடி­தத்தைப் பெற்­றுக்­கொண்­ட­போது. சரத் பொன்­சே­காவின் முகம் இறுக்­க­மா­கவே காணப்­பட்­டது. அதுவே அவ­ரது ஏமாற்­றத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தாக இருந்­தது.

எனினும், பின்னர் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்த போது, தமக்கு வழங்­கப்­பட்ட அமைச்சுக் குறித்து திருப்­தி­ய­டை­வ­தாக கூறி­யி­ருந்தார். எவ்­வா­றா­யினும், சரத் பொன்­சே­கா­வுக்கு வழங்­கப்­பட்ட வன ஜீவ­ரா­சிகள் அமைச்சை வைத்து, மஹிந்த ராஜபக் ஷவும், நாமல் ராஜபக் ஷவும் கிண்டல் அடித்­தி­ருந்­தார்கள்.

சரத் பொன்­சே­கா­வுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி கொடுக்­கப்­படக் கூடாது என்­பதில், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் உள்ளவர்களுக்கு மாத்­தி­ர­மன்றி, ஐக்­கிய தேசியக் கட்­சியில் உள்ள சிலரும் உறு­தி­யாக இருந்­தனர்.

சரத் பொன்­சேகா சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டால், முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற முறை­கே­டுகள், மோசடிகள் தொடர்­பான விசா­ர­ணைகள் துரி­த­மாக முன்­னெ­டுக்­கப்­படும் சாத்­தி­யங்கள் உள்­ள­தாக பொது­வான ஒரு நம்­பிக்கை உள்­ளது.

சரத் பொன்­சே­காவும் கூட, தாம் சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டால், விசா­ர­ணை­களை விரை­வாக முன்­னெ­டுத்து. ராஜபக் ஷவி­னரை கூண்டில் ஏற்­றுவேன் என்று கூறி­யி­ருந்தார்.

இப்­போது சரத் பொன்­சேகா சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டு­வதில் உள்ள பிரச்­சி­னையும் இது தான். அர­சாங்­கத்­துக்குள்- இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் மாத்­தி­ர­மன்றி ஐ.தே.கவினர் சிலரும் கூட, ராஜபக் ஷவி­னரைப் பாது­காப்­பதில் உறு­தி­யாக இருக்­கின்­றனர்.

imageproxy.php

சரத் பொன்­சேகா ராஜபக் ஷவி­னரால் அடி­பட்­டவர். அவர்­களால் எல்லா மரி­யா­தை­க­ளையும் இழந்து சிறைக்­கை­தி­யாக அடைக்­கப்­பட்­டவர். அதனால், அவ­ருக்குள் இன்­னமும் பழி­வாங்கும் வெறி இருந்து கொண்­டி­ருக்­கி­றது.

சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ராக சரத் பொன்­சே­காவை நிய­மித்தால் அவர்­களை விடாமல் துரத்­துவார் என்ற பயம், ராஜபக் ஷவி­ன­ருக்கு மாத்­தி­ர­மன்றி, அர­சாங்­கத்தில் இருக்­கின்ற பல­ருக்கும் கூட உள்­ளது.

இது தான், அவ­ருக்கு இந்தப் பதவி இன்­னமும் எட்­டாக்­க­னி­யாக இருப்­ப­தற்கு முக்­கிய காரணம்.

சரத் பொன்­சே­கா­வுக்கு, ஐ.தே.க. உரிய கௌர­வத்தை வழங்­க­வில்லை என்ற குறை­பாடும் அவ­ரது அனு­தா­பிகள் பல­ரிடம் உள்­ளது. உண்­மையில், இரா­ணுவப் பின்­ன­ணியில் இருந்து வந்­த­வர்­களால் ஐ.தே.கவில் பெரும் வளர்ச்சி காண முடி­ய­வில்லை.

சந்­தி­ரிகா ஆட்­சிக்­கா­லத்­திலும் சரி, மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்­திலும் சரி, இரா­ணுவ அதி­கா­ரிகள் மட்­டத்தில் இவர் ஐ.தே.க. அனு­தாபி, இவர் சுதந்­திரக் கட்சி ஆத­ர­வாளர் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் போக்கு காணப்­பட்­டது.

மேஜர் ஜெனரல் லக்கி அல்­கம, மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, மேஜர் ஜெனரல் சுசில் சந்­தி­ர­பால, ஜெனரல் சரத் பொன்­சேகா போன்­ற­வர்கள் பத­வியில் இருந்த காலத்­தி­லேயே ஐ.தே.க. அனு­தா­பிகள் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்கள்.

CHANDRIKA_jpg_2361767f-636x450-300x212இதனால் இவர்­களால் சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆட்­சிக்­கா­லத்தில் இரா­ணுவத் தள­பதி பத­வியை அடைய முடி­யாத நிலை காணப்­பட்­டது.

இரா­ணுவத் தலைமை அதி­கா­ரி­யாக இருந்து ஓய்­வு­பெற்ற மேஜர் ஜெனரல் லக்கி அல்­கம, ஐ.தே.க. ஆட்­சிக்கு வந்தால் பிரதிப் பாது­காப்பு அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டுவார் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டவர். கிழக்கில் புலி­க­ளுக்கு எதி­ரான புல­னாய்வு நட­வ­டிக்­கை­களை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்த அவர், அதி­கா­ரத்­துக்கு வரு­வதை புலி­களும் விரும்­ப­வில்லை.

1999ஆம் ஆண்டு சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவை இலக்கு வைத்து குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்ட அதே­வேளை வத்­த­ளையில் நடத்­தப்­பட்ட மற்­றொரு குண்­டுத்­தாக்­கு­தலில் மேஜர் ஜெனரல் லக்கி அல்­க­மவும் கொல்­லப்­பட்டார்.

அது­போ­லவே, இரா­ணுவத் தலைமை அதி­காரி பத­விக்கு அப்பால் நகர முடி­யாமல் ஓய்­வு­பெற்ற மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா வட­மத்­திய மாகாண முத­ல­மைச்சர் பத­விக்கு ஐ.தே.கவினால் கள­மி­றக்­கப்­பட்டார். அவரால், முத­ல­மைச்சர் பத­வியைப் பிடிக்க முடி­யாத அதே­வேளை, குண்­டுத்­தாக்­கு­தலில் அவரும் கொல்­லப்­பட்டார்.

சரத் பொன்­சே­கா­வுக்கும் கூட இரா­ணுவத் தள­பதி பதவி மறுக்­கப்­பட்டு, ஓய்­வு­பெ­ற­வி­ருந்த நிலையில் தான், மஹிந்த ராஜபக் ஷ போரை வெல்­வ­தற்­காக அவரை இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மித்­தி­ருந்தார்.

போர் முடிந்­ததும், மஹிந்த அரசு அவரை ஒதுக்க முனைந்­தது. அப்­போது, அவர் மஹிந்­தவை விட்டு விலகி, பொது­வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கினார்.

அதன் விளை­வாக, அவர் ராஜபக் ஷவி­னரைப் பகைத்துக் கொள்­வ­தற்கும், சிறை­வா­சத்தை அனு­ப­விக்­கவும் நேரிட்­டது. தனிக்­கட்சி தொடங்­கினார். அதுவும் தோல்­வியில் முடிய, கடை­சியில் ஐ.தே.கவில் இணைந்து கொண்டார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மித்த ஐ.தே.க. அவரை பாது­காப்பு அமைச்­ச­ராக நிய­மிக்கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் , அந்தப் பதவி மாத்­தி­ர­மன்றி, சட்டம் ஒழுங்கு அமைச்சர் பத­வியைக் கூட ஐ.தே.கவினால் அவ­ருக்குக் கொடுக்க முடி­ய­வில்லை.

ஐக்­கிய தேசியக் கட்­சியில் உயர்­ப­தவி ஒன்று சரத் பொன்­சே­கா­வுக்குக் கொடுக்­கப்­படும் என்ற எதிர்­பார்ப்பும் காணப்­பட்­டது, ஆனால் அண்­மைய கட்சி மறு­சீ­ர­மைப்­பு­களின் போது கூட சரத் பொன்­சே­கா­வுக்கு புதிய பத­விகள் ஏதும் கொடுக்­கப்­ப­ட­வில்லை.

பொது­வா­கவே, சரத் பொன்­சேகா போன்ற பர­வ­லாக அறி­யப்­பட்ட –மர­பு­சாரா அர­சி­யல்­வா­தி­களை கட்­சிக்­குள்­ளேயும், அர­சாங்­கத்­துக்­குள்­ளேயும், முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வதை மர­புசார் அர­சி­யல்­வா­திகள் விரும்­பு­வ­தில்லை.

மர­பு­சாரா அர­சி­யல்­வா­திகள் சில விட­யங்­களை துணிச்­ச­லுடன் முடிக்­கின்ற ஆளுமை கொண்­ட­வர்­க­ளாக இருப்­பார்கள். பின்­வி­ளை­வு­களைப் பற்­றியோ, தமது அர­சியல் எதிர்­காலம் பற்­றியோ அவர்கள் அதிகம் சிந்­திக்­க­மாட்­டார்கள்.

சரத் பொன்­சே­காவும் அத்­த­கைய ஒருவர் தான். அதுதான், அவரால் அர­சாங்­கத்­துக்­குள்­ளேயும், ஐக்­கிய தேசியக் கட்­சிக்­குள்­ளேயும், பெரிய பத­வி­களை எட்ட முடி­யாமல் உள்­ள­தற்குக் காரணம்.

இந்தப் பிரச்­சினை சரத் பொன்­சே­கா­வுக்கு மட்டும் உள்­ள­தல்ல. கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கும் கூட இதே பிரச்சினை உள்ளது.

Gotabaya-Rajapaksa-300x250அவர் ஒரு மரபுசாரா அரசியல்வாதியாக – அரசியலில் களமிறங்கும் எதிர்பார்ப்பில் இருக்கிறார். அதற்கான சமிக்ஞைகளையும் இப்போது வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.

இருந்தாலும், கூட்டு எதிரணிக்குள் அல்லது பொதுஜன முன்னணிக்குள் இருக்கும் மரபுசார் அரசியல்வாதிகள் அவரை, அவரது வளர்ச்சியை அச்சத்துடன் பார்க்கிறார்கள். அது அவரது அரசியல் எதிர்காலத்துக்கும் கூட சிக்கலாக உள்ளது.

இராணுவத்தில் இருந்த போது நட்சத்திர நிலை தளபதிகளாக சோபித்தவர்களால் அரசியலில் பிரகாசிக்கின்ற நிலை இதுவரை உருவாகவில்லை. அதற்கு இந்தச் சிக்கலும் ஒரு காரணம்.

இந்தச் சிக்கலை உடைத்துக்கொண்டு வெளியே வர முடியாமல் சரத் பொன்சேகா திணறிக் கொண்டிருக்கும் நிலையில், கோத்தாபய ராஜபக் ஷ மாத்திரம் விதிவிலக்கானவராக இருந்து விட முடியுமா ?

Share.
Leave A Reply