வாழைச்சேனை பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு மேற்கொண்ட தேடுதல் பணியின்போது கிரான் பூலாக்காடு பிரதேசத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

IMG-20200211-WA0005

கைது செய்யப்பட்டவர்களில் கண்டி அல்கடுவ,கோமாகம மற்றும் கோரகல்லி மடு கிரான் பிரதேசங்களை சேர்ந்த மும்மதத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

IMG-20200211-WA0003

இதன்போது புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், பூசைப் பொருட்க்கள், மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் பொருட்க்கள் என்பன வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் , பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.