ilakkiyainfo

ilakkiyainfo

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் மீட்பு

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் மீட்பு
February 12
11:19 2020

முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இன்று (12)மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக புனர்வாழ்வு வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில்  குறித்த வைத்தியசாலை கட்டடங்களை அமைப்பதற்காக குறித்த காணி துப்புரவு பணிகள் இடம்பெற்று வந்தன.

இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக தெரிவித்து அந்த பகுதி மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களினால் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் குறித்த கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டதை அவதானித்த பணியாளர்கள்  மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

??????????????????????????????? மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் மீட்பு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் மீட்பு DSC05796 e1581506608170மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றுக்கு அறிவிக்கபட்டு விசாரணைக்காக அனுமதி பெறப்பட்டது . இதனை தொடர்ந்து சற்றுமுன்னர் குறித்த இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் குறித்த இடத்தை பார்வையிட்டார்.

குறித்த பகுதியை பார்வையிட முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார்  சென்ற நிலையில் குறித்த சம்பவத்தை செய்தி அறிக்கையிட சென்ற ஊடகவியலாளரை வீடியோ புகைப்படம் எடுக்கவிடாது மாங்குளம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் தள்ளி குறித்த வளாகத்தை விட்டு வெளியேற்றிய நிலையில் குறித்த  வளாக வாயில் கதவினை  கண்ணிவெடியகற்றும் பணியாளர்கள் மூடியுள்ளனர் .

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News