ilakkiyainfo

ilakkiyainfo

ரூ.4,600 கோடிக்கு சொகுசு கப்பல் வாங்கும் பில்கேட்ஸ்

ரூ.4,600 கோடிக்கு சொகுசு கப்பல் வாங்கும் பில்கேட்ஸ்
February 11
01:38 2020

இந்திய மதிப்பில் ரூ.4,600 கோடி மதிப்புடைய, முற்றிலும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் சொகுசு கப்பல் ஒன்றை வாங்க பில்கேட்ஸ் சமீபத்தில் ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்: உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படும் பசுமை சொகுசு கப்பல்களை வாங்குவதில் அதிக முதலீடு செய்து வருகிறார்.

அந்த வகையில் 645 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4,600 கோடி) மதிப்புடைய, முற்றிலும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் சொகுசு கப்பல் ஒன்றை வாங்க பில்கேட்ஸ் சமீபத்தில் ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த சினோட் என்ற நிறுவனத்தால் இந்த சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டு வருகிறது. 112 மீட்டர் நீளம் கொண்ட இந்த பிரமாண்டமான சொகுசு கப்பல் 5 தளங்களை கொண்டது.

இந்த கப்பல் உடற்பயிற்சி கூடம், ஒரு ஹைட்ரோ-மசாஜ் அறை, யோகா ஸ்டூடியோ, நீச்சல் குளம், ஹெலிபேட் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது.

கப்பல் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தாலும், 2024-ம் ஆண்டுக்கு முன்னர் இந்த கப்பல் கடலுக்கு செல்ல வாய்ப்பில்லை என சினோட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2020
M T W T F S S
« Feb    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News