இருசக்கர வாகனத்தில் வந்த விவசாயிகளுக்கு சிங்க கூட்டங்கள் வழிவிட்ட காட்சி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தின் கோதியானா என்ற இடத்தில், சாலையில் சிங்க கூட்டங்கள் நடந்து சென்றுள்ளன.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த விவசாயிகளுக்கு சிங்க கூட்டங்கள் வழி விட்டு ஒதுங்கி சென்றது.

இதுகுறித்து பேசிய கிராம மக்கள், சிங்கங்கள் இவ்வழியாக வந்த போதும் தங்களை தாக்குவதில்லை என்று தெரிவித்தனர்.

இந்த வீடியோவை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்யசபா எம்பி பரிமல் நாத்வானி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Share.
Leave A Reply