அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே…

அழிக்கும் அதிகாரம் இவர்க்கு தந்தவன் எவன் இங்கே…

இது ஒரு பாடலின் வரி. இந்த வரிகள் இந்த இடத்திற்கு பொருந்தும் என்று எண்ணுகின்றோம்.

மனித குலத்தில் புரையோடி மனதை அறுக்கும் ரணமெல்லாம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது ஈராக்கில்.

நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு வன்முறையும் வெறியாட்டமும் தலைவிரித்தாடுகிறது அங்கே.

இதை நடத்திவருகிறது ஐ.எஸ்.

என்னதான் தேவை இவர்களுக்கு. தேவைகள் இருந்தாலும் இந்தமாதிரியான வன்முறை

வெறியாட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமா-?

இல்லை… நிச்சயமாக முடியாது.

கழுத்தறுப்பதென்பதை சொல்லக்கேட்டிருப்போம்…

இவர்கள் செய்ய இப்போது உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

வெறுமனே பார்த்துக்கொண்டு மட்டும் இருப்பதுதான் பெரும் கொடுமை.

தற்போது எவரையேனும் பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு, பிணைத்தொகை கேட்டு தினந்தோறும் செய்திகளில் இடம்பிடிக்கும் இவர்கள் அது கிடைக்காத போது கொடூரமான முறையில் அந்த கைதிகளை கொன்று வீடியோவை வேறு வெளியிட்டு விடுகிறார்கள்.

இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்த வண்ணமே உள்ளது.

இந்த அமைப்பு உருவாவதற்கு காரணம்- யார்-?

சதாமின் வீழ்ச்சிக்குப் பிறகு ஈராக்கில் ஒரு அதிகார வெற்றிடம் வந்தது…

அந்த வெற்றிடத்தை நிரப்புகிறதா- ஐ.எஸ்? தெரியாது…

ஆனாலும் இந்த அதிகார வெற்றிடத்தாலயே ஐ.எஸ் அமைப்பு மிகப்பெரும் சக்தியாக உருமாறியதாக சொல்கிறார்கள்.

சிரியாவில் நடந்த உள்நாட்டு போரில் தலையிட்டது ஐ.எஸ்.

அதனால் இன்னும் அதன் பலம் கூடியது.

இதனால் உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டது ஐ.எஸ்.

ரஷ்யா, அமெரிக்கா நாடுகளின் ஆயுதங்களையும், சிரியா மற்றும் ஈராக் வங்கிகளில் பல கோடி மதிப்பிலான கஜானாக்களையும் கொள்ளையடித்து பெரும் பணக்கார தீவிரவாதிகளாக உருமாறினர்.

இது அனைத்தும் சிரியா யுத்தத்தில் தலையிட்டதனால் கிடைத்தவை.

ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசுல் நகரை கைப்பற்றி தாங்கள் யார் என்பதையும், தாங்கள் எதையும் செய்ய துணிந்தவர்கள் என்பதையும் உலக நாடுகளுக்கு பறைசாற்றினர்.

ஈராக், சிரியா அல்லாத பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள், பல பெண்களும் கூட இதில் சேரவும் இவர்களை திருமணம் செய்யவும் படையெடுத்த வண்ணமே உள்ளனர்.

இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், ஈரான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதாகும்.

இதுமட்டுமல்லாமல் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதையெல்லாம் செய்ய இடம் கிடைக்குமா-?

ஹமாஸும் சரி… மற்றைய பாலஸ்தீன போராளிகளும் சரி ஜோர்டானின் ஹிஸ்புல்லாவும் சரி இதற்கு இடம் கொடுக்க மாட்டர்கள் என்று கருதப்படுகிறது.

காரணம் இவர்கள் யாரும் ஐ.எஸ்.ஸை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் செய்யும் அக்கிரமங்களை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

ISIS_CIA_Convoyஈரான் கூட ஐ.எஸ்.ஸை எச்சரிக்கிறது… நீங்கள் செய்வது அநியாயம் என்ற தொனியில்…

இப்படியிருக்க பாலஸ்தீன், ஜோர்டானை இணைக்க முடியுமா ஐ.எஸ்.ஸால்?

ஈராக்கிலும், சிரியாவிலும் இவர்களின் கை ஓங்கியிருக்கலாம். ஆனால் ஜோர்டானுக்குள்ளோ பாலஸ்தீனத்திற்குள்ளோ இவர்கள் நுழைவது அவ்வளவு சுலபமால்ல…

காரணம் இஸ்ரேலால் கூட இதை செய்து கொள்ள முடியாமல் தான் இன்றுவரை தலையை போட்டு பிய்த்துக்கொண்டிருக்கிறது.

சில காலங்களுக்கு முன்பு இஸ்ரேல் உளவாளி என்று கூறி12 வயது சிறுவன் சுட்டுக்கொலை செய்த வீடியோவை, ஐ.எஸ். வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐ.எஸ். , பிணைக்கைதிகளை பிடித்து தலையைத் துண்டித்து படுகொலை செய்து, அதை வீடியோ படம் எடுத்து, ஒன்லைனில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் அவர்கள் இஸ்ரேலை சேர்ந்த முசல்லாம் என்ற அரேபியர் ஒருவரை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தனர்.

19 வயதே ஆன அவர், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில், தான் ஒரு வெளிநாட்டு போராளி என்று கூறி சேர்ந்து, இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டுக்கு வேவு பார்த்ததாக ஐ.எஸ். தீவிரவாதிகள் குற்றம் சாட்டி பிணைக்கைதி ஆக்கினர்.

ஆனால் முசல்லாம், இஸ்ரேல் உளவாளி என்ற வாதத்தை அவரது தந்தை மறுத்தார். ‘‘என் மகன் அப்பாவி.

அவன் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சித்ததால் அவனை இஸ்ரேல் உளவாளி என்று குற்றம் சாட்டுகின்றனர்.

என் மகன் துருக்கிக்கு 2014ஆம் ஆண்டு சுற்றுலா பயணியாக சென்றபோது, காணாமல் போய் விட்டான். பின்னர் அவன் சிரியாவில் உள்ள ரக்காவுக்கு சென்றது தெரியவந்தது. நாங்கள் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டோம்’’ என கூறினார்.

201503120043552348_Israeli-spy-shot-and-killed_SECVPFஇஸ்மாயில் முசல்லாம். 19வயது.

முசல்லாம் மீதான குற்றச்சாட்டை இஸ்ரேலும் மறுத்தது. அவர் தன் தனிப்பட்ட விருப்பத்தின்பேரில்தான் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்ததாக கூறியது.

ஆனால், முசல்லாம் மீதான குற்றச்சாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் உறுதியாக இருந்தனர். அதன்பிறகு அவரை சுட்டுக்கொன்று அதை 13 நிமிடம் ஓடுகிற வீடியோ படமாக எடுத்து ஒன்லைனில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் செம்மஞ்சள் நிற உடை அணிந்து காணப்பட்ட முசல்லாம், முழங்காலில் நிற்க வைக்கப்பட்டிருந்தார். அவர் தன்னை இஸ்ரேல் உளவு அமைப்பு வேவு பார்க்க தேர்ந்தெடுத்த விதம் பற்றி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்.

தொடர்ந்து அந்த வீடியோவில் காணப்படும் தீவிரவாதி ஒருவர், பிரான்சில் உள்ள யூதர்களுக்கு மிரட்டல் விடுக்கிறார்.

அதையடுத்து முழங்காலில் நின்ற முசல்லாமை 12 வயதே ஆன ஒரு சிறுவன், நெற்றிக்கு நேராக சுடுகிறான். இதில் அவர் சரிந்து விழுந்தபோது, மீண்டும் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுடுகிறான்.

இதில் அவர் உயிரிழக்கிறார்.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், ‘‘ இந்த வீடியோ பற்றி எங்களுக்கு தெரியும். ஆனால் அது உண்மையானதுதானா என்பதை உறுதிபடுத்த முடியவில்லை’’ என்றனர்.

அல்‍‍‍கொய்தா என்னும் மாபெரும் தீவிரவாத இயக்கத்தின் மூலம் சிறிய இயக்கமாக தோன்றிய இந்த ஐ.எஸ் அமைப்பு இன்று அல்கொய்தாவையும் மிஞ்சியதோடு உலகளவில் மிகப்பெரிய தீவிரவாத இயக்கமாக விளங்கி வருவது தான் சாபக்கேடு.

இந்த ஆயுதம் ஏந்திய கொடூர கும்பலிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய கடமை உலக நாடுகளின் முக்கிய பொறுப்பு என்பதை உலக தலைவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும்!!!

தீவிரவாதம் என்று எதனைச் சொல்வது என்பதை முடிவு செய்துவிடவேண்டும். காரணம் ஈராக்கில் நடப்பது தீவிரவாதச் செயலா என்பது ஒரு பெரிய கேள்விகுறி.

எழுத்தாளர் பா.ராகவன் இந்த தீவிரவாதம் பற்றி இப்படி விவரிக்கிறார் பாருங்கள்…

இந்தச் சொல், முதன் முதலில் பிரெஞ்சுப் புரட்சி சமயத்தில், அதாவது   1793ஆம் ஆண்டு காலகட்டத்தில் தோன்றியிருக்கிறது. இது புரட்சியின் காலம் என்றுதான் அர்த்தமாகிறது.

இதிலிருந்துதான் ‘டெரர்’ என்கிற ஆங்கிலச் சொல் உதித்தது. மன்னராட்சி ஒழியவேண்டும் என்று நினைப்பதே புரட்சிகரமல்லவா.

தவிர, நியாயமும் கூட. ஊரை அடித்து உலையில் போட்டு உட்கார்ந்து சாப்பிட்டுக் கொழுத்த மன்னர்களை ஒழித்துவிட்டு, மக்களாட்சியைக் கொண்டுவர நினைத்ததைத் தப்பென்று சொல்லிவிடமுடியாது அல்லவா?

ஆனால் எல்லா புரட்சிகளும் ஆரம்பத்தில் நசுக்கப்படுவதுதான் வழக்கம் என்பதற்கேற்ப, இந்த முதல்தலைமுறை பிரெஞ்சுப் புரட்சியாளர்களும் தோல்வியடையவே செய்தார்கள்.

புரட்சியாளர்கள் கொல்லப்பட்டாலும் அவர்களது துணிச்சலும் தீவிரமும் சரித்திரத்தில் நிலைத்துவிட்டது,

‘டெரர்’ என்கிற அந்தச் சொல்லைப் போலவே. மிக நல்ல அர்த்தத்தில் வைக்கப்பட்ட அந்தப் பெயரை, அதற்குப் பின்னால் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் அத்தனை பேருக்கும் உரிய பெயராக்கிவிட்டார்கள்.

ஐரோப்பா முழுதும் எங்கெல்லாம் மன்னராட்சிக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்கிறார்களோ, அவர்களையெல்லாம் டெரரிஸ்ட் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

பிற்பாடு கம்யூனிசம் தோன்றி, பரவி, சித்தாந்த பலத்துடன் புரட்சி ஒரு புதுப் பரிமாணமெடுத்து சோவியத் ரஷ்யாவில் மையம் கொண்டபோது, கம்யூனிஸ்டுகள் எல்லோரும் தீவிரவாதிகள் என்று, அப்போது ரஷ்யாவை ஆண்டுகொண்டிருந்த ஜோர்ஜ் மன்னர் அறிவித்தார்.

உலகின் முதல் மக்களாட்சி தேசம் என்கிற பெருமை கொண்ட அமெரிக்கா, இது விஷயத்தில் அப்போது வாய்மூடி இருந்தது.

இத்தனைக்கும் அமெரிக்கா அப்போது அத்தனை தீவிர கம்யூனிச எதிர்ப்பு தேசமெல்லாம் இல்லை. சொல்லப்போனால் கம்யூனிசம் அப்போது அமெரிக்கா பக்கம் கப்பல் ஏறி வந்திருக்கவே இல்லை. சும்மாதான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

எப்படியானாலும் எதேச்சாதிகாரத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், தீவிரவாதிகள். இதுதான் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகள் வரைக்குமான நிலைமை. இதைத்தான் இன்றைய ஹைடெக் தீவிரவாதிகள் தமக்குச் சாதகமான வாதமாக, இன்றுவரை உபயோகப்படுத்தி வருகிறார்கள்.

எதேச்சாதிகா ரத்துக்கு எதிரான போர். ஆதிக்க சக்திகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டம். அடக்குமுறைக்கு எதிரான துவந்த யுத்தம்.

ஆனால் இவர்கள் யோசிக்கத் தவறும் விஷயம், பிரெஞ்சுப் புரட்சியின்போதோ, ரஷ்யப் புரட்சியின்போதோ, புரட்சியின் நோக்கம் மக்களாட்சி என்பதாக மட்டுமே இருந்தது என்பதுதான்!

தவிரவும், இந்தப் புரட்சியாளர்கள் முடியாட்சிக்கு எதிராக, அமைதியான வழியில் மட்டுமே போராட்டத்தைத் தொடங்கினார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

போராட்டத்தின் உச்சகட்டக் காட்சிகள் மட்டுமே நேரடி யுத்தமாக இருந்தன. போராட்டத்தில் எந்தப் பொதுச்சொத்தும் சேதமானதில்லை என்பதும், அப்பாவி மக்கள் பலிகடாக்களாக்கப்பட்டதில்லை என்பதும், கொடூரமான கொலைவெறிக் காட்சிகள் தினத்துக்கு ஒன்றாக அரங்கேறியதில்லை என்பதும் இதன் பின்னிணைப்புகள்.

புரட்சி என்ற சொல்லின் அர்த்தமே மாறிவிட்ட காலகட்டத்தில், தீவிரவாதத்தின் பாடு குறித்துச் சொல்லவேண்டாம். அந்தக் காலத்தில் புரட்சியாளர்கள், மக்களின் ஆசியுடன், மக்கள் மத்தியிலிருந்தே தோன்றினார்கள்.

இன்றைய தீவிரவாதிகள் உருவாகக் காரணமாக, சமூக விஞ்ஞானிகள் முன்வைக்கும் காரணங்களைப் பார்த்தால் மூச்சு முட்டும். ஏழைமை. கல்வியின்மை. பசி. இவற்றின் மீது ரகசியமாக ஏற்றப்படும் மதவெறி என்கிற விஷ ஊசி.

இதன் விளைவாகப் பீறிடும் கோபத்தை அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியம்.

இந்தக் கோபம், எங்கெங்கோ மூலைகளில் எத்தனையோ பல தனிமனிதர்களுக்கு உருவாவதாகவே இருந்தாலும், இதனை ஒன்று சேர்ப்பது பெரிய விஷயமல்ல என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.

அந்தக் காரியத்தைத்தான் ஒசாமா பின்லேடன் போன்ற தீவிரவாத தலைவர்கள் திறம்படச் செய்துகொண்டிருந்தார்கள்.

ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன், நல்ல ஆள் பலம், ஆயுத பலங்களுடன் திட்டமிட்டு அரசுகளுடன் யுத்தம் புரியும் அமைப்புகளைத்தான் தீவிரவாத இயக்கங்களாகக் கருதவேண்டியிருக்கிறது.

அரசுகளுடன் யுத்தம் புரிவதாகச் சொல்வார்களே தவிர, இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பொதுமக்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், இயக்கங்களுக்கு அது குறித்தெல்லாம் கிஞ்சித்தும் கவலை கிடையாது. பொதுமக்களும் அரசுகளின் ஓரங்கம்தானே? வரி கட்டுகிறார்களல்லவா? சாகட்டும்.

இரண்டு உலகப்போர்கள் நடந்துமுடிந்து, பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும் சில கீழை நாடுகளும் நொந்து நூலாகிப் போன காலத்தில்தான், தீவிரவாதம் தன்னுடைய அடுத்த அவதாரத்தை எடுத்தது.

பல மன்னராட்சி நாடுகளில் யுத்தத்துக்குப் பிறகு ஜனநாயகம் வந்துவிட்டது. மக்கள் வரிசையில் நின்று ஓட்டுப் போடும் கண்கொள்ளாக் காட்சியைப் பரவலாகப் பார்க்க முடிந்தது.

குறிப்பாக, ஐரோப்பாவில். ஜனநாயகத்தின் சௌகரியங்கள் மக்களுக்கு அனுபவபூர்வமாகப் புரிந்துவிட்ட பிறகு, பழைய மகாராஜாக்கள் எல்லோரும் சமர்த்தாக மியூசியத்தில் போய் உட்கார்ந்துவிடவேண்டியதாகிவிட்டது.

புரட்சி செய்தவர்கள் எல்லோரும் எங்கெங்கோ செட்டில் ஆகிவிட, புதிய புரட்சியாளர்கள் நான்கு காரணங்களுக்காக ஆயுதம் ஏந்திக் களத்தில் இறங்க ஆரம்பித்தார்கள்.

அரசியல் ரீதியிலான அடக்குமுறை. மத ரீதியிலான தாக்குதல்கள். இனக்குழு ரீதியிலான ஒழிப்புநடவடிக்கைகள். பொருளாதார ரீதியிலான சுரண்டல்கள்.

இது ஒவ்வொன்றுமே மிக விரிவாகப் பார்க்கப்பட வேண்டிய விஷயங்கள். ஏனெனில் நல்லதும் கெட்டதும் கலந்து ஜனநாயகம் கொடுத்த பரிசுகளில் இவை நான்குமே மிக முக்கியமானவை.

இன்றைக்குத் தீவிரவாத இயக்கம் என்று முத்திரை குத்தப்பட்டுள்ள எந்த ஓர் அமைப்பை எடுத்துக்கொண்டாலும், மேற்சொன்ன நான்கு காரணங்களுள் ஒன்றை முன்வைத்துத்தான் அவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும்.

மத்தியக்கிழக்கு தேசங்களின் எண்ணெய் வளத்தைச் சுரண்டுவதற்காகவே அந்தப் பகுதியில் ஏதாவது காரணம் சொல்லி வந்து கூடாரம் அடித்து உட்கார்ந்து, காலி செய்ய மறுக்கும் பலம்பொருந்திய நாடுகளை விரட்டி ஒழிப்பது ஒன்றே குறி என்று சொல்லித்தான், அல்கொய்தா உருவானது. ஆனால் கடைசியில் அது சென்ற பாதை வேறு… அது வேறு கதை…

அயர்லாந்தில் பிரிட்டனின் ஏகாதிபத்தியத்தை ஒழிப்பதற்காகவே உருவானதுதான் ஐரிஷ் ரிபப்ளிகன் ஆர்மி.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலகையே உலுக்கிய ருவாண்டா இனப் படுகொலைகள் நினைவிருக்கிறதா? 80,000 அப்பாவி மக்கள் இறந்துபோனது சரித்திரத்தின் பழைய பக்கங்களாகிவிட்டது.

இதற்குக் காரணமான ‘இண்டரம்வெ’ இயக்கத்தின் செயல்களை எதனைக்கொண்டு நியாயப்படுத்த முடியும்? முன்சொன்ன நான்கு விஷயங்கள்தான். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம்.

ஒவ்வொரு சித்தாந்தம். கொள்கைகளும் கோட்பாடுகளும் வேறு வேறாக இருந்தாலும் உலகை நிரந்தர அச்சத்தில் இவர்கள் நிறுத்திவைத்திருப்பதை மட்டும் யாருமே மறுக்கமுடியாது.

என்ன செய்கிறார்கள் என்பதை விடவும், எப்படிச் செய்கிறார்கள் என்பதில்தான் விசேஷம்.

இந்த இடத்தில்தான் ஐ.எஸ். மற்றைய அமைப்புகளிலிருந்து வேறு படுகின்றது.

அவர்கள் ஏன் செய்கிறார்கள் என்பதை விட என்ன அதை எப்படி செய்கிறார்கள் என்றதில்தான் அவர்கள் மீதான கோரம் அதிகரிக்கிறது.

ஐ.எஸ். ஏன் செய்கிறது?

என்ன செய்கிறது?

எப்படி செய்கிறது?

தொடரும்…

Share.
Leave A Reply