இறுதி யுத்தத்தில்  குப்பி கடித்து வீரச்சாவடையாத எவருமே தம்மை முன்னாள் போராளிகள் என அடையாளப்படுத்த முடியாது.

போராளிகளாயின் குப்பி கடித்து வீரச்சாவடைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக நேற்று வவுனியாவில் இடம்பெற்ற சம்பந்தன் தலைமையிலான கூட்டத்தில், ஜனநாயகப் போராளிகள் என்ற அமைப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் பொழுதே அவர் இவ்வாறு தொரித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட தமிழ் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடவுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு வவுனியாவில் இடம்பெற்றது.

இச்சந்திப்பு நடைபெறுவுள்ளமையை அறிந்த ஊடகவியலாளர் வித்தியாதரன், முன்னாள் போராளிகளுக்கும் ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எமது தலைவர் சம்பந்தனிடம் முன்வைத்தார். ஆனால், தலைவர் சம்பந்தன் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன் பின்னர் எமது கட்சிக் கூட்டத்தில் முன்னாள் போராளிகளின் ஜனநாயகக் கட்சி என்ற அமைப்புத் தொடர்பில் விவாதித்தோம்.

அந்த விவாதத்தில் சிறிதரன் கருத்துத் தெரிவிக்கையில், இறுதியுத்தத்தின் பொழுது குப்பி கடித்து வீரச்சாவடையாத எவருமே தம்மை முன்னாள் போராளிகள் எனத்தொரிவிக்க முடியாது என்ற தனது கருத்தைத் தெரிவித்தார்.

அதேபோல் பிரபாகரன் மட்டுமே தமது தலைவர் எனவும் தெரிவித்தார்.

இதற்குப்  பதிலளித்த தலைவர் சம்பந்தன், தந்தை செல்வநாயகமே எல்லோருக்கும் தலைவர் எனத் தெரிவித்து இவ்விடயம் மீதான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்றனர்.

நமது பார்வையில்..

குப்பி கடித்து வீரச்சாவடையாது  சரணடைந்த 12 ஆயிரம் போராளிகளும்   யார்??

போலி “புலி வேசமும்,  போலி  தமிழ் தேசிய வாதமும்”  பேசுகின்ற சிறிதரன் போன்ற போலிகளுக்குதான்    தமிழர்கள் வாக்களிப்பார்கள்.

உண்மையான  தமிழ் தேசியவாதிகளுக்கு தமிழர்கள் வாக்களித்திருந்தால்   தமிழ் தேசியம்  எப்பவோ வென்றிருக்கும்.

 சிறிதரன் போன்ற போலிகளுக்கு வாக்களித்துவிட்டு  வானத்தை பார்த்துக்கொண்டிருக்கவேண்டியதுதான்.

சபதம்  எடுத்து  புலித்தலைவரையும்,  புலிகளையும்  அழித்த  சரத்பொன்சேகாவை  2010 ஆம்  ஆண்டு  ஐனாதிபதி தேர்தலில்  ஆதரித்து    தமிழர்களிடம்  வாக்கு  பொறுக்கிய சிறிதரன்  பிரபாகரனை  தனது  தலைவர் என்று  சொல்லுவதற்கு   என்ன தகுதியிருக்கு?

எழிலன், நடேசன், புலித்தேவன்  போன்றோர் ஏன் குப்பி கடிக்கவில்லை? அவர்களும்   போராளிகள் இல்லையா?

Share.
Leave A Reply