தங்கள் துணையிடம் அநேகமாக பெரும்பாலானவர்கள் எதிர்ப்பார்க்கும் பண்பானது உண்மை. சிலர் தங்களது உறவில் உண்மையாக இருப்பதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் கணவன் அல்லது மனைவி அல்லது இருவருமே கள்ள உறவை வைத்திருக்கலாம். ஆனால் பயப்படும் அளவிற்கு இல்லாமல் அந்த எண்ணிக்கை மிகவும் குறைவே.
முற்காலத்தில் நம் துணையால் நாம் ஏமாற்றப்பட்டால், அது மீண்டும் நடக்காமல் தடுக்க முயற்சி செய்வது முக்கியமாக கருதப்படும். இதனை மனதில் வைத்துக் கொண்டு, உண்மை என வந்து விட்டால் எந்த ராசிக்காரர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுகிறார்கள் என்பதைப் பார்க்கலாமா? இதை பார்க்கும் போது யார் அதிகமாக ஏமாற்றுகிறார்கள் என்பதையும் பார்க்க தானே வேண்டும்.
12 ராசிக்காரர்களுக்கான பொதுவான வழிமுறைகளைப் பற்றி தான் நாம் பேசப் போகிறோம். ஆனால் இவை விளக்கமானவை அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் காதல் அல்லது பொருத்தத்தைப் பற்றி, ஜோதிடம் குறித்து நல்ல ஞானத்தை கொண்டவரிடம் சென்று துல்லியமான அறிவுரையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
மேஷம்: அந்தளவிற்கு நம்ப முடியாது
சார்பில்லாமல் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களான இவர்கள் தங்கள் செயல்களுக்கான விளைவுகளை முழுமையாக கருதுவதற்கு முன்னதாகவே செயல்பட தொடங்கி விடுவார்கள். துணிகரமான செயல்களின் மீது தீராத பசியை கொண்டவர்கள் இவர்கள்.
அதனால் பல காதலர்களையும் பல உறவுகளையும் கொண்டிருப்பவர்கள் இவர்கள். உங்கள் துணையானவர் மேஷ ராசிக்காரர் என்றால், நீங்கள் திடமாக, செயல்களுக்கு தயாராக, ஆச்சரியங்களை எதிர்நோக்கி இருக்க வேண்டும். தொடர்ச்சியான காலத்திற்கு ஒரே அமைவுமுறையில் ஒட்டி கொண்டு வாழ்வதை அவர்கள் வெறுப்பார்கள்.
அதனால் உங்களது மேஷ ராசி துணை உங்களுடன் எப்போதும் நெருக்கமாக இருக்க வேண்டுமென்றால், காலத்திற்கேற்ப அவ்வப்போது மாற்றங்களை கொண்டு வாருங்கள். அவர்கள் வேகத்திற்கு உங்களால் ஈடுகொடுக்க முடியாமல் போகும் போது தான் அவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள்.
திருமணம் அல்லது அது சார்ந்த உறவு தடைகளும் இதில் அடக்கம். சில ரிஷப ராசிக்காரர்களால் தங்கள் உறவை கைவிட கஷ்டமாக இருக்கும். அதற்கு காரணம் தாங்கள் விரும்புபவர்கள் தங்களையும் அதே போல் காதலிக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். ஒரு வேளை நீங்கள் அவர்கள் மீது சந்தேகப்பட்டால் அவர்கள் உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது.
மிதுனம்: அந்தளவிற்கு நம்ப முடியாது இந்த இரட்டையர் ராசிக்காரர்கள் துணிச்சல் மிக்கவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள். உற்சாகத்துடன் இருப்பதை நம்பும் இவர்கள் சில நேரங்களில் ஆபத்தானவர்களாகவும் திகழ்வார்கள். குறும்புக்காரர்களான இவர்கள் விளையாட்டு விளையாடுவதை விரும்புவார்கள. மனதோடு விளையாடும் விளையாட்டையும் சேர்த்து.
மிதுன ராசிக்காரருடன் நீங்கள் டேட்டிங் செய்தால், இரட்டையர் ராசிக்காரரான அவர் ஏழரையை இழுத்து விடுவார். ஒரு துணைக்கு மேலானவர்களை மாற்றிக் கொள்ளும் திறனை படைத்தவர்கள் இவர்கள். மேலும், உறுதியில்லாதவர்கள் இவர்கள்.
அதனால் ஒரு காதலை வந்த வேகத்தில் கழற்றி விடக்கூடியவர்கள். நீங்கள் அமைதியானவரா, நெகிழ்வு தன்மை இல்லாதவரா, அல்லது குறை கூறுபவரா? அப்படியானால் உங்களை ஒரு மிதுன ராசிக்காரர் விரும்புவது பெரிய அதிசயம் தான். உடல் ரீதியான அல்லது மன ரீதியான அல்லது உணர்ச்சி ரீதியான நிலையான தூண்டுதலே அவர்களுக்கு தேவையானது.
கடகம் : முழுமையான நேர்மை
இந்த ராசிக்காரர்கள் ஏறுமாறான, பாதுகாப்பின்மை அற்ற, குடும்ப பற்று சார்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் வீட்டையும், குடும்பத்தையும் தான் பெரிதும் விரும்புவார்கள். ஆழமான உணர்ச்சி ரீதியான பந்தம் இல்லாதவரை அவர்கள் சந்தோஷமாக இருக்க மாட்டார்கள். உறவில் இருக்கும் போது கிடைக்கும் பாதுகாப்பு உணர்வை தான் அவர்கள் பெரிதும் நம்புவார்கள்.
அதனால் தங்களின் துணையை உடனடியாக தன் குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதுவார்கள். உணர்ச்சி ரீதியான வலியால் அவர்கள் மூழ்கும் உணர்வை பெற்றாலே ஒழிய, கடக ராசிக்காரர்கள் தங்களின் உறவை அவ்வளவு சுலபத்தில் உடைக்க மாட்டார்கள். தங்களுக்கும் தங்களின் துணைக்கும் இடையே ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தீர்க்கவே அவர்கள் முற்படுவார்கள். உங்கள் நம்பிக்கையை ஒரு போதும் அவர்கள் பாழாக்க மாட்டார்கள்.
சிம்மம்: அந்தளவிற்கு நம்ப முடியாது
காட்டின் ராஜாவான இவர்கள் பல்வேறு காதலர்கள் மற்றும் உறவுகளை கொண்ட நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பார்கள். சிம்மம் என்பது கச்சிதமான ராசிக்காரர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். சரியான துணைக்காக எதிர்ப்பார்ப்பவர்கள் இவர்கள்.
துரதிஷ்டவசமாக சில உறவுகள் கச்சிதமாக அமையும். ஆனால் அந்த உறவு தனக்கு ஒத்து வராது என சிம்மராசிக்காரர் நினைத்து விட்டால், வளமுள்ள நிலத்திற்கு அவர் எளிதில் தாவி விடுவார். இவர்களின் நம்பிக்கைக்கு விலையுண்டு – இவர்களுடனான உறவில் நீங்கள் நீடிக்க வேண்டுமானால் இவர்களின் பெருமையை நீங்கள் அடிக்கடி பாராட்டியாக வேண்டும். சுலபமாய் நாடகத்தை நடத்துபவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். அதனால் உங்கள் காதலை அவர்களிடம் நிரூபிக்க நீங்கள் என்ன தான் ஒற்றை காலில் நின்றாலும், லேசில் மசிய மாட்டார்கள் இவர்கள்.
மீனம்: அந்தளவிற்கு நம்ப முடியாது மிகவும் உணர்ச்சி பூர்வமான ராசிக்காரர்கள் தான் மீன ராசிக்காரர்கள். மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் உள் உணர்வுகளோடு போரிடுவார்கள். மீன ராசிக்காரர்கள் இரட்டை பண்புடையவர்கள் – அதாவது மொத்த துறவி அல்லது மொத்த பாவிகள். மீன ராசிக்காரர்கள் தங்களது சொந்த கற்பனை உலகத்தில் வாழ்வார்கள். அதனால் நிஜ உலகின் தேவைகளை கையாளுவதில் அவர்கள் சிரமப்படுவார்கள். இதில் உறவுகளும் அடக்கம். காதலரோ அல்லது உறவோ தங்களின் கற்பனை தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் அவர்கள் சுலபத்தில் ஏமாற்றம் அடைவார்கள். தங்கள் அலைவரிசைக்கு ஒத்துப்போகிறவர்களுடன் தான் அவர்களின் கவனம் நீடித்து நிற்கும்.