வீடுகள் எரிந்தன:

1983  மே மாதம் மந்த கதியில் நடந்துகொண்டிருந்த  உள்ளூராட்சி  தேர்தல்.

கந்தர்  மடத்தில் உள்ள தேர்தல் சாவடியின் முன்பாக சைக்கிள்களில் வந்திறங்கினார்கள் புலிகள்.

கந்தர் மடம்  சைவப்பிரகாச வித்தியாசாலையில் தான் தேர்தல் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

வாக்களிப்பு முடிவடைவதற்கு  ஒரு மணிநேரம் மட்டுமே  இருந்தது.

சைவப்பிரகாச வித்தியாசாலையின் மதில்  புலிகளுக்கு பாதுகாப்பு அரணாக மாறியது. துப்பாக்கிகள் முழங்கத் தொடங்கின. உள்ளே காவலுக்கு நின்ற பொலிசாரும், இராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினார்கள்.

சுமார் 15 நிமிடங்கள் மோதல் நீடித்தது.  புலிகளின் கை  மேலோங்கத் தொடங்கியது. படையினர்கள் சிலர் தப்பியோடத் தொடங்கினார்கள்.

கோப்ரல்  ஜயவர்த்தனா  கொல்லப்பட்டார். கோப்பிரல் பண்டார, கொன்ஸ்டபிள் திலகரட்ண  ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இயந்திர துப்பாக்கிகளை  கைப்பற்றிக்கொண்டு  புலிகள் விரைந்து சென்றனர்.  இத்தாக்குதலில்  துணிச்சலாக செயல்பட்டதன்  மூலம்  கிட்டு கவனத்துக்குரியவராக மாறினார்.

kiduuaa1981 ஆம் ஆண்டு மார்ச் 25ம் திகதி  நடைபெற்ற  நீர்வேலி  வங்கிகொள்ளை நடவடிக்கைதான் கிட்டு பங்குகொண்ட  முதலாவது முக்கிய  நடவடிக்கையாகும்.  அதில் காரோட்டியாக இருந்தார் கிட்டு.

எனினும்  கந்தர் மட தாக்குதலில்தான் கிட்டுவின் முத்திரை பதிந்தது.  கந்தர்  மட  தாக்குதலை அடுத்து விரைந்து வந்த பொலிசார்  வெறியாட்டம் நடத்தினார்கள்.

அருகிலிருந்த வீடுகளை  தீயிட்டுக் கொழுத்தினார்கள்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களும், ஈழமாணவர் பொதுமன்றத்தினரும்  தீக்கிரையான  வீடுகளுக்கு  யாழ்பாணத்தில் நிதிசேகரித்து  நிவாரண நடவடிக்கைகளை  மேற்கொண்டணர்.

யாழ் பல்கலைக்கழக   மாணவர் அவை  புலிகளது  மறைமுகமான  கட்டுப்பாட்டிலிருந்தது. மாணவர் அவை தலைவராக  இருந்த இராஜநாயகம் பின்னர்  புலிகளது முக்கிய தலைவராக விளங்கினார்.

தற்போது  புலிகளிலிருந்து விலகி வெளிநாட்டில் வசிக்கின்றார்.

“ஹிட்  அண்ட் றன்”

தாக்கிவிட்டு  ஓடும் புலிகளது  கொரிலா நடவடிக்கைகளை  ஈழ மாணவர் மன்றம் விமர்சனம் செய்தது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைமறைவு அமைப்பாக இயங்கியது. அதன் உறுப்பினர்கள்  ஈழமாணவர் பொதுமன்றம் என்ற பெயரில்  பகிரங்கமான  அரசியல் வேலைகளில் ஈடுபட்டனர்.

ஈ.பி.ஆர்.எல். எஃப்  மத்திய கமிட்டி உறுப்பினராக  அப்போதிருந்தவர்  குணசேகரன்.

அவரது பொறுப்பின் கீழ்  சிறிதரன், ரமேஷ், தயாபரன், சேகர், செழியன், சிவா, குமார், ஜயா, டேவிற்சன் ஆகியோர்  இலங்கையில்   ஈ.பி.ஆர்.எல். எஃப்   வேலைகளை   83 இல்  முன்னெடுத்துக்கொண்டிருந்தனர்.

இவர்களில் சிறிதரன்  தற்போது   ஈ.பி.ஆர்.எல். எஃப்  அமைப்பிலும்  ஈ.பி.டி.பி அமைப்பிலும்  இருக்கின்றனர்.

ஈ.பி.ஆர்.எல். எஃப்  மத்திய குழு உறுப்பினராகவும், மக்கள் விடுதலைப்படை   தளபதியாக இருந்த  டக்ளஸ் தேவானந்தா  83ம் ஆம்  ஆண்டு வெலிக்கடை சிறையில் இருந்தார்.

அமரர்  பத்மநாபா  தமிழ் நாட்டில்  தங்கியிருந்தார்.  சுரேஸ் பிரேமச்சந்திரன்  இந்திய பிரதிநிதியாக இருந்தார்.

இயக்கம்  வளரவேண்டுமானால்  தாக்குதல்  நடவடிக்கைகள், அரச நிதிநிறுவனங்களில்  நிதி பறிப்புக்கள்  போன்றவற்றில்  ஈடுபடவேண்டும்  என்று   டக்ளஸ் தேவானந்தா  வலியுறுத்தினார்.

அதனை பத்மநாபா ஏற்றுக்கொள்ளவில்லை.

அம்பாறை  மாவட்டத்தில்  நடைபெற்ற திருக்கோவில்  வங்கி கொள்ளை   நடவடிக்கை காரணமாக     டக்ளஸ் தேவானந்தா  கைதுசெய்யப்பட்டு  சிறையில் இருந்தார்.

புலிகளது   “ஹிட்  அண்ட்  றண்”   எனப்படும்  தாக்கி  விட்டு  ஓடும்   தந்திரோபாயம்   தவறானது.

புலிகள்  தாக்கி விட்டு  ஓடிவிடுவார்கள்.  படையினரால்   மக்கள் தாக்கப்படுவார்கள் என்பதே   ஈ.பி.ஆர்.எல். எஃப்  அமைப்பின்  விமர்சனமாக முன்வைக்கப்பட்டது.

புளொட் அமைப்பினரும்   “ஹிட்  அண்ட்  றண்”   தந்திரோபாயத்தை கடுமையயாக  சாடினார்கள்.

புளொட்  தலைவர் அமரர் உமா மகேஸ்வரன்  “மக்கள் யுத்தம்” என்ற கருத்தை முன்வைத்தார்.

வங்கிகளில் நிதிப் பறிப்பு  நடத்தக்கூடாது  என்று  ஈ.பி.ஆர்.எல். எஃப்  சொல்லிக்கொண்டிருந்தது.

மதிய சாப்பாட்டுக்கு கூட  அதன் உறுப்பினர்கள் கஸ்ரப்பட்டுக்கொண்டிருந்தனர்.

விமர்சனமும்- நட்பும்

வீடு  வீடாக நிதி திரட்டுவதில்  ஈ.பி.ஆர்.எல். எஃப்  உறுப்பினர்கள்  ஈடுபட்டிருந்தனர்.  அப்போது  ஒரு சம்பவம்.

யாழ்பாணம் உரும்பிராயில்  உள்ள வீடென்றுக்கு  நிதி திரட்டச் சென்றார்கள்.  ஒரு ரூபாய்  குத்தியை  தூக்கி முகத்தில்  எறிந்துவிட்டு  “வெளியே போங்கள்”  என்றார்  வீட்டுக்காரர்.

“இவ்வாறு  நிதி  திரட்டி  இயக்கத்தை கட்டி எழுப்ப முடியாது.  அனுமதி தாருங்கள்.  நிதி  எடுத்துக் காட்டுகிறோம்” என்று கேட்டனர்கள்  உறுப்பினர்கள். ஆனால் அனுமதி  கொடுக்கவில்லை  தலைமை.

பிரசுரங்கள் வெளியிடவும், பத்திரிகை  அச்சிடவும்  பணம் வேண்டுமே  பலரிடம் கடனாக பெற்றுக்கொண்டனர்.

அவ்வாறு  கடன் கொடுத்தவர்களில்  ஒருவர் பல்கலைகழக  மாணவர் அவை தலைவர் இராஜநாயகம்.

புலிகளது  நடவடிக்கைகளை  ஈ.பி.ஆர்.எல். எஃப்  கடுமையாக   விமர்சித்தது.  அதேவேளை  இரண்டு  அமைப்பு உறுப்பினர்களும்  பரஸ்பரம்   நட்பும் மதிப்பும்  கொண்டிருந்தனர்.

இது ஆரம்ப  காலகட்டத்தில்  நிலவிய   புரிந்துணர்வுக்கு  எடுத்துக் காட்டாகும்.
பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தின் பின்னர்   புளொட் தலைவர்கள்  உமா மகேஸ்வரன், கண்ணன்  ஆகியோர் சென்னையில்  உள்ள   ஈ.பி.ஆர்.எல். எஃப் அலவலகத்தில் தங்கியிருந்தனர்.

தங்கத்துரை ஒருமுறை  காயமடைநதபோது  உமாமகேஸ்வரனது  யாழ்பாணத்து வீட்டில் தங்கி  சிகிச்சை  பெற்றார். இவை இன்று காணமுடியாத நட்புறவுகள்.

“ஹிட்  அண்ட்  றண்“  நடவடிக்கைகள் குறித்து  எழுந்த  விமர்சனங்களை   புலிகள்  ஒரு பொருட்டாக     எடுத்துக்கொள்ளவில்லை.

“எந்த  எதிரி  எம்மைப்   போராட நிர்ப்பந்திதானோ  அந்த   எதிரி மூலமே  எம்மை பலப்படுத்திக்கொள்வது” என்பதுதான் புலிகளது கருத்து.

படையினர்  பொதுமக்களை   தாக்கும்போது  அவர்கள் ஆயுதப்போராட்டத்தை  ஆதரிப்பர். கெரிலாக்களை  சுற்றி  திரளுவார்கள்.

கெரிலாக்களது  துப்பாக்கி  வேட்டுக்கள்  மக்களை  தட்டி எழுப்பும்.  கெரில்லா  நடவடிக்கைகளின் விளைவுகள்  மக்களை அணிதிரட்டும்.  என்பதே  புலிகளது  நம்பிக்கையாக இருந்தது.

கந்தர் மடம்   தாக்குதலை  அடுத்து   பாரிய தாக்குதல்  ஒன்றுக்கு  புலிகள்  திட்டமிட்டனர். பிரபாகரனது  நேரடியான   பங்களிப்போடு  தாக்குதலுக்கான  திட்டம்  வகுக்கப்பட்டது.

மீண்டும் செல்லக்கிழி

 

selvakili copieபுலிகளிலிருந்து விலகிப்போய் பம்பாயில் வியாபாரத்தில்  ஈடுபட்டிருந்தவர்  செல்லக்கிளி.  பாண்டி பஜார்  துப்பாக்கி  சம்பவம் காரணமாக  கைது செய்யப்பட்டு விடுதலையான பிரபாகரன்  மதுரையில் தங்கியிருந்தார்.

பிரபாகரனை   பார்ப்பதற்காக  மதுரைக்கு வந்தார்  செல்லக்கிளி.  தமிழ்  நாட்டு பொலிசாருக்கு  “டிமிக்கி” கொடுத்துவிட்டு  யாழ்பாணம் செல்லப்போகும் திட்டத்தை கூறினார்   பிரபாகரன்.

அவ்வாறு  பிரபாகரன்  யாழ்பாணம்  சென்றால்  தானும் வந்து  இணைந்துகொள்வேன்  என்று கூறிவிட்டு, கை  துப்பாக்கி  ஒன்றை  பிரபா கொடுத்துவிட்டு பம்பாய் சென்றார்   செல்லக்கிளி.

பிரபாகரன்  யாழ்பாணம்  வந்து  சேர்ந்துவிட்டார். கொடுத்த வாக்கின்படி  செல்லக்கிளியும் வந்து சேர்ந்தார்.

பிரபா வந்தது படகு மூலம். ஆனால்..  செல்லக்கிழி  வந்தது  விமானம் மூலம்.

பிரிட்டன் கடவுச் சீட்டு  ஒன்றின்  மூலமாக  பிரிட்டன்  பிரஜையாக  கொழும்பு  விமான  நிலையத்தில்  வந்திறங்கினார் செல்லக்கிளி. செல்லக்கிளி  வாகனங்களை செலுத்துவதிலும்  தாக்குதல் நடவடிக்கைகளிலும்  துணிச்சலானவர்.

தனது சகோதரர்  செட்டி எனப்படும்  தனபாலசிங்கத்தின் கொலைக்கு பிரபாவே காரணம் என்று செல்லக்கிளிக்கு தெரியும்.

ஆனாலும்   இயக்க   இரகசியங்களை   வெளியிட்ட  செட்டி  கொல்லப்பட வேண்டியவரே என்பதில் செல்லக்கிழிக்கு கருத்து பேதம் கிடையாது.  செல்லக்கிழியின் இலச்சிய   பற்றுக்கு இது ஒரு உதாரணம்.

தாக்குதல்   நடவடிக்கைக்கு   தலைமை  தாங்கும் பொறுப்பு  செல்லக்கிளியிடம்  ஒப்படைக்கப்பட்டது.  செல்லக்கிளியிடம் பொறுப்பை ஒப்படைத்த  பிரபாகரன்  தாக்குதல்  நடவடிக்கையில்  தானும் கலந்து கொள்ள முன் வந்தார்.

kalavaram

அவசரகால சட்டம்

கந்தர் மடம்  தாக்குதலை  அடுத்து  ஜே.ஆர். அரசு  அவசரகாலச்   சட்டவிதிகளை   அமுலுக்கு கொண்டு வந்தது.

பயங்கரவாதிகள்  என்று  சந்தேகிக்கப்பட்டவர்களை   சுட்டுத்தள்ளவும், கொல்லப்பட்டவர்களை  நீதி மன்ற விசாரணை இன்றி   புதைத்து விடவும்  இராணுவத்தினர் அதிகாரம் பெற்றனர்.

வவுனியா நகர் இராணுவத்தினர் மூட்டிய  தீயில் பற்றி எரிந்தது.

திருகோணமலையில்  கொலை, கொள்ளை, கற்பழிப்பு  நடவடிக்கைகள்  காடையர்களால்  நடத்தப்பட்டன.  இராணுவத்தினர்கள் காடையர்களுக்கு உதவினார்கள்.

ஜே.ஆர்.ஆவணம்

இந்தச் சம்பவங்களின்    பின்னர்  பிரிடிஷ்  பத்திரிகை  ஒன்றுக்கு   ஜே.ஆர்.ஜயவர்த்தனா பேட்டியளித்தார். அவர் சொன்னது இது..

“தமிழர்களின் உயிரை பற்றியோ, தமிழர்கள்  எங்களை பற்றி  என்ன நினைக்கிறார்கள்  என்பது பற்றியோ  எனக்கு எந்தவிதமான அக்கறையுமில்லை” இவ்வாறு  அகம்பாவத்தோடு   அறிவித்தார்.

இதெற்கெல்லாம்  பதிலடியாகவே  பாரிய  தாக்குதல்  திட்டம் புலிகளால் வகுக்கப்பட்டது.

1986 யூலை 23ம் திகதி  யாழ்பாணம்   திருநெல்வேலியில் உள்ள  பலாலி வீதியில் செல்லக்கிளி  தலைமையில்  பிரபாகரன்  உட்பட புலிகள்  காத்திருந்தனர்.

தாக்குதல் குழுவில்  மொத்தமாக   14பேர் இருந்தனர்.

பாதையில்  நிலக்கண்ணிவெடிகள்  புதைக்கப்பட்டிருந்தன. தாக்குதல்  பிரிவினர்  பாதையின் இரு புறமும்  பிரிந்து  ஆயுதங்களோடு தயாராய்  நின்றனர்.

வழக்கம்போல்  நள்ளிரவு  ரோந்துக்கான  இராணுவ   படையினர்  ஒரு  “ட்ரக்”  வண்டியிலும்  ஜீப்பிலுமாக   வந்துகொண்டிருந்தனர்.  நிலக்கண்ணி வெடி புதைக்கப்பட்ட இடத்தில்  ‘ஜீப்’ வண்டி வந்து சேர்ந்தபோது  நிலக்கண்ணி வெடித்து  “ஜீப்”  தூளாகியது.

‘ஜீப்’  வண்டி சிதறியதை கண்டு  பின்னால் வந்த    “ட்ரக்”  வண்டி நிறுத்தப்பட்டது.  அதில்  இருந்த   இராணுவ  வீரர்கள்  குதித்து  தப்பியோட முயன்றனர்.

வீதியின்   இருபுறமும்  தயாராக   நின்ற  கெரில்லாக்கள் தாக்குதலை ஆரம்பித்தனர்.  இராணுவ வீரர்கள் சிலர்  “ட்ரக்”  கீழே  பதுங்கியிருந்து  சுடத்தொடங்கினார்கள்.

ஒரு தோட்டா  புலிகளது   தாக்குதல்   பிரிவுத் தலைவர்  செல்லக்கிளியின் மார்பில் பட்டது.

செல்லக்கிளி பலியானார். 13 இராணுவத்தினர்  கொல்லப்பட்டனர்.

நள்ளிரவில் கச்சிதமாக   திட்டமிட்டு   நடத்திய   அத் தாக்குதல்  கெரில்லா  போராட்டத்தில்   ஒரு  திருப்பமாக அமைந்தது.

தாக்குதலை முடித்துக்கொண்டு  கைப்பற்றிய ஆயதங்களோடு  புலிகள்  தப்பிச் சென்றனர்.

தாக்குதல் செய்தியை   அறிந்து  சம்பவம் நடந்த இடத்துக்கு வந்தனர்  இராணுவத்தினர். வரும்போதே  சகல   திசைகளிலும்  கண்மூடித்தனமாக  சுட்டுக்கொண்டே  வந்தனர்.

திருநெல்வேலிப்பகுதியில்  இருந்த வீடுகள்  சிலவற்றின்  மீதும்  துப்பாக்கி  பிரயோகம்  நடத்தப்பட்டது.

வீடுகளுக்குள்  புகுந்து  கண்மூடித்தனமாக  சுட்டனர்.  தமிழர்கள் பல கொல்லப்பட்டனர்.

வெடித்தது கலவரம்

யூலை 24 ம் திகதி விடிந்தபோது   திருநெல்வேலி பகுதியில்  மரண ஓலங்கள் தான் கேட்டுக்கொண்டிருந்தன.

நாடெங்கும்   திருநெல்வேலி   தாக்குதல் செய்தி பரவியது. அதனோடு  சோ்ந்து  இனக்கலவரமும்  வெடித்தது.

கொழும்பில் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.  வீடுகள்   தீக்கிரயைாக்கப்பட்டன.

வெலிக்கடை  சிறைக்குள்  இருந்த  போராளிகளுக்கு எதிராக   ஒரு சதிதிட்டம் உருவாகியது.

(எழுதுவது அற்புதன்
தொடர்ந்து வரும்)

 

கூட்டணி வேட்பாளர்கள் மீது புலிகளின் வேட்டுகள் பாய்ந்தன!! (அல்பிரட் துரையப்பா முதல் காமனி வரை -19)

 

l-e1413102732467
செல்லக்கிளி அம்மான் ஒரு மரத்தின் கொப்புகளுக்குள் உப இயந்திர துப்பாக்கியுடன் குறிபார்த்தபடி நிற்கும் படம் இந்த பயிற்சியின்போதுதான் எடுக்கப்பட்டது)

Share.
Leave A Reply