அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜராகும் பவானிசிங்கை நீக்க வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் ஜனவரி 28-ம் தேதி மீண்டும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்து, அது 2.2.2015ல் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா மற்றும் நீதிபதி அசோக் பி.ஹிஞ்சிகேரி என இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அன்பழகன் தரப்பில் நாகேஷும், தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் சார்பில் ராவும், பவானிசிங் சார்பில் செபாஸ்டீனும், கர்நாடக அரசு சார்பாக தலைமை நீதிபதி ரவிவர்மகுமாரும் ஆஜரானார்கள்.
செபாஸ்டீன்: இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கீழ்நீதிமன்றத்தில் அவர்தான் அரசு வழக்கறிஞராக இருந்து வழக்கை திறம்பட நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த மனு மீது பதிலளிக்க கால அவகாசம் வேண்டும்.
வகேலா: (தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்கறிஞர் ராவ்வைப் பார்த்து) இந்த வழக்கின் அப்பீல் விசாரணையில் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அரசு வழக்கறிஞரை நீங்கள் நியமித்து வழக்கை நடத்தி வருகிறீர்கள்?
ராவ்: சி.ஆர்.பி.சி 24(8)-ன் அடிப்படியில் பவானிசிங்கை நாங்கள் நியமிக்கும் அதிகாரம் உள்ளது. இந்த வழக்கின் புகார்தாரர்கள் நாங்கள்தான். எங்கள் சார்பில் வாதிட யார் ஆஜராக வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை எங்களுக்குத்தான் இருக்கிறது.
வகேலா: சி.ஆர்.பி.சி 24(1)-ன்படி கிரிமினல் வழக்கை ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு மாற்றம் செய்யும்போது எந்த மாநிலத்துக்கு மாற்றப்படுகிறதோ அந்த மாநில அரசுதான் அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது.
நாகேஷ்: உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லி இருக்கிறது. இவ்வழக்கின் அரசு வழக்கறிஞரை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசனை செய்துதான் கர்நாடக அரசு நியமிக்க வேண்டும். அரசு வழக்கறிஞரை தமிழக அரசு நியமிக்க உரிமை இல்லை.
ராவ்: ஒருவேளை இந்த வழக்கில் கீழ்நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்திருந்தால், அதை எதிர்த்து நாங்கள்தான் அப்பீலுக்குச் சென்றிருப்போமே தவிர, கர்நாடக அரசு அப்பீலுக்குப் போகாது. அதனால் எங்கள் தரப்பு வழக்கறிஞரை நியமிக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது.
நாகேஷ்: தமிழ்நாட்டில் சங்கராச்சாரியார் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாண்டிசேரிக்கு மாற்றலாகியது. அதில் சங்கராசாரியார் விடுதலை ஆனார். அதை எதிர்த்து பாண்டிசேரி அரசு அப்பீல் செல்லவில்லை.
வகேலா: மணிப்பூரில் ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்டால், அந்த வழக்கின் அரசு வழக்கறிஞராக மணிப்பூர் வழக்கறிஞரை நியமிக்க முடியுமா?
நாகேஷ்: 2004ல் இவ்வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்ட போதும், தற்போது அப்பீல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதும் தமிழ்நாட்டில் குற்றவாளிகள் சார்ந்துள்ள அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருக்கிறது. அதனால், இவ்வழக்கில் அரசியல் தலையீடு இருக்கிறது.
வகேலா: இங்கு அரசியலைத் தொடர்புபடுத்த வேண்டாம். (கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமாரைப் பார்த்து) இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?
ரவிவர்மகுமார்: நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தத் தயாராக உள்ளோம்.
ராவ்: இவ்வழக்கு 19 நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஏ1-ன் வாதமும் முடிந்துவிட்டது. ஏ2-வின் வாதம் நிறைவுபெறும் நிலையில் இருக்கிறது. உச்சநீதிமன்றமும் மூன்று மாதத்தில் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இப்படி ஒரு பிரச்னை எழுப்புவது சரியில்லை.
வகேலா: அதற்காக சட்ட விதிமுறைகள் மீறி செயல்பட அனுமதிக்கலாமா? இருப்பினும், இது முக்கியமான வழக்கு என்பதால் அன்பழகன் தரப்பு, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை மற்றும் கர்நாடக அரசு துறைகளின் கருத்துகளை சுருக்கமாக எழுத்துபூர்வமாக தாருங்கள். நாளை தீர்ப்பு வழங்கிவிடலாம்.
பவானிசிங்குக்குப் பதில் நாராயணரெட்டி இருக்கிறார்!
செபாஸ்டீன்: பவானிசிங்கை நீக்கக்கோரி அவர்கள் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றபோது நீதிபதிகள் கண்டித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீதிபதி: உச்சநீதிமன்றம் பவானிசிங்கை நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவு கீழ்நீதிமன்றத்துக்கு மட்டும்தான். அந்த உத்தரவு நகலை படித்து பாருங்கள்.
ராவ்: சி.ஆர்.பி.சி 24(8)-ன்படி அரசு வழக்கறிஞர் பவானிசிங் கீழ்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் செய்தார். அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேல்முறையீடு மனுவுடன் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனு தாக்கல் செய்தனர்.
அப்போது தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பில் ஆஜராகி வாதிட 29.9.2014ல் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது. அதை ஆதாரமாக வைத்து வாதிட்டு வருகிறார். இந்த வழக்கில் நாங்கள் புகார்தாரர் என்ற அடிப்படையில் அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் எங்களுக்கு உள்ளது.
இவ்வழக்கில் ஆச்சார்யா இருந்தபோது எதிர்தரப்பு சார்பில் பல்வேறு மனுக்களை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பாக ஆஜராகி வாதிட்டிருக்கிறார்.
அதேபோல பவானிசிங்கும் மேல்முறையீட்டில் ஆஜராகி இருக்கிறார். நாங்கள் சட்ட விரோதமாக இவ்வழக்குக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரை நியமிக்கவில்லை. கீழ்நீதிமன்றத்தில் இவ்வழக்கை கையாண்ட வழக்கறிஞரைதான் நியமித்து இருக்கிறோம்.
நீதிபதி: கர்நாடகாவில் நடைபெறும்போது அரசு வழக்கறிஞரை தமிழக அரசு நியமனம் செய்வது தவறு இல்லையா? அரசு வழக்கறிஞரை நியமனம் செய்ய என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் முன்னுதாரணமான வழக்குகள் இருக்கிறதா?
ராவ்: (சற்று மௌனத்துக்குப் பிறகு) இந்த வழக்கு மேல்முறையீட்டு விசாரணையில் ஏ1 வாதம் நிறைவு பெற்றது. அடுத்து ஏ2 வழக்கறிஞர் வாதிட்டு வருகிறார். இன்று வரை 20 நாட்கள் விசாரணை நடந்து முடிந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் பவானிசிங்கை நீக்கினால் வழக்கு பாதிக்கப்படும்.
நீதிபதி: (ரவிவர்மகுமாரைப் பார்த்து) நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
ரவிவர்மகுமார்: இவ்வழக்கு முழுக்க முழுக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெறுகிறது. இதில் கர்நாடக அரசுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. ஆனால் சி.ஆர்.பி.சி 24(1)-ன்படி ஒரு வழக்கு எந்த மாநிலத்தில் நடைபெறுகிறதோ, அந்த மாநில அரசுக்குதான் அவ்வழக்கின் அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் உள்ளது என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி பார்க்கும்போது தமிழக அரசின் அனுமதியுடன் பவானிசிங் ஆஜராகி வருவது சட்டத்துக்குப் புறம்பானது.
நீதிபதி: கர்நாடக அரசு இவ்வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்காதபோது அரசு வழக்கறிஞர் ஆஜராகி இருப்பது சட்டத்துக்குப் புறம்பானது. அவரை மாற்றிவிட்டு வேறு யாரையாவது நியமினம் செய்யும் யோசனை அரசிடம் உள்ளதா?
ரவிவர்மகுமார்: பவானிசிங் இல்லாத பட்சத்தில் அரசு மூத்த சிறப்பு வழக்கறிஞர் நாராயணரெட்டியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதை அரசு தன்னிச்சையாக செய்யத் தயாராக இல்லை.
நீதிபதி: பவானிசிங்கை நீக்கினால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து மூன்று தரப்பினரும் தங்கள் கருத்துகளை உணவு இடைவேளைக்குப் பிறகு தாருங்கள்.
நீதிபதி சாதகமான தீர்ப்பை வழங்க மாட்டார்!
உணவு இடைவேளைக்குப் பிறகு…
செபாஸ்டீன்: பவானிசிங் நியமனம் சட்டப்படி சரியில்லை என்று அன்பழகன் தரப்பு புகார் கொடுத்ததை அடுத்து, 23.9.2013ல் பவானிசிங்கை நீக்குவதற்கு நீங்கள்தான் உத்தரவு பிறப்பித்தீர்கள். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மீண்டும் இவ்வழக்கின் அரசு வழக்கறிஞராக ஆஜரானார்.
அதனால், மீண்டும் இதே வழக்கை நீங்கள் விசாரித்தால் ஒருதலைபட்சமாக இருக்கும் என்பதால், வேறு பெஞ்சுக்கு வழக்கை மாற்ற வேண்டும்.
நீதிபதி: என் மீது சந்தேகம் எழுப்பி மெமோ கொடுத்துள்ளதால், நான் தொடர்ந்து விசாரிப்பது சரியில்லை. அதனால் வேறு அமர்வுக்கு பரிந்துரை செய்கிறேன்.
உண்மையான புகார்தாரர் நான்தான்!
மேல்முறையீட்டு மனு விசாரணை நடைபெற்று வரும் கோர்ட் ஹால்…
நீதிபதி குமாரசாமி வருவதற்கு முன்பே சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்துக்கு வந்து அமர்ந்திருந்தார். நீதிபதி 10.30 மணிக்கு தன் இருக்கையில் அமர்ந்ததும், தன்னை 3-ம் தர வாதியாக இணைத்துக்கொள்ள வேண்டும் என வாதிட்டார்.
சு.சாமி: இந்த வழக்கின் முதல் புகார்தாரர் நான்தான்.
நீதிபதி குமாரசாமி: உங்கள் வாதத்தைத் தொடங்கலாம்.
சு.சாமி: ஜெயலலிதா 91-96 வரை தமிழக முதல்வராக இருந்தார். அப்போது தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைக் குவித்தார். அது எனக்குத் தெரியவந்தது.
அதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதன் அடிப்படையில்தான் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி வாதத்தின்போது ஆஜராகி, சுதந்திரமாக வாதிடவும், எழுத்துபூர்வமான வாதத்தை முன்வைக்கவும் அனுமதிக்க வேண்டும்.
நீதிபதி: வழக்கு தொடங்கி 20 வருடமாகிறது. இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீர்கள்?
சு.சாமி: இவ்வழக்கை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். நான் மத்திய அமைச்சராகவும், எம்.பி.யாகவும், கட்சியின் தலைவராகவும் இருந்ததால், நீதிமன்றத்துக்கு வரவில்லை. என்றாலும் வழக்கின் போக்கை கவனித்துக்கொண்டிருந்தேன். நீதியின் நலனை கருதியும், குற்றவாளிகளுக்குத் தண்டனையை உறுதிசெய்யவும் இந்த வழக்கில் என்னை 3-ம் தர வாதியாக வாதிட அனுமதிக்க வேண்டும்.
பவானிசிங்: எழுத்துபூர்வமான வாதத்தை அனுமதிக்கலாம். சுதந்திரமாக வாதிட அனுமதிக்கக் கூடாது.
குமார் (அ.தி.மு.க. வழக்கறிஞர்): உண்மையான புகார்தாரர் சுப்பிரமணியன் சுவாமி கிடையாது. இவர் நீதிமன்றத்தில் புகார் செய்ததோடு சரி. இந்த வழக்கின் புகார்தாரர் வி.சி.பெருமாள்தான்.
அவரே புகார்தாரராக இருந்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தார். அதனால், சுப்பிரமணியன் சுவாமிக்கும், இந்த வழக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத ஒருவரை சுதந்திரமாக வாதிடவோ, எழுத்து மூலம் வாதிடவோ அனுமதிக்கக் கூடாது.
சு.சாமி: மகாராஷ்ட்ரா முதல்வர் அந்துலே வழக்கில் தனி நபர் புகார் கொடுத்தார். அந்த தனிநபர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட அனுமதிக்கப்பட்டார். அதேபோன்று இந்த வழக்கில் புகார்தாரர் என்ற முறையில் என்னை அனுமதிக்க வேண்டும்.
நீதிபதி: இந்த வழக்கின் உண்மையான புகார்தாரர் யார்?
குமார் : வி.சி.பெருமாள்தான் புகார்தாரர். அவர் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அதிகாரி. இதில் தனிநபர் புகார்தாரர் இல்லை.
அதே அந்துலே வழக்கில் ‘தனி நபர் கூறும் வாதமும், அரசு வழக்கறிஞர் கூறும் வாதமும் வெவ்வேறாக இருக்கும். இதனால், குழப்பம் விளைவிக்கும்’ என்று நீதிபதி கூறி இருக்கிறார். அதேபோல இந்த வழக்கிலும் அரசு வழக்கறிஞரோடு வாதிட அனுமதித்தால் குழப்பம் ஏற்படும்.
இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
இந்த மேல்முறையீட்டு விசாரணையில் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராக உரிமை இல்லை. அப்படி சேர்த்தால் இரண்டு அரசு வழக்கறிஞர்கள் இருக்கும் நிலை ஏற்படும். தனி நபர் அரசு வழக்கறிஞராக செயல்பட முடியாது. ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட அனுமதி கேட்கிறார்.
சு.சாமி: உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் ஆஜராக எனக்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி: அந்த உத்தரவைக் காட்டுங்கள்.
சு.சாமி: உச்சநீதிமன்றம் எழுத்துபூர்வமாக உத்தரவு கொடுக்கவில்லை. வாய்மொழியாக கூறி இருக்கிறார்கள்.
நீதிபதி: வாய்மொழியாகக் கூறுவதை ஏற்க முடியாது.
சு.சாமி: இந்த வழக்கின் உண்மையான புகார்தாரர் என்ற முறையில் இதில் ஆஜராக அனுமதிக்க கேட்கிறேன். மற்றப்படி நான் அரசு வழக்கறிஞராக வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தங்கள் உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன்.
அன்பழகன் அரசியல்வாதிதானே!
‘அன்பழகன் தரப்பை இவ்வழக்கில் 3-ம் தர வாதியாக சேர்க்க வேண்டுமா… வேண்டாமா?’ என்று நடைபெற்ற வாதம்…
நீதிபதி: (அன்பழகன் தரப்பு நீதிபதி சாதகமான தீர்ப்பை வழங்க மாட்டார்!’ (ஜெ. வழக்கு விசாரணை-11)
அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜராகும் பவானிசிங்கை நீக்க வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் ஜனவரி 28-ம் தேதி மீண்டும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்து, அது 2.2.2015ல் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா மற்றும் நீதிபதி அசோக் பி.ஹிஞ்சிகேரி என இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அன்பழகன் தரப்பில் நாகேஷும், தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் சார்பில் ராவும், பவானிசிங் சார்பில் செபாஸ்டீனும், கர்நாடக அரசு சார்பாக தலைமை நீதிபதி ரவிவர்மகுமாரும் ஆஜரானார்கள்.
செபாஸ்டீன்: இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கீழ்நீதிமன்றத்தில் அவர்தான் அரசு வழக்கறிஞராக இருந்து வழக்கை திறம்பட நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த மனு மீது பதிலளிக்க கால அவகாசம் வேண்டும்.
வகேலா: (தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்கறிஞர் ராவ்வைப் பார்த்து) இந்த வழக்கின் அப்பீல் விசாரணையில் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அரசு வழக்கறிஞரை நீங்கள் நியமித்து வழக்கை நடத்தி வருகிறீர்கள்?
ராவ்: சி.ஆர்.பி.சி 24(8)-ன் அடிப்படியில் பவானிசிங்கை நாங்கள் நியமிக்கும் அதிகாரம் உள்ளது. இந்த வழக்கின் புகார்தாரர்கள் நாங்கள்தான். எங்கள் சார்பில் வாதிட யார் ஆஜராக வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை எங்களுக்குத்தான் இருக்கிறது.
வகேலா: சி.ஆர்.பி.சி 24(1)-ன்படி கிரிமினல் வழக்கை ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு மாற்றம் செய்யும்போது எந்த மாநிலத்துக்கு மாற்றப்படுகிறதோ அந்த மாநில அரசுதான் அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது.
நாகேஷ்: உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லி இருக்கிறது. இவ்வழக்கின் அரசு வழக்கறிஞரை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசனை செய்துதான் கர்நாடக அரசு நியமிக்க வேண்டும். அரசு வழக்கறிஞரை தமிழக அரசு நியமிக்க உரிமை இல்லை.
ராவ்: ஒருவேளை இந்த வழக்கில் கீழ்நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்திருந்தால், அதை எதிர்த்து நாங்கள்தான் அப்பீலுக்குச் சென்றிருப்போமே தவிர, கர்நாடக அரசு அப்பீலுக்குப் போகாது. அதனால் எங்கள் தரப்பு வழக்கறிஞரை நியமிக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது.
நாகேஷ்: தமிழ்நாட்டில் சங்கராச்சாரியார் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாண்டிசேரிக்கு மாற்றலாகியது. அதில் சங்கராசாரியார் விடுதலை ஆனார். அதை எதிர்த்து பாண்டிசேரி அரசு அப்பீல் செல்லவில்லை.
வகேலா: மணிப்பூரில் ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்டால், அந்த வழக்கின் அரசு வழக்கறிஞராக மணிப்பூர் வழக்கறிஞரை நியமிக்க முடியுமா?
நாகேஷ்: 2004ல் இவ்வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்ட போதும், தற்போது அப்பீல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதும் தமிழ்நாட்டில் குற்றவாளிகள் சார்ந்துள்ள அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருக்கிறது. அதனால், இவ்வழக்கில் அரசியல் தலையீடு இருக்கிறது.
வகேலா: இங்கு அரசியலைத் தொடர்புபடுத்த வேண்டாம். (கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமாரைப் பார்த்து) இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?
ரவிவர்மகுமார்: நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தத் தயாராக உள்ளோம்.
ராவ்: இவ்வழக்கு 19 நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஏ1-ன் வாதமும் முடிந்துவிட்டது. ஏ2-வின் வாதம் நிறைவுபெறும் நிலையில் இருக்கிறது. உச்சநீதிமன்றமும் மூன்று மாதத்தில் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இப்படி ஒரு பிரச்னை எழுப்புவது சரியில்லை.
வகேலா: அதற்காக சட்ட விதிமுறைகள் மீறி செயல்பட அனுமதிக்கலாமா? இருப்பினும், இது முக்கியமான வழக்கு என்பதால் அன்பழகன் தரப்பு, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை மற்றும் கர்நாடக அரசு துறைகளின் கருத்துகளை சுருக்கமாக எழுத்துபூர்வமாக தாருங்கள். நாளை தீர்ப்பு வழங்கிவிடலாம்.
பவானிசிங்குக்குப் பதில் நாராயணரெட்டி இருக்கிறார்!
செபாஸ்டீன்: பவானிசிங்கை நீக்கக்கோரி அவர்கள் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றபோது நீதிபதிகள் கண்டித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீதிபதி: உச்சநீதிமன்றம் பவானிசிங்கை நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவு கீழ்நீதிமன்றத்துக்கு மட்டும்தான். அந்த உத்தரவு நகலை படித்து பாருங்கள்.
ராவ்: சி.ஆர்.பி.சி 24(8)-ன்படி அரசு வழக்கறிஞர் பவானிசிங் கீழ்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் செய்தார். அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேல்முறையீடு மனுவுடன் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனு தாக்கல் செய்தனர்.
அப்போது தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பில் ஆஜராகி வாதிட 29.9.2014ல் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது. அதை ஆதாரமாக வைத்து வாதிட்டு வருகிறார். இந்த வழக்கில் நாங்கள் புகார்தாரர் என்ற அடிப்படையில் அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் எங்களுக்கு உள்ளது.
இவ்வழக்கில் ஆச்சார்யா இருந்தபோது எதிர்தரப்பு சார்பில் பல்வேறு மனுக்களை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பாக ஆஜராகி வாதிட்டிருக்கிறார். அதேபோல பவானிசிங்கும் மேல்முறையீட்டில் ஆஜராகி இருக்கிறார். நாங்கள் சட்ட விரோதமாக இவ்வழக்குக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரை நியமிக்கவில்லை. கீழ்நீதிமன்றத்தில் இவ்வழக்கை கையாண்ட வழக்கறிஞரைதான் நியமித்து இருக்கிறோம்.
நீதிபதி: கர்நாடகாவில் நடைபெறும்போது அரசு வழக்கறிஞரை தமிழக அரசு நியமனம் செய்வது தவறு இல்லையா? அரசு வழக்கறிஞரை நியமனம் செய்ய என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் முன்னுதாரணமான வழக்குகள் இருக்கிறதா?
ராவ்: (சற்று மௌனத்துக்குப் பிறகு) இந்த வழக்கு மேல்முறையீட்டு விசாரணையில் ஏ1 வாதம் நிறைவு பெற்றது. அடுத்து ஏ2 வழக்கறிஞர் வாதிட்டு வருகிறார். இன்று வரை 20 நாட்கள் விசாரணை நடந்து முடிந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் பவானிசிங்கை நீக்கினால் வழக்கு பாதிக்கப்படும்.
நீதிபதி: (ரவிவர்மகுமாரைப் பார்த்து) நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
ரவிவர்மகுமார்: இவ்வழக்கு முழுக்க முழுக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெறுகிறது. இதில் கர்நாடக அரசுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை.
ஆனால் சி.ஆர்.பி.சி 24(1)-ன்படி ஒரு வழக்கு எந்த மாநிலத்தில் நடைபெறுகிறதோ, அந்த மாநில அரசுக்குதான் அவ்வழக்கின் அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் உள்ளது என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி பார்க்கும்போது தமிழக அரசின் அனுமதியுடன் பவானிசிங் ஆஜராகி வருவது சட்டத்துக்குப் புறம்பானது.
நீதிபதி: கர்நாடக அரசு இவ்வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்காதபோது அரசு வழக்கறிஞர் ஆஜராகி இருப்பது சட்டத்துக்குப் புறம்பானது. அவரை மாற்றிவிட்டு வேறு யாரையாவது நியமினம் செய்யும் யோசனை அரசிடம் உள்ளதா?
ரவிவர்மகுமார்: பவானிசிங் இல்லாத பட்சத்தில் அரசு மூத்த சிறப்பு வழக்கறிஞர் நாராயணரெட்டியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதை அரசு தன்னிச்சையாக செய்யத் தயாராக இல்லை.
நீதிபதி: பவானிசிங்கை நீக்கினால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து மூன்று தரப்பினரும் தங்கள் கருத்துகளை உணவு இடைவேளைக்குப் பிறகு தாருங்கள்.
நீதிபதி சாதகமான தீர்ப்பை வழங்க மாட்டார்!
உணவு இடைவேளைக்குப் பிறகு…
செபாஸ்டீன்: பவானிசிங் நியமனம் சட்டப்படி சரியில்லை என்று அன்பழகன் தரப்பு புகார் கொடுத்ததை அடுத்து, 23.9.2013ல் பவானிசிங்கை நீக்குவதற்கு நீங்கள்தான் உத்தரவு பிறப்பித்தீர்கள். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மீண்டும் இவ்வழக்கின் அரசு வழக்கறிஞராக ஆஜரானார்.
அதனால், மீண்டும் இதே வழக்கை நீங்கள் விசாரித்தால் ஒருதலைபட்சமாக இருக்கும் என்பதால், வேறு பெஞ்சுக்கு வழக்கை மாற்ற வேண்டும்.
நீதிபதி: என் மீது சந்தேகம் எழுப்பி மெமோ கொடுத்துள்ளதால், நான் தொடர்ந்து விசாரிப்பது சரியில்லை. அதனால் வேறு அமர்வுக்கு பரிந்துரை செய்கிறேன்.
உண்மையான புகார்தாரர் நான்தான்!
மேல்முறையீட்டு மனு விசாரணை நடைபெற்று வரும் கோர்ட் ஹால்…
நீதிபதி குமாரசாமி வருவதற்கு முன்பே சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்துக்கு வந்து அமர்ந்திருந்தார். நீதிபதி 10.30 மணிக்கு தன் இருக்கையில் அமர்ந்ததும், தன்னை 3-ம் தர வாதியாக இணைத்துக்கொள்ள வேண்டும் என வாதிட்டார்.
சு.சாமி: இந்த வழக்கின் முதல் புகார்தாரர் நான்தான்.
நீதிபதி குமாரசாமி: உங்கள் வாதத்தைத் தொடங்கலாம்.
சு.சாமி: ஜெயலலிதா 91-96 வரை தமிழக முதல்வராக இருந்தார். அப்போது தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைக் குவித்தார். அது எனக்குத் தெரியவந்தது.
அதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதன் அடிப்படையில்தான் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி வாதத்தின்போது ஆஜராகி, சுதந்திரமாக வாதிடவும், எழுத்துபூர்வமான வாதத்தை முன்வைக்கவும் அனுமதிக்க வேண்டும்.
நீதிபதி: வழக்கு தொடங்கி 20 வருடமாகிறது. இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீர்கள்?
சு.சாமி: இவ்வழக்கை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். நான் மத்திய அமைச்சராகவும், எம்.பி.யாகவும், கட்சியின் தலைவராகவும் இருந்ததால், நீதிமன்றத்துக்கு வரவில்லை.
என்றாலும் வழக்கின் போக்கை கவனித்துக்கொண்டிருந்தேன். நீதியின் நலனை கருதியும், குற்றவாளிகளுக்குத் தண்டனையை உறுதிசெய்யவும் இந்த வழக்கில் என்னை 3-ம் தர வாதியாக வாதிட அனுமதிக்க வேண்டும்.
பவானிசிங்: எழுத்துபூர்வமான வாதத்தை அனுமதிக்கலாம். சுதந்திரமாக வாதிட அனுமதிக்கக் கூடாது.
குமார் (அ.தி.மு.க. வழக்கறிஞர்): உண்மையான புகார்தாரர் சுப்பிரமணியன் சுவாமி கிடையாது. இவர் நீதிமன்றத்தில் புகார் செய்ததோடு சரி. இந்த வழக்கின் புகார்தாரர் வி.சி.பெருமாள்தான். அவரே புகார்தாரராக இருந்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தார்.
அதனால், சுப்பிரமணியன் சுவாமிக்கும், இந்த வழக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத ஒருவரை சுதந்திரமாக வாதிடவோ, எழுத்து மூலம் வாதிடவோ அனுமதிக்கக் கூடாது.
சு.சாமி: மகாராஷ்ட்ரா முதல்வர் அந்துலே வழக்கில் தனி நபர் புகார் கொடுத்தார். அந்த தனிநபர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட அனுமதிக்கப்பட்டார். அதேபோன்று இந்த வழக்கில் புகார்தாரர் என்ற முறையில் என்னை அனுமதிக்க வேண்டும்.
நீதிபதி: இந்த வழக்கின் உண்மையான புகார்தாரர் யார்?
குமார் : வி.சி.பெருமாள்தான் புகார்தாரர். அவர் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அதிகாரி. இதில் தனிநபர் புகார்தாரர் இல்லை.
அதே அந்துலே வழக்கில் ‘தனி நபர் கூறும் வாதமும், அரசு வழக்கறிஞர் கூறும் வாதமும் வெவ்வேறாக இருக்கும். இதனால், குழப்பம் விளைவிக்கும்’ என்று நீதிபதி கூறி இருக்கிறார். அதேபோல இந்த வழக்கிலும் அரசு வழக்கறிஞரோடு வாதிட அனுமதித்தால் குழப்பம் ஏற்படும்.
இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
இந்த மேல்முறையீட்டு விசாரணையில் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராக உரிமை இல்லை. அப்படி சேர்த்தால் இரண்டு அரசு வழக்கறிஞர்கள் இருக்கும் நிலை ஏற்படும். தனி நபர் அரசு வழக்கறிஞராக செயல்பட முடியாது. ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட அனுமதி கேட்கிறார்.
சு.சாமி: உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் ஆஜராக எனக்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி: அந்த உத்தரவைக் காட்டுங்கள்.
சு.சாமி: உச்சநீதிமன்றம் எழுத்துபூர்வமாக உத்தரவு கொடுக்கவில்லை. வாய்மொழியாக கூறி இருக்கிறார்கள்.
நீதிபதி: வாய்மொழியாகக் கூறுவதை ஏற்க முடியாது.
சு.சாமி: இந்த வழக்கின் உண்மையான புகார்தாரர் என்ற முறையில் இதில் ஆஜராக அனுமதிக்க கேட்கிறேன். மற்றப்படி நான் அரசு வழக்கறிஞராக வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தங்கள் உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன்.
அன்பழகன் அரசியல்வாதிதானே!
‘அன்பழகன் தரப்பை இவ்வழக்கில் 3-ம் தர வாதியாக சேர்க்க வேண்டுமா… வேண்டாமா?’ என்று நடைபெற்ற வாதம்…
நீதிபதி: (அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் சரவணனைப் பார்த்து) உங்கள் வாதத்தைத் தொடங்கலாம்.
சரவணன்: இந்த வழக்கு இங்கு நடைபெற காரணமாக இருந்தவர் என் மனுதாரர் அன்பழகன்தான். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உதவியாகவும், எங்கள் தரப்பு வாதத்தை எழுத்துபூர்வமாக கொடுக்கவும் அனுமதிக்க வேண்டும்.
நீதிபதி: அன்பழகன் அரசியல்வாதிதானே?
சரவணன்: ஆமாம்.
நீதிபதி: அரசியல் பேச நாடாளுமன்றம் இருக்கிறது. அங்கு போய் பேசிக்கொள்ளுங்கள்.
சரவணன்: அரசியல் என்று பார்க்காமல் எங்கள் தரப்பு விவரங்களை சொல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதில் அரசியலை நுழைப்பதாக சொல்வது தவறு.
நீதிபதி: இப்படி தமிழ்நாடு முழுவதும் இவ்வழக்கில் ஆஜராக வந்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
சரவணன்: 2004ல் இவ்வழக்கு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றதால் சரியான தீர்ப்பு கிடைக்காது என்று கருதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
அதை ஏற்ற உச்சநீதிமன்றம் இவ்வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றியது. அதன் பிறகும் இந்த வழக்கில் எங்களை இணைத்துக்கொள்ளாமல் வெளியில் இருந்து கவனித்து வந்தோம். இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அரசு வழக்கறிஞர் தடம் மாறுகிறார் என்றபோதுதான் எங்களை 3-ம் தர வாதியாக சேர்த்து எங்கள் எழுத்துபூர்வ வாதத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டோம்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் எங்களை 3-ம் தர வாதியாக சேர்த்துக்கொள்ள அனுமதித்தார். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் பங்கேற்று நீதி கிடைக்க போராடி வருகிறோம்.
நீதிபதி: ஏன் இதில் தனி ஆர்வம் காட்டுகிறீர்கள்?
சரவணன்: தனி ஆர்வமெல்லாம் கிடையாது. குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது.
குமார்: அரசு வழக்கறிஞராக பவானிசிங் இருக்கும்போது 3-ம் தரப்பினரை அனுமதிக்கக் கூடாது. ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் லாபம் பெற முயற்சிக்கிறார்கள்.
நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) என்ன சொல்கிறீர்கள்?
பவானிசிங்: நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக்கொள்ளுகிறேன்.
-வீ.கே.ரமேஷ்
வழக்கறிஞர் சரவணனைப் பார்த்து) உங்கள் வாதத்தைத் தொடங்கலாம்.
சரவணன்: இந்த வழக்கு இங்கு நடைபெற காரணமாக இருந்தவர் என் மனுதாரர் அன்பழகன்தான். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உதவியாகவும், எங்கள் தரப்பு வாதத்தை எழுத்துபூர்வமாக கொடுக்கவும் அனுமதிக்க வேண்டும்.
நீதிபதி: அன்பழகன் அரசியல்வாதிதானே?
சரவணன்: ஆமாம்.
நீதிபதி: அரசியல் பேச நாடாளுமன்றம் இருக்கிறது. அங்கு போய் பேசிக்கொள்ளுங்கள்.
சரவணன்: அரசியல் என்று பார்க்காமல் எங்கள் தரப்பு விவரங்களை சொல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதில் அரசியலை நுழைப்பதாக சொல்வது தவறு.
நீதிபதி: இப்படி தமிழ்நாடு முழுவதும் இவ்வழக்கில் ஆஜராக வந்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
சரவணன்: 2004ல் இவ்வழக்கு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றதால் சரியான தீர்ப்பு கிடைக்காது என்று கருதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதை ஏற்ற உச்சநீதிமன்றம் இவ்வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றியது.
அதன் பிறகும் இந்த வழக்கில் எங்களை இணைத்துக்கொள்ளாமல் வெளியில் இருந்து கவனித்து வந்தோம். இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அரசு வழக்கறிஞர் தடம் மாறுகிறார் என்றபோதுதான் எங்களை 3-ம் தர வாதியாக சேர்த்து எங்கள் எழுத்துபூர்வ வாதத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டோம்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் எங்களை 3-ம் தர வாதியாக சேர்த்துக்கொள்ள அனுமதித்தார். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் பங்கேற்று நீதி கிடைக்க போராடி வருகிறோம்.
நீதிபதி: ஏன் இதில் தனி ஆர்வம் காட்டுகிறீர்கள்?
சரவணன்: தனி ஆர்வமெல்லாம் கிடையாது. குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது.
குமார்: அரசு வழக்கறிஞராக பவானிசிங் இருக்கும்போது 3-ம் தரப்பினரை அனுமதிக்கக் கூடாது. ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் லாபம் பெற முயற்சிக்கிறார்கள்.
நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) என்ன சொல்கிறீர்கள்?
பவானிசிங்: நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக்கொள்ளுகிறேன்.
-வீ.கே.ரமேஷ்
150 முடிச்சுகளில் ஒன்றைகூட அவிழ்க்கவில்லை! (ஜெ. வழக்கு விசாரணை – 10)
ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே வீட்டில் தங்கியிருப்பது தவறா? (ஜெ. வழக்கு விசாரணை-9)