சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில்  இனிமேல் சந்திப்பு இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்று மைத்திரிபால சிறிசேன தரப்பைச் சேர்ந்த தகவல் அறிந்த வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளன.

இருதரப்பு கருத்து வேறுபாடுகளை நீக்குவதற்காக நேற்று ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தினால், விரிசல்கள் இன்னும் அதிகமானதே இதற்குக் காரணம் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

நேற்றைய பேச்சுக்களின் ஒரு கட்டத்தில், கூட்டத்தில் இருந்து வெளியேறப் போவதாக மகிந்த ராஜபக்ச எச்சரித்த போது, அதற்கு மைத்திரிபால சிறிசேன, தேவையானால் அவர் வெளியே போக முடியும் என்று கூறிவிட்டதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஊழல் விசாரணைகளை நிறுத்துமாறு மகிந்த விடுத்த கோரிக்கை மைத்திரியால் நிராகரிப்பு
07-05-2015
mahinda-maithripala-300x200மைத்திரிபால சிறிசேன, பேச்சுக்களுக்குச் சென்றது அவர் பற்றிய மோசமான எண்ணங்களைத் தோற்றுவித்திருப்பதாகவும், எனவே மேலதிக பேச்சுக்கள் நடக்காது என்றும், அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனது ஆதரவாளர்களுக்கு எதிரான ஊழல் மோசடி விசாரணைகளை நிறுத்துமாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டதாக சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று பிற்பகல், சிறிலங்கா அதிபருக்கும், மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போதே, இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக, தனது பெயரை வெளியிட விரும்பாத உயர்மட்ட அரச அதிகாரி சின்ஹுவாவிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், மகிந்த ராஜபக்ச முன்வைத்த இந்த வேண்டுகோளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடியோடு நிராகரித்து விட்டார்.

இது நல்லாட்சியை பேணும் நடவடிக்கை என்றும், ஊழல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ள அவர், சட்டத்தில் தான் தலையிடமாட்டேன் என்றும் கூறிவிட்டார் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தன்னை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையையும், சிறிலங்கா அதிபர் நிராகரித்து விட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களே பிரதமரைத் தெரிவு செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே அது முடிவு செய்யப்படும்.

என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து விட்டதாகவும் சின்ஹுவாவிடம் சிறிலங்கா அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.

Share.
Leave A Reply