ஈரானின் அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சேன் பக்ரிஸாதேஹ் கொல்லப்பட்டமைக்கு கடுமையான பழிவாங்கல் இடம்பெறும் என ஈரானிய இராணுவ உயர் அதிகாரி எச்சரித்துள்ளார்..

 

அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சேன் பக்ரிஸாதேஹ்

அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சேன் பக்ரிஸாதேஹ் ஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்கு வெளியே காரில் சென்று கொண்டிருந்தபோது, ஆயுதபாணிகள் சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

மேஜர் ஜெனரல் மொஹம்மத் பாகேரி

‘பயங்கரவாதக் குழுக்களும், தலைவர்களும் இக்கோழைத்தமான முயற்சியை நடத்தியவர்களும் தமக்கு கடுமையான பழிவாங்கல் காத்திருக்கிறது என்பதை உணர வேண்டும் என ஈரானிய ஆயுதப் படைகளின் படை அதிகாரிகளின் பிரதானி மேஜர் ஜெனரல் மொஹம்மத் பாகேரி தெரிவித்துள்ளார் என ஈரானின் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஈரானிய இராணுவத்தில் சக்திவாய்ந்த தளபதியாக விளங்கிய ஜெனரல் காசிம் சுலைமானியுடன் ஈரானிய அணுசக்தி துறையில் விஞ்ஞானி பக்ரிஸாதேஹ் ஒப்பிடப்படுகிறார்.

ஜெனரல் காசிம் சுமலைமானி ஈராக்கில் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply