“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள்!

லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது.
தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது.
அவர்கள் இருவரையும் ஒன்றாகவே, பெட்டியில் வைத்திருந்தார்கள். “அண்ணா உனக்கு துனை நிற்பானடா” என்று அம்மா கதறி அழ, “பால் குடித்து விட்டு படுக்கச் சென்ற பிள்ளையைக் கொன்றாரே!” என்ற சத்தம் விண்ணைப் பிழக்க, கல் நெஞ்சம் கொண்டவரையும் கரைய வைக்கும் ஓலமாக இருந்தது அது.
இந்த சின்னஞ் சிறு மழலைகள் என்ன பிழை செய்தார்கள் என்று எண்ணத் தோன்றும். அங்கே நின்ற பலரும் இந்த கேள்வியைத்தான் மனதில் எழுப்பி இருப்பார்கள்.
காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய ஈமைக்கிரியைகள், 11.30க்கு முடிய. 12 மணிக்கு நல்லடம் செய்யப்பட்டது இந்த பிஞ்சு உடல்கள்.
இவர்கள் அதிகம் விளையாடி பொருட்கள் அவர்களின் நல்லடக்க பெட்டியினுள் இருந்ததை காணக்கூடியதாக இருந்தது. லண்டன் ஈழத் தமிழர்கள் சமூகத்தில் நடந்த மிகப் பெரிய சோகமான நிகழ்வாக இது இருக்கிறது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment