பொலிவூட் திரையுலகின் பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் தன்னுடன் பலவந்தமாக உறவு கொள்ள முயற்சி செய்ததார் என நடிகை  பாயல் கோஷ் குற்றம்சுமத்தியுள்ளார்.

 

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பாயல் கோஷ். தேரோடும் வீதியிலே படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பிரயாணம், ஊசரவல்லி ஆகிய தெலுங்கு படங்களிலும், பட்டேல் கி பஞ்சாபி ஷாதி என்கிற இந்தி படத்திலும் நடித்துள்ளார்.

33 வயதான நடிகை பாயல் கோஷ்  தெலுங்கு தொலைக்காட்சி  ஒன்றுக்கு அளித்த செவ்வியின்போது ,’பிரபல பொலிவூட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் தன்னை வீட்டிற்கு வரவழைத்து தன்னுடன் உறவு கொள்ள முயன்றதாக கூறினார்.

தடுக்க முயன்ற தன்னிடம் இது எல்லாம் சாதாரணம் என்று அனுராக் கஷ்யப் கூறியதாக நடிகை பாயல் கோஷ் தெரிவித்தார்.

பாயல் கோஷ் தெரிவித்த புகாரினால் இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலியல்  வன்முறைகள், தொந்தரவுகளுக்கு எதிரான மீடூ இயக்கமும் இதனால் புதிய உத்வேகம் அடைந்துள்ளது.

பிரபல இயக்குநர் ஒருவர் தன்னை வீட்டுக்கு அழைத்து ஆபாசப்படம் காட்டினார் என அண்மையில் நடிகை பாயல் கோஷ் குற்றம் சுமதத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் அனுராக் காஷ்யப் (48) குறித்து ‘டைம்ஸ் ஒவ்  இந்தியாவிடம்’ நடிகை பாயல் கோஷ் கூறுகையில்,

‘இது குறித்து நான் பல காலமாக பேச நினைத்தேன். இன்றோடு இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்று பேசிவிட்டேன்.

மீ டூ இயக்கம் தீவிரமான போது நான் இது குறித்து டுவீட் செய்தேன். ஆனால் அந்த டுவீட்டால் எனக்கு பட வாய்ப்பு கிடைக்காது என்று கூறி அதை நீக்குமாறு பலர் தெரிவித்தனர்.

என் முகாமையாளரும் அதையே தான் சொன்னார். அதன் பிறகு நான் அந்த டுவீட்டை நீக்கிவிட்டேன். பின்னர் அனுராக் காஷ்யப் என்னை டுவிட்டரில் புளொக் செய்துவிட்டார்.

நான் வீடியோவில் அனுராக் காஷ்யப் மீது புகார் தெரிவித்தது பற்றி என் பெற்றோரிடம் கூறவில்லை. அவர்களிடம் முன்பே தெரிவித்தால் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கள்.

அந்த வீடியோ வைரலான பிறகு என் பெற்றோர் தொலைபேசியில் அழைத்து என்னை திட்டினார்கள்.

போலந்தின் தலைநகர் வெர்சோவாவில் இருக்கும் அலுவலகத்தில் வைத்து தான் அனுராக் காஷ்யபை முதன்முறையாக சந்தித்தேன்.

இரண்டாவது முறை அவர் வீட்டில் வைத்து சந்தித்து பேசினேன். படங்கள், சினிமா துறை பற்றி பொதுவாக பேசினோம்.

அதன் பிறகு என்னை தன் வீட்டிற்கு வருமாறு அவர் அழைத்தார். நானும் சென்றேன், அப்பொழுது அவர் வலுக்கட்டாயமாக என்னுடன் உறவு கொள்ள முயன்றார்.

நான் கத்தி கூச்சலிடவில்லை. தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினேன். ஒரு வழியாக அங்கிருந்து ஓடிவிட்டேன்.

பின்னர் அவர் எனக்கு சில முறை மெசேஜ் அனுப்பி வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை. அவர் அனுப்பிய மெசேஜுகள் தற்போது என்னிடம் இல்லை.

அந்த சம்பவம் நடந்த பிறகு நான் பல முறை போனை மாற்றிவிட்டேன். மேலும் அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டதை நான் வீடியோவும் எடுக்கவில்லை என்றார்.

நடிகை பாயல் கோஷின்  குற்றச்சாட்டுகளை இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அனுராக் கஷ்யப் வெளியிட்டுள்ள பதிவுகளில்,

‘வாவ், என் வாயை அடைப்பதற்கு எடுத்த நீண்டகால முயற்சி இது. பரவாயில்லை. என்னை அமைதியாக்கும் முயற்சியில், நீங்கள் இன்னும் சில பெண்களையும் இந்த பிரச்சினைக்குள் இழுத்துள்ளீர்கள். வரம்புகளுடன் நடந்து கொள்ளுங்கள் மேடம். நீங்கள் வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றவை.

என் மீது குற்றம் சாட்டும் சாக்கில் பச்சன் குடும்பத்தையும் இன்னும் சில நடிகர்களையும் இதற்குள் இழுக்க முயற்சித்து தோற்று விட்டீர்கள்.

நான் இரண்டு முறை திருமணம் செய்துள்ளேன் மெடம், அது குற்றமென்றால் சொல்லுங்கள், ஏற்றுக் கொள்கிறேன், நிறைய காதல் செய்திருக்கிறேன், அதையும் கூட ஒப்புக் கொள்கிறேன்.

என்னுடைய முதல் மனைவியாகட்டும், இரண்டவது மனைவியாகட்டும், அல்லது வேறு காதலிகளாகட்டும், அல்லது என்னுடன் பணி புரிந்த நடிகைகள், அல்லது பொதுவிலோ தனிப்பட்ட முறையிலோ நான் சந்திக்கும் பெண்கள் யாராக இருந்தாலும், இது போன்ற நடவடிக்கைகளையும் ஊக்குவிப்பதும் இல்லை அதை பொறுத்துக் கொள்வதும் இல்லை.

என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். எது உண்மை எது பொய் என்று உங்கள் வீடியோவை பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ள முடியும்’ இவ்வாறு அனுராக் காஷ்யப்  கூறியுள்ளார்.

பாயல் கோஷுக்கு கங்கனா ஆதரவு

இயக்குநர் அனுராக் காஷ்யப்  மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பாயல் கோஷுக்கு நடிகை கங்கனா ரணவத் ஆதரவு தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் கங்கனா ரவணத் வெளியிட்ட பதிவொன்றில்,  ‘

பொலிவூட் ஆனது, பாலியல் வேட்டையாளர்கள் நிறைந்தது. இவர்கள் போலியான டம்மி திருமணங்களை செய்துகொண்டுள்ளனர். இவர்கள் தம்மை தினமும் மகிழ்விப்பதற்கு புதிய அழகிய இளம் பெண்களைத் தேடுகின்றனர். பாதிக்கப்படக்கூடிய ஆண்களுக்கம் இதையே அவர்கள் செய்கிறார்கள்.  நான் எனது வழியில் கணக்கை சரிசெய்துவிட்டேன். #மீடு எனக்குத் தேவையில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

கங்கனாவின் ஆதரவுக்கு பயால் கோஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

(நன்றி : சமயம் தமிழ்)

 

Share.
Leave A Reply