அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,064,194 ஆக உயர்ந்துள்ளதுடன், கொரோனாவால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61, 656 ஆக உயர்ந்துள்ளது.

 

 

அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2390 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் சுமார் 2 இலட்சத்து 28 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பில் நான்கில் ஒரு பங்கு மரணம் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணம் என்றால் நியூயோர்க் என்றே கூறலாம். அங்கு இதுவரை 306,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நியூயோர்க்கில் 23,474 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக நியூ ஜெர்சியில் 116264 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 6770 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

மேலும், அமெரிக்காவில் இதுவரை 6,1,39,911 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதாவது 10 லட்சம் பேருக்கு 18,549 என்ற விகிதத்தில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 10 லட்சம் பேரில் 186 பேர் என்ற விகிதத்தில் உயிரிழந்துள்ளனர்.

சில முக்கிய விடயங்கள்…

*அமெரிக்காவில் 1,064,194 பேர் பாதிக்கப்பட்டள்ள நிலையில் அங்கு இதுவரை 61,656 பேர் மரணமடைந்துள்ளனர். இதேவேளை, அங்கு நேற்று மாத்திரம் 2390 பேர் உயிரிழந்துள்ளனர்.

*இத்தாலியில் 203,591பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை 27,682பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேற்று மாத்திரம் அங்கு 323 பேர் உயிரிழந்துள்ளனர்.

*ஸ்பெயினில் 236,899 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை 24,275பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை அங்கு நேற்று மாத்திரம் 453பேர் உயிரிழந்துள்ளனர்.

*பிரான்சில் 166,420 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இதுவரை 24,087பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நேற்று மாத்திரம் அங்கு 427 பேர் உயிரிழந்துள்ளனர்.

*இங்கிலாந்தில் 165,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இதுவரை 26,097பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நேற்று மாத்திரம் அங்கு 795 பேர் உயிரிழந்துள்ளனர்.

*ஜேர்மனியில் 161,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இதுவரை 6,467 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, அங்கு நேற்று மாத்திரம் 153பேர் உயிரிழந்துள்ளனர்.