ilakkiyainfo

அறிவித்தல் விடுத்தும் மூடப்படாத மதுபானசாலைகள் பொலிஸாரின் தலையீட்டுடன் இழுத்து மூடப்பட்டன

அறிவித்தல் விடுத்தும் மூடப்படாத மதுபானசாலைகள் பொலிஸாரின் தலையீட்டுடன் இழுத்து மூடப்பட்டன
April 21
17:05 2020

கடந்த 20 ஆம் திகதி முதல் ஊரடங்குச் சட்டம் இலகுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்காலப்பகுதியில் மதுபானசாலைகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனால் நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்னால் பெருமளவானவர்கள் அணிதிரண்டு நின்றனர். சில இடங்களில் சமூக இடைவெளிகூட பின்பற்றப்படவில்லை.

இவை உட்பட மேலும் சில காரணங்களை கருத்திற்கொண்டு மதுபானசாலைகளை மறு அறிவித்தல் விடுக்கபடும் வரை மூடுமாறு இன்று காலை 8.30 மணிக்கு பின்னர் உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும், உத்தரவு வெளியாவதற்கு முன்னர் பல இடங்களில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டிருந்தன. சாராய வகைகளை வாங்குவதற்காக பெருமளவானோர் திரண்டிருந்தனர்.

 

இந்நிலையில் உத்தரவு வெளியான பின்னர், திறக்கப்பட்டிருந்த மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் பெரும்பாலானவர்கள் மூடவில்லை. வாங்குவதற்கு நின்றவர்களும் விலகவில்லை. இதனால் பொலிஸாரின் தலையீட்டுடன் மதுபான சாலைகள் மூடப்பட்டன.

மலையகத்தில் உள்ள பல நகரங்களிலும் மதுபான நிலையங்களுக்கு முன்னால் திரண்டிருந்தவர்களை அகற்றிவிட்டு, மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com