ilakkiyainfo

ஆணின் சிறுநீர்ப்பையில் சிக்கிய மொபைல் சார்ஜர் கேபிள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் ; பாலியல் விளையாட்டு விபரீதமானது

ஆணின் சிறுநீர்ப்பையில் சிக்கிய மொபைல் சார்ஜர் கேபிள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் ; பாலியல் விளையாட்டு விபரீதமானது
June 07
19:20 2020

ஆண் ஒருவரின் சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கோர்ட் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இந்தியாவின் அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த ஒருவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் ஆலோசகரும், அறுவை சிகிச்சை நிபுணரான வாலியுல் இஸ்லாமிடம் சில நாட்களுக்கு முன்பு மொபைல் சார்ஜர் கேபிளை தவறாக உட்கொண்டதால் அவருக்கு வயிற்று வலி இருப்பதாகத் கூறினார்.

இதைதொடர்ந்து டாக்டர்  அவருக்கு அறுவைசிகிச்சை செய்து உள்ளார்.ஆனால்  அவரது இரைப்பைக் குழாயில் எதுவும் கிடைக்காததால் அந்த நபர் பொய் சொல்வதாக நினைத்தார்.

ஆனால் நோயாளி தொடர்ந்து வயிற்று வலி இருப்பதாக கூறவே அதை தொடர்ந்து முழு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது அப்போது நோயாளியின் சிறுநீர்ப்பையில் ஒரு மொபைல் சார்ஜரின் கேபிள் கோர்ட் இருப்பது  கண்டறியப்பட்டது.

இது குறித்து டாக்டர் வலியுல் இஸ்லாம் (Walliul Islam) கூறியதவது:-

“அந்த நபர் தனது ஆண்குறி வழியாக மொபைல் சார்ஜிங் கேபிளை நுழைத்து உள்ளார். அது வெற்றிகரமாக அகற்றபட்டு நோயாளி தற்போது குணமடைந்து வருகிறார்.

அந்த நபர்  உண்மையைச் சொல்லி இருந்தால்  அறுவை சிகிச்சையைத் தவிர்த்திருக்க முடியும். ஆண்குறி சிறுநீர்க்குழாய் வழியாக அதனை அகற்றி இருக்கலாம்.

பாலியல் இன்பம் பெற மனிதன் தனது ஆண்குறி வழியாக பொருட்களை செருகும் பழக்கத்தில் இருப்பதாக கூறப்பட்டது. “இந்தச் செயலை சிறுநீர்ப்பை சுய இன்பம் அல்லது சிறுநீர்ப்பை ஒலித்தல் என்று அழைக்கலாம். அவரது விஷயத்தில்,  சிறுநீர்ப்பையில் இணைக்கப்பட்ட  தண்டு சிக்கி கொண்டது

எனது 25 ஆண்டுகால மருத்துவ  வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு வழக்கை நான் கண்டதில்லை” என்று கூறினார்

இது குறித்து டாக்டர் வலியுல் இஸ்லாம் தனது பேஸ்புக் பக்கத்தில்  “அறுவை சிகிச்சையில் ஆச்சரியங்கள்! என்ற தலைப்பில் பதிவிட்டு உள்ளார்.

(மூலம் தினத்தந்தி)

சத்திரசிகிச்சை பேஸ்புக் வீடியோ:

 

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com