ilakkiyainfo

இது படமல்ல… பாடம்… ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது – பாரதிராஜா புகழாரம்

இது படமல்ல… பாடம்… ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது – பாரதிராஜா புகழாரம்
May 30
16:12 2020

பொன்மகள் வந்தாள் படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த இயக்குனர் பாரதிராஜா, ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’.

அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் நாளை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த இயக்குனர் பாரதிராஜா, படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டி டுவிட் செய்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது: “அரியாத வயதில் காமத்தை சுமந்து, வெளியில் சொல்ல முடியா வாழும், பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள்.

இது பெண்களுக்கான படம் அல்ல, பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம். இயக்குனரின் இயக்கமும், ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள் கண்களை கலங்கடித்து விட்டது. இந்த “பொன்மகள் வந்தாள்” கண்டிப்பாக சமூகத்தை கலங்கடிக்கும். ” என குறிப்பிட்டுள்ளார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com