“தென்னிந்தியத் திரையுலகின் முன்னிலை நடிகைகளில் ஒருவரான சாய் பல்லவி, இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றுவதற்கான பரீட்சை எழுதியுள்ளார்.
தமிழகத்தின் திருச்சி நகரில் கடந்த திங்கட்கிழமை சாய் பல்லவி இப்பரீட்சையை எழுதினார்.
இதன்போது, நடிகை சாய் பல்லவி, முகக்கவசம் அணிந்திருந்தாலும், அங்கு பரீட்சை எழுத வந்த சக பரீட்சார்த்திகள், அவரை அடையாளம் கண்டுஅவருடன் படம்பிடித்துக்கொண்டனர்.
28 வயதான சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து பிரபலமானவர். மாரி 2 படத்தில் இடம்பெற்ற, நடிகர் தனுஷும் சாய் பல்லவியும் ஆடிய ‘ரௌடி பேபி’ பாடல் யூரியூப்பில் பல சாதனைகளைப் படைத்தமை குறிப்பிடதக்கது. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
திரையுலகில் முன்னிலை நடிகையாக இருந்தபோதிலும் கல்வியிலும் அவர் தீவிர ஆர்வம் செலுத்துபவர்.
ஜோர்ஜியா நாட்டின். துலைநகரி திலிசியிலிலுள்ள, திலிபிசி அரச மருத்துவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று 2016 ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் பட்டம் பெற்றவர் சாய் பல்லவி.
வெளிநாட்டு மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் மாணவர்கள், இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி பரீட்சையில் (Foreign Medical Graduate Examination – FMGE) சித்தி பெறுவது அவசியம்.
இதன்போது, நடிகை சாய் பல்லவி, முகக்கவசம் அணிந்திருந்தாலும், அங்கு பரீட்சை எழுத வந்த சக பரீட்சார்த்திகள், அவரை அடையாளம் கண்டுஅவருடன் படம்பிடித்துக்கொண்டனர்.
28 வயதான சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து பிரபலமானவர். மாரி 2 படத்தில் இடம்பெற்ற, நடிகர் தனுஷும் சாய் பல்லவியும் ஆடிய ‘ரௌடி பேபி’ பாடல் யூரியூப்பில் பல சாதனைகளைப் படைத்தமை குறிப்பிடதக்கது.
அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
திரையுலகில் முன்னிலை நடிகையாக இருந்தபோதிலும் கல்வியிலும் அவர் தீவிர ஆர்வம் செலுத்துபவர்.
ஜோர்ஜியா நாட்டின். துலைநகரி திலிசியிலிலுள்ள, திலிபிசி அரச மருத்துவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று 2016 ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் பட்டம் பெற்றவர் சாய் பல்லவி.
வெளிநாட்டு மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் மாணவர்கள், இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி பரீட்சையில் (Foreign Medical Graduate Examination – FMGE) சித்தி பெறுவது பெறுவது அவசியம்.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 5 நாடுகளில் மருத்துவப் படிப்பு முடித்தால் இந்தியாவில் எப்எம்ஜிஇ தேர்வை இந்தியாவில் எழுதத் தேவையில்லை.
அதேவேளையில், ரஷ்யா, சீனா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், ஜோர்ஜியா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற கட்டாயம் இந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
இந்திய தேசிய பரீட்;சை ஆணையகம் ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு 2 முறை இந்தத் பரீட்சையை நடத்தி வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜூன் மாதம் நடைபெறவிருந்த இந்தத் பரீட்சை தள்ளிவைக்கப்பட்டு, கடந்த 31 ஆம் திகதி நடைபெற்றது.
இப்பரீட்சை எழுதுவதற்காக திருச்சி சிறுகனூர் எம்ஏஎம் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மையத்தில் பிரபல நடிகை சாய் பல்லவி பங்கேற்று பரீட்சை எழுதினார்.
தேர்வும் முடிந்து புறப்படுவதற்கு முன் சக பரீட்சார்த்திகள் அவரை அடையாளம் கண்டு செல்பி எடுத்துக் கொண்டனர்.
நாடு முழுவதும் நடைபெற்ற எப்எம்ஜிஇ தேர்வை திருச்சி மையத்தில் எழுதினார் பிரபல நடிகை சாய் பல்லவி. அப்போது, சக தேர்வர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இது தொடர்பாக கல்லூரி ஊழியர் ஒருவர் கூறும்போது, ‘முகக்கவசத்துடன், தலையில் முக்காடும் அணிந்திருந்ததால் முதலில் அருகில் அமர்ந்திருந்த மாணவர்களுக்குக்கூட சாய் பல்லவியை அடையாளம் தெரியவில்லை. ஆனால், சிறிது நேரத்தில் தேர்வறையில் அடையாளம் தெரிந்து கொண்டனர்.
சாய் பல்லவியுடன் படம்பிடித்துக் கொண்ட சக பரீட்சார்த்திகள்
………………………………………………………………………………………………………………………………………………………………
பின்னர், பரீட்சை முடிந்த பிறகு செல்பி எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டபோது உடனே ஒத்துக் கொண்டார்.
தான் ஒரு பிரபல நடிகை என்ற பெருமிதம் சிறிதும் இன்றி, செல்பி எடுத்த சக தேர்வர்களுடன் மிகவும் இயல்பாக நடந்து கொண்டார். செல்பிக்காக தனது முகக்கவசத்தையும் ஓரிரு விநாடிகள் அவர் அகற்றினார்.
பிரபல நடிகையாக உயர்ந்துவிட்ட நிலையிலும், தேர்வில் பங்கேற்றதன் மூலம் எந்த நிலையிலும் கல்விதான் நிலையான செல்வம் என்பதை சாய் பல்லவி பிறருக்கு உணர்த்தியுள்ளார் என்று சக தேர்வர்கள் பெருமையாக பேசிக் கொண்டனர்’ என்றார்.