ilakkiyainfo

இந்தியாவை உதவிக்கு அழைப்பதற்கு முன்னதாக இலங்கைத் தமிழர்கள் தங்களுக்குத் தாங்களே உதவவேண்டும் என்பதே யதார்த்தம்!

இந்தியாவை உதவிக்கு அழைப்பதற்கு முன்னதாக இலங்கைத் தமிழர்கள் தங்களுக்குத் தாங்களே உதவவேண்டும் என்பதே யதார்த்தம்!
August 30
20:07 2020

இந்திராகாந்தி காலத்து முன்னணி அரசியல் – இராஜதந்திர சிந்தனையாளர் பி.என்.ஹஸ்கரின் இலங்கைக்கொள்கை பற்றிய நோக்கை விளங்கும் நூல் விமர்சனத்தில் இன்றைய இலங்கைத் தமிழர்களின் நிலைகுறித்து கேர்ணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்திருக்கும் யோசனைகள்

தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய விவகாரங்களை ஆய்வுசெய்வதில் இந்தியாவின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் சூரிய நாராயணனும் கலாநிதி அஷிக் புளோபெரும் கூட்டாக ‘இந்தியாவின் இலங்கைக் கொள்கை குறித்து ஹஸ்கர்” ((Haskar On India’s SriLanka Policy) என்ற நூலை எழுதியதன் மூலம் முன்மாதிரியான பணியொன்றைச் செய்திருக்கிறார்கள்.

தனது காலத்தில் தலைசிறந்த மூலோபாய சிந்தனையாளராக விளங்கிய பி.என்.ஹஸ்கர் (1913 – 1998) இந்தியாவின் இலங்கைக் கொள்கையுடன் சம்பந்தப்பட்டவரல்ல என்பதால் இந்தக் புத்தகத்தின் பிரதான கவனம் இலங்கை மீதானதல்ல என்பதைப் பேராசிரியர் சூரியயநாராயணன் ஏற்றுக்கொள்கிறார். ஹஸ்கரின் சமகாலத்தவரான தலைசிறந்த இராஜதந்திரி கோபாலசாமி பார்த்தசாரதியே (ஜி.பி) இலங்கை விவகாரங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவராக அதைக் கையாண்டார்.

‘பின்னிப்பிணைந்த உயிர்கள் : பி.என்.ஹஸ்கரும் இந்திராகாந்தியும் ‘ஐவெநசவறiநென டுiஎநள : P.N.ர்யளமயச யனெ ஐனெசய புயனொi” என்ற ஜெய்ராம் ரமேஷின் நூலிலிருந்து மேற்கோள் காட்டும் பேராசிரியர் சூரியநாராயணன், ‘இந்திராகாந்தியின் ஆளுமையை உருவாக்குவதில் விசேடமாக பிரதமர் பதவியில் அவரது முதல் 6 அல்லது 7 வருடங்களில் ஹஸ்கர் கனதியான பங்களிப்பைச் செய்தார்…மதிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்திய இரட்டையர்களாக இந்திராகாந்தியும் ஹஸ்கரும் விளங்கினார்கள். புத்திஜீவித்துவ ஈர்ப்புடன் மக்களை வசீகரிக்கும் இயல்புடையவராக இந்திராகாந்தி விளங்கினார்.

அவர் சகல தீர்மானங்களையும் தானே எடுத்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒவ்வொரு திருப்பத்திலும் ஹஸ்கரின் செல்வாக்கிற்குப் பெருமளவிற்கு உட்பட்டிருந்தார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இலங்கையில் இந்தியாவின் பாத்திரத்தை பி.என்.ஹஸ்கர் எவ்வாறு பார்த்தார் என்பதை இனங்காண்பதற்கான தகவல்களை ஜெய்ராம் ரமேஷின் புத்தகத்திலிருந்தே பெருமளவிற்குப் பெற்றிருக்கிறார்கள். மேலும் இந்தியாவின் இலங்கைக்கொள்கை எவ்வாறு வடிவமைக்கப்பட்டு, இறுதியில் அது 1987 இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையாக உச்சநிலையை அடைந்தது என்பதையும் அதற்குப் பின்னரான நிகழ்வுப்போக்குகள் பற்றியும் பெறுமதியான உள்நோக்குகளைத் தருவதற்காக இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான கொள்கை வகுப்பாளர்கள், இராஜதந்திரிகள், அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் பேராசிரியருக்கு இருந்த தொடர்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்தியாவின் இலங்கைக் கொள்கையை வடிவமைத்த முக்கியமான பாத்திரங்கள் குறித்து நூலில் பல தகவல்கள் இருக்கின்றன. இந்திரா – ஜி.பி காலகட்டத்தில் இந்தியாவின் இலங்கைக் கொள்கை பற்றி நூலின் 37 ஆவது பக்கத்திலிருக்கும் தொகுப்பு மிகவும் கவனிக்கத்தக்கதாக இருக்கின்றது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வொன்று காணப்படுவதை அனுமதிப்பதில்லை என்பதில் இந்தியா மிகவும் உறுதியாக இருந்தது. 1987 இல் பிரதமர் ராஜீவ் காந்தியினாலும் இந்த நிலைப்பாடு கடைப்பிடிக்கப்பட்டது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த்தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் வகிக்கின்ற அதேவேளை, தீவிரவாதிகளையும் ஆதரிக்கும் கொள்கை இந்த எண்ணத்தின் அடிப்படையில் அமைந்ததே. ஒருபுறத்தில் இந்தக்கொள்கை தீர்வொன்றைக் காணும் முயற்சிகளில் சம்பந்தப்பட்ட தரப்புக்களின் நிலைப்பாடுகளைக் கடுமையாக்கியது. தவறான எண்ணத்தின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்தன முன்னெடுத்த 1983 ஜுலை இனவன்செயல் தந்திரோபாயத்தின் விளைவான அரசியல் அனுகூலம் ராஜீவ் காந்தியை பெரும்பாலும் செல்வாக்கிற்கு உட்படுத்தியது எனலாம். உண்மையில் அது விவாதத்திற்குரிய விடயமாகும்.

உடன்படிக்கையின் சுறுசுறுப்பான கட்டம் மற்றும் விடுதலைப்புலிகளினால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு இலங்கையில் இந்தியா மந்தமான – சுறுசுறுப்பற்ற பங்கை ஆற்றியிருக்கிறது. உடன்படிக்கையின் அனர்த்தத்தனமான தாக்கங்களே அத்தகைய சூழ்நிலைக்கு வழிவகுத்தது என்பதும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். பிறகு தமிழ்த்தீவிரவாதிகள் இந்தியாவில் வேண்டப்படாதவர்களாக ஆக்கப்பட்டார்கள். அதன் நேரடி விளைவே 2009 ஈழப்போரில் விடுதலைப்புலிகள் அழித்தொழிக்கப்படுவதற்கு இந்தியா வழங்கிய மறைமுகமான அல்லது மந்தமான ஆதரவாகும். இதன்மூலம் இந்திய – இலங்கை உறவுமுறையைப் பாதித்த வெளிக்காரணி அகற்றப்பட்டது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட, மிகவும் பழிப்புக்கு இலக்கான இருதரப்பு ஏற்பாடுகளில் ஒன்றான இந்த உடன்படிக்கையே பாக்கு நீரிணையின் இருமருங்கிலும் நோக்கப்பட்டது. அரைவேக்காடான ஆணையைக்கொண்ட இந்த உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்திய அமைதிகாக்கும் படை விடுதலைப்புலிகளுக்கு எதிரான எவருமே விரும்பாத இராணுவ நடவடிக்கைகளில் 1300 இற்கும் அதிகமான சிப்பாய்களை இழந்த பின்னரும் கூட அவப்பெயரையே சம்பாதித்தது. அந்த நடவடிக்கைகளில் பங்கேற்ற எங்களில் பலர் அந்த நாட்களில் கோணலான கொள்கை நடைமுறைப்படுத்தலின் தாக்கங்களின் ஊடாக இன்றும் வளர்ந்துகொண்டிருக்கிறோம்.

உடன்படிக்கை அவசர அவசரமாக வகுக்கப்பட்டு மோசமான முறையில் வரையப்பட்டதுடன் வெறுக்கத்தக்க வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகக் கடந்தகால அனுபவங்களைத் திரும்பிப்பார்க்கும் விமர்சகர்கள் பலர் கூறுகின்றார்கள். இத்தகைய கருத்துக்களில் உண்மையின் கூறுகள் இருந்திருக்கலாம் என்கிற அதேவேளை, அந்த உடன்படிக்கை வகுக்கப்பட்ட நேரத்தைய வெளியக மற்றும் உள்ளக சூழ்நிலைகளை நாம் விளங்கிக்கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. திருமதி இந்திராகாந்தியின் மறைவுடன் இந்தியாவின் உள்ளக அரசியல்கோலம் முற்றாக மாற்றமடைந்தது. பிராந்தியப் பாதுகாப்புக்கோலம் சோவியத் யூனியன் பனிப்போரின் விளைவாகத் தோல்வியடைந்துகொண்டு இறக்கும் தருவாயில் இருந்த சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டது.

ஆனால் 2020 இல் தமிழ் மற்றும் சிங்கள விளிம்புநிலை சக்திகள் உட்பட உடன்படிக்கையை எதிர்ப்பவர்கள் கூட அதிலுள்ள நல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்திருக்கிறது. அந்த உடன்படிக்கையே இலங்கையின் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் அறிமுகத்திற்கு வழிவகுத்தது. தமிழர்களுக்கு ஒரு மட்ட சுயாட்சியை வழங்குவதற்கு மாகாணசபைகளை அந்தத் திருத்தமே உருவாக்கியது. இலங்கை தமிழ்மொழியையும் அடையாளத்தையும் கலாசாரம் மற்றும் வாழ்விடங்களையும் அங்கீகரிக்கும் நிலையையும் உடன்படிக்கையே ஏற்படுத்தியது.

தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குப் போதாததாக இருக்கின்ற போதிலும் 13 ஆவது திருத்தம் உதிர்ந்து போகக்கூடிய ஆபத்து ஏற்பட்டிருக்கும் போதும் தாங்கள் Nதுசிய பிரச்சினை என்று அடையாளப்படுத்துகின்ற நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதன் மூலமாக தமிழர்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கையை நிர்பந்திக்க இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கைத் தமிழர்கள் விரும்புகின்றார்கள். சிங்களப் பெரும்பான்மையினர் அதை சிறுபான்மை இனப்பிரச்சினை என்று அழைப்பதிலுள்ள அர்த்தத்தைப் புரிந்துகொள்ள அந்தத் தமிழர்கள் தவறுகின்றார்கள் போல் தெரிகிறது.

அந்தத் தர்க்கவேறுபாடு யதார்த்தத்தில் ஒற்றையாட்சி அரசொன்றுக்கான பெரும்பான்மையினரின் உரத்த கோரிக்கையாக இருக்கிறது. தங்களுக்கு உதவுமாறு இந்தியாவைக் கேட்பதற்கு முன்னதாக இலங்கைத் தமிழர்கள் தங்களுக்குத் தாங்களே உதவ வேண்டும் என்பது இப்போது யதார்த்தமாக இருக்கிறது. தமிழர்கள் ஒன்றுசேர்ந்து தற்போதைய அரசியல் மூலோபாய நிலைவரத்திற்குப் பொருத்தமான முறையில் உகந்ததும் நடைமுறைச் சாத்தியமானதுமான ஒரு தந்திரோபாயத்தை வகுக்கவேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதற்குப் பிறகே அவர்கள் நிலைவரத்திற்குப் பொருத்தமான முறையில் இலங்கையை இணங்கவைப்பதில் இந்தியாவின் ஆதரவை நாடவேண்டும்.

இறுதியாக சுருக்கமாகச் சொல்வதானால் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ராஜபக்ஷாக்கள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற பிறகு இலங்கைத் தமிழர்கள் 1987 இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு தங்களுக்குக் கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியையும் கூட இழந்துவிடக்கூடிய ஒரு மங்கலான சாத்தியப்பாட்டை எதிர்நோக்குகின்றார்கள். தங்களது சுதந்திரக்கனவை நனவாக்குவதற்காகப் பயனற்ற 25 வருடகால கொடூர யுத்தத்தில் 2 தலைமுறை மக்களை இழந்த பிறகு தமிழர்கள் பெரும்பான்மையின ஆட்சியின் நிஜ உலகிற்கு முகங்கொடுக்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை இங்கு திறனாய்விற்கு உள்ளாகியிருக்கும் ‘இந்தியாவின் இலங்கைக் கொள்கை குறித்து ஹஸ்கர்” என்ற நூல், இந்தியாவில் இலங்கைக் கொள்கை உருவாக்கத்திற்கான பின்புலத்தை விளங்கிக்கொள்ளப் பயனுடையதாக இருக்கும். வெளியுறவுக்கொள்கைகளை வடிவமைப்பதிலுள்ள சிக்கல்களைப் புரிந்துகொண்டு தங்களது தந்திரோபாயத்தை வகுக்கும்போது அதை முக்கிய கவனத்திலெடுக்க வேண்டும்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com