ilakkiyainfo

இரண்டாம் உலகப்போரில் வீழ்ந்த ஜப்பான் எழுந்து நின்றது எப்படி?? : விறுவிறுப்பான ஜப்பானின் சாதனைக்கதை…(பகுதி-1)

இரண்டாம்  உலகப்போரில்  வீழ்ந்த ஜப்பான்  எழுந்து  நின்றது எப்படி?? : விறுவிறுப்பான ஜப்பானின் சாதனைக்கதை…(பகுதி-1)
May 05
23:11 2016

இரண்டாம் உலகப்போரில்  வீழ்ந்த ஜப்பான்  இன்று வளர்ந்த நாடுகளில் ஒன்றாக  எழுந்து நிற்கிறது. விறுவிறுப்பான ஜப்பானின் சாதனைக்கதை…

உலகச் சரித்திரத்தில் மிக அதிகமான சேதம்  விளைவித்த, மிக அதிக எண்ணிக்கையில்  மனித உயிர்களைப் பலி வாங்கிய ஒரு போர் என்றால், அது இரண்டாம் உலகப் போர்தான். போர் முடிந்த பின்னரும் பல ஆண்டுகளுக்கு அதன் கொடூரமான விளைவுகளை உலகம் சந்தித்தது.

இன்னமும்  சந்தித்துக்கொண்டு இருக்கிறது. 1939-ம் ஆண்டு செப்டெம்பர் முதல் தேதி ஜெர்மனியை ஆண்டு கொண்டிருந்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர், போலந்து நாட்டின்மீது படை எடுத்தார்.

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பம் இதுதான்.

ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா போன்ற பெரிய நாடுகள் மட்டுமின்றி, பெல்ஜியம், நார்வே, லக்ஸம்பர்க், செக்கோஸ்லோவாகியா போன்ற சிறிய நாடுகளும்  இந்தப் போரில் பங்கேற்றன.

மொத்தத்தில் இரண்டாம் உலகப் போரில் அறுபத்தொரு நாடுகள் பங்கேற்றன. இரண்டாம் உலகப் போரில், பல்வேறு நாடுகளையும் சேர்ந்த பதினொரு கோடி ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் பாதிக்கும் மேலானவர்கள் ரஷ்யா, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம்    உலகப் போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டன.

இவை, ‘அச்சு நாடுகள்’ (Axis Nations) என்று அழைக்கப்பட்டன.

இந்த நாடுகளை எதிர்த்துப் போரிடுவதற்கு பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய முக்கிய நாடுகள் ஒன்றிணைந்தன. இந்தக் கூட்டணி, ‘நேச நாடுகள்’ (Allied தாம் விரும்பிய ஒன்றின் பக்கம் சாய்ந்து, போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன.

சில நாடுகள், அச்சுநாடுகளால் தாக்கப்பட்டபொழுது தோல்வியில் சரணடைந்தன. இன்னும் சில நாடுகள், அச்சு நாடுகளின் தாக்குதலைச் சமாளிக்க நேச நாடுகளின் உதவியை நாடின.

மொத்தத்தில் நேச நாடுகளின் கூட்டணியில்தான் அதிகமான நாடுகள் இடம்பெற்றிருந்தன. ஹிட்லரின் தலைமையில் போரில் ஈடுபட்ட அச்சுநாடுகளின் கூட்டணியில் குறைந்த எண்ணிக்கையில் பல நாடுகள் இடம்பெற்றிருந்தாலும், அவை பெரும் பலம் வாய்ந்தவையாக இருந்தன.

பல்வேறு தருணங்களிலும் நேச நாடுகள் அணி திணறும்படியானது. ஜெர்மனியில் மட்டுமில்லாமல், உலகில் யூதர்கள் எங்கே இருந்தாலும் சரி, அவர்களை ஒழித்துக்கட்டுவது என்ற முடிவோடு இருந்தார் ஹிட்லர்.

போலந்து, ஹாலந்து, பெல்ஜியம் என்று வரிசையாக  ஒவ்வொரு நாடாக வீழ்த்திக் கொண்டே வந்தார்.

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த சேம்பர்லின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த வின்ஸ்டன் சர்ச்சில், ஹிட்லரின் ராணுவ வெறியாட்டத்தை   ராணுவ பலம் கொண்டே   ஒடுக்கவேண்டும் என்று, தீவிரமாக நினைத்தவர்.

Tehran_Conference_1943( படத்தில் சோவியத் ஸ்டாலின், அமெரிக்க ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் சர்ச்சில்)

சர்ச்சிலும், அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்ட்டும் நல்ல நண்பர்கள். கம்யூனிஸ்டுகள் என்றால் சர்ச்சிலுக்குப் பிடிக்காது. ஆனால், ரஷ்யா மீது ஜெர்மனி போர்த் தொடுக்க முயன்றபொழுது, சர்ச்சில் ராஜதந்திரத்துடன், ரஷ்யாவைத் தன் அணியில் சேர்த்துக் கொண்டார்.

ஹிட்லரின் இத்தாலிய சகாவான முசோலினியும் சர்வாதிகாரம்தான் சரி என்று நம்பினார். ஜெர்மனி, இத்தாலியை அடுத்து அச்சு (Axis Nations) நாடுகளில் மூன்றாவது முக்கிய நாடு ஜப்பான்.

ஹிரோஹிடோ என்பவர் ஜப்பானியச் சக்ரவர்த்தியாக இருந்தாலும், அந்நாட்டில் ராணுவத் தளபதிகளின் கையே ஓங்கி இருந்தது. பசிபிக் பெருங்கடல் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது ஜப்பானின் கனவு.

இதன் முதல்கட்டமாக, சீனாவின் பகுதியான மஞ்சூரியா மீது ஜப்பான் படையெடுத்து வெற்றி பெற்றது. தொடர்ந்து, சீனாவின் செழிப்பான மற்றப் பகுதிகள் மீதும் ஜப்பானின் பார்வை சென்றது.

ஏனெனில், நாலு பிரதான தீவுகள் கொண்ட சிறிய நாடான ஜப்பானில் இயற்கை வளங்கள் அவ்வளவாக இல்லை. எனவே, சீனாவின் சில செழிப்பான பிராந்தியங்களைக் கைப்பற்றும் முயற்சியில் ஜப்பான் இறங்கியது.

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற சில நாடுகள் இதைக் கண்டித்தன. ஆனால் ஜப்பான் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், அந்தக் காலகட்டத்தில்  ஜெர்மானியப் படைகள், ஐரோப்பாவையே  ஆக்கிரமித்துக்கொண்டு இருந்தன.

அமெரிக்கா, ஹிட்லரை எதிர்த்தபொழுதும், போரில் நேரிடையாக ஈடுபடாமல் தவிர்த்து வந்தது.

எனவே, நேச நாடுகளின் கூட்டணியில் உள்ள அமெரிக்காமீது எதிர்பாராத தருணத்தில் அதிரடித் தாக்குதல் நடத்தினால், அமெரிக்காத் தடுமாறிப் போகும்.

பசிபிக் பகுதியில், சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கும் திட்டம் சுலபமாக நிறைவேறிவிடும் என்று ஜப்பான் கணக்குப் போட்டது. 1941, டிசம்பர் மாதம் 7-ம் தேதி. ஞாயிற்றுக்கிழமை.

71381-004-534732C4

இரண்டாம் உலகப்போரின் போக்கையே திசைதிருப்பும் வகையில் ஓர் அதிரடித் தாக்குதல் நடந்தது. தாக்கியது ஜப்பான். பாதிக்கப்பட்டது அமெரிக்கா. அதுதான் பேர்ல் துறைமுகத்தின் (Pearl Harbour) மீதான தாக்குதல். அமெரிக்காவை மிரட்ட வேண்டுமென்றால், அமெரிக்கக்  கடற்படையை நாசமாக்க வேண்டும்.

அமெரிக்கக் கடற்படையில் மிக முக்கியமானது ‘பசிபிக் ஃபிளீட்’ என்று சொல்லப்படும் போர்க் கப்பல்கள் அணி.

இவை ஹவாய்த் தீவுகளில் உள்ள பேர்ல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கப்பல்கள் மீது அதிரடியாகத் தாக்குதல் நடத்தி அழித்துவிட்டால், அமெரிக்கா நிலைகுலைந்துபோகும். திட்டமிட்டபடி ஆக்கிரமிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம் என்பது ஜப்பானின் திட்டம்.

ஜப்பானின் இரண்டாயிரத்துக்கும் அதிகமான போர் விமானங்கள், பேர்ல் துறைமுகத்தின் மேல் மேகம் போலச் சூழ்ந்து குண்டுமழை பொழியத் தொடங்கின.

துறைமுகத்தில் இருந்த ராணுவத் தளவாடக் கிடங்குகளும் போர்க் கப்பல்களும் பெரும் அழிவைச் சந்தித்தன. மரணம் அடைந்த அமெரிக்க  வீரர்களின் எண்ணிக்கை 2500-க்கும் அதிகம்.

ஜப்பானுக்கு ஆதரவாக   அமெரிக்காமீது படையெடுக்கப் போவதாக, ஹிட்லரும் அறிவித்தார். இத்தாலியில் முசோலினியும் ஆதரவுக் குரல் கொடுத்தார்.

பேர்ல் துறைமுகத் தாக்குதல் நடவடிக்கை ஆரம்பித்த அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்தில், பசிபிக் பெருங்கடல் பகுதியில் கணிசமான பகுதி ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

picture-pearl-harbour-pearl-harbor-attack-attack-war-ships-sailors-shots-explosions-boatpicture-pearl-harbour-pearl-harbor-attack-attack-war-ships-sailors-shots-explosions-boat

பேர்ல் துறைமுகத் தாக்குதலுக்குப் பிறகு, போரில் நேரடியாக ஈடுபடப் போவதாக அறிவித்தது அமெரிக்கா. ஜப்பானின் தாக்குதல் காரணமாக, ஏராளமான விமானங்களையும் கப்பல்களையும் இதர ஆயுதங்களையும் இழந்திருந்த அமெரிக்கா, ரகசியமாக, அசுர வேகத்தில் ஆயுதங்கள் மற்றும் விமானம், கப்பல் உற்பத்தியில் இறங்கியது.

இன்னொரு பக்கம், ரஷ்யாவின் மீது ஹிட்லர் படையெடுத்தார். ஹிட்லரது படையின் பெரும் பகுதி ரஷ்யாவுக்குப் போய்விட்டதால், நேச நாடுகளின் படைகள், ‘இதுதான் சரியான தருணம்’ என்று முடிவு செய்தன.

ஜெர்மனியின் ஆதிக்கத்தில் இருந்த பல நாடுகளையும் மீட்கும் நடவடிக்கையில் இறங்கின.

ஜெர்மானியப் படைகளை ரஷ்யப் படைகள் தோற்கடித்தன. இதையடுத்து, ‘ஆபரேஷன் ஓவர்லோட்’ (Operation Overload) என்ற பெயரில் நேசநாட்டுப் படைகள் எடுத்த நடவடிக்கையில் ஃபிரான்ஸ் மீட்கப்பட்டது.

நீண்டுகொண்டே போன இரண்டாம் உலகப் போர், அமெரிக்காவின் ஓர் அதிரடி முடிவு காரணமாக, முடிவுக்கு வந்தது. அதுதான் ஜப்பான் மீது அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சு.

Hiroshima-
ஹிரோஷிமா, நாகசாகி 1945, ஆகஸ்ட் 6. வழக்கம்போல்தான் அன்றும் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். சிறுவர்கள் பள்ளிகளுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள்.  பெரியவர்கள் அலுவலகத்துக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.

இப்படிப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நகரத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டபோது, ஜப்பானின் நேரப்படி காலை 9.15. ஜப்பான் மீது அணுகுண்டு வீச அமெரிக்க ராணுவத்துக்கு பச்சைக் கொடி காட்டியவர், அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன். ‘லிட்டில் பாய்’ (little boy) என்று பெயர் சூட்டப்பட்ட யுரேனியம் அணுகுண்டைச் சுமந்தபடி பறந்தது விமானம்.

அது ஒரு B29 சூப்பர் ஃபோர்ட்ரஸ் ரக போர் விமானம். அந்த விமானத்தின் கமாண்டர், பைலட் பால் டிப்பெட்ஸ் ஆணையிட்டார். அடுத்த நொடி ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசியது அந்த விமானம்.

அதிகபட்ச நாசம் விளைவிக்கும் நோக்கத்துடன், ஹிரோஷிமாவுக்கு 1900 அடி உயரத்திலேயே, அணுகுண்டு வெடித்துச் சிதறும் வகையில் குண்டு வீசப்பட்டது.

ஹிரோஷிமா மற்றும் அதைச் சுற்றியிருந்தப் பகுதிகளில் இருந்த பெரிய கட்டடங்கள், சீட்டுக் கட்டுபோல நொறுங்கி விழுந்தன. அணுகுண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதீதமான வெப்பத்தில் கட்டடங்களில் பயன்படுத்தப்பட்ட இரும்புச் சட்டங்கள் உருகின.

பச்சை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. கல்தூண்கள்கூட துகள்களாகச் சிதறின. விவரிக்க முடியாத அளவுக்கு ஏற்பட்ட வெளிச்சம் இறந்தவர்கள் ஏராளம்.

அணுகுண்டு வீசப்பட்டபொழுது வீசிய கடுமையான காற்றால், தீ மற்றப் பகுதிகளுக்கும் எளிதாகப் பரவியது. தீக் காயங்களால் ஏற்பட்ட எரிச்சலைத் தாங்க முடியாமல் ஆற்றுக்குள் குதித்த மக்கள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார்கள்.

8-6-2011-9-world-hiroshima-day-today
ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீச்சுக்கு எவ்வளவு பேர் பலியானார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், உடனடியாக மரணமடைந்தவர்கள் 66,000 பேர் என்றும், ஒட்டுமொத்தமாக 1,40,000 பேர் இறந்தனர் என்கிறார்கள்.

அணுகுண்டினால் ஏற்பட்ட நாசம், இத்துடன் நின்று போகவில்லை. இரண்டே வாரத்தில் கதிர்வீச்சு காரணமாக இறந்தவர்கள் 12,000 பேர். நகரத்தைவிட்டு பல கிலோ மீட்டர்கள் தள்ளி இருந்தவர்கள்கூட உருக்குலைந்து போனார்கள்.

வெகுதூரத்தில் இருந்தவர்கள், ‘அப்பாடா!’ என்று உயிர் பிழைத்து பெருமூச்சு விட்டபோதிலும், அணுக் கதிர்வீச்சின் பாதிப்புக்குள்ளானார்கள்.

லிட்டில் பாய் விளைவித்த பாதிப்புகளின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ஜப்பானுக்கு அடுத்த அடி விழுந்தது.

ஆகஸ்ட் 9-ம் தேதி ஃபேட் மேன் என்று பெயர் கொண்ட புளுட்டோனியம் அணுகுண்டை ஜப்பானின் மற்றொரு நகரான நாகசாகி மீது அமெரிக்கா வீசியது.

இரண்டாவது குண்டு வீசப்பட்ட நாகசாகி, ஜப்பானின் முக்கியத் துறைமுக நகரம். கப்பல் கட்டும் தளம். மக்கள் நெருக்கடி மிகுந்த நகரம். நகரத்தின் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியைக் குறிவைத்து அணுகுண்டு வீசப்பட்டது.

அது குறிதவறி நகரத்துக்கு அப்பால் விழுந்தது. இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் 39,000 பேர். அடுத்தடுத்த தோல்விகள், அணுகுண்டுகள் வீச்சு காரணமாக, அமெரிக்கத் தளபதி மெக் ஆர்த்தர் முன்னிலையில் நடுக்கடலில் ஜப்பானியப் படைகள் சரணடைந்தன.

அணுகுண்டு வீசப்பட்டு, அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் ஹிரோஷிமா, நாகசாகியில் இன்று பிறக்கும் குழந்தைகள் கூட கண் தெரியாமல், கால், கை ஊனத்துடன் பிறக்கின்றன.

அணுகுண்டின் வீச்சு அவ்வளவு சக்தி வாய்ந்தது. 1945 ஆகஸ்ட் 15-ம் தேதி, ஜப்பானிய மன்னர் ஹிரோஹிடோ ரேடியோ மூலமாக மக்களுடன் பேசினார்.

hirohito-620x360(ஜப்பானிய மன்னர் ஹிரோஹிடோ  emperor-hirohito-dictator)

The original recordings of Japanese royal emperor Hirohito’s surrender speech on the 15th of August 1945 have been made public by the Imperial Royal Household. This unique radio speech, in which the Japanese people for the first time heard the voice of the divine emperor, can now be heard at the internet.

(The original recordings of Japanese royal emperor Hirohito’s surrender speech on the 15th of August 1945 have been made public by the Imperial Royal Household. This unique radio speech, in which the Japanese people for the first time heard the voice of the divine emperor, can now be heard at the internet.)

தனது ரேடியோ உரையில், ஜப்பானின் எதிர்காலம் கஷ்டங்கள் நிரம்பியதாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டினார் மன்னர். ‘உலக முன்னேற்றத்துக்கு இணையாக ஜப்பானும் முன்னேற வேண்டும். இது பெரிய சவால்.

வளமான ஜப்பானை நிர்மாணிக்க முழு சக்தியையும் ஒன்று திரட்டுங்கள்.    நம்பிக்கை இழக்காதீர்கள்’ என்று ஊக்கமளிக்கும் விதத்தில் பேசினார் மன்னர்.

emperor-hirohito-dictatoremperor-hirohito-dictator

எதிர்காலம் பற்றிய பயம் ஒருபுறம் இருந்தபொழுதிலும், ‘போர் முடிவுக்கு வந்துவிட்டதே’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் ஜப்பானியர்கள்.

போரினால் ஏற்பட்ட மனித உயிர்கள் இழப்பு ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் ஜப்பானின் அடிப்படை வசதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டன. ஜப்பõனின் ÷தசிய வருமானத்தைப் போல இரண்டு பங்கு மதிப்புக்குச் சேதம் ஏற்பட்டிருப்பதாக மதிப்பிட்டார்கள்.

தேசத்தின் பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. பணவீக்கம் கட்டுப்பாடு இல்லாமல் ஏறிக் கொண்டே போனது. உணவுப் பொருள்களுக்கும், இதர அத்தியாவசியப் பொருள்களுக்கும் நாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

தொடரும்..
-எஸ்.சந்திர மௌலி-

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com