ilakkiyainfo

இரண்டாவது சுற்று ஆபத்து குறித்த அச்சத்தில் சில ஆசிய நாடுகள்

இரண்டாவது சுற்று ஆபத்து குறித்த அச்சத்தில் சில ஆசிய நாடுகள்
April 02
16:47 2020

கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டம் வெற்றியளிக்க தொடங்கியுள்ளது என நம்பிக்கை கொள்ளத்தொடங்கிய ஆசிய நாடுகள் இரண்டாம் சுற்று வைரசினை எதிர்கொள்கின்றன என கார்டியன் தெரிவித்துள்ளது.

எல்லைகள் மூடப்படுவதற்கு முன்னர் தங்கள் நாடுகளிற்கு செல்ல வேண்டும், தனிமைப்படுத்தல் உத்தரவுகளை பின்பற்றவேண்டும் என்பதற்காக அவசரஅவசரமாக தங்கள் நாடுகளிற்கு செல்லமுயல்பவர்களினால் ஆசிய நாடுகள் இரண்டாம் சுற்று வைரசினால் பாதிக்கப்படுகின்றன என கார்டியன் தெரிவித்துள்ளது.

ஆசிய நாடுகளில் மீண்டும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது அறிகுறிகள் அற்ற நோயாளர்கள் காரணமாக மீண்டும் சமூக பரவல் அச்சம் தோன்றியுள்ளதையடுத்து பல ஆசிய நாடுகள் மீண்டும் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன என கார்டியன் தெரிவித்துள்ளது.

corona_virus_hong_hongகொரோனா வைரசிற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பும் என  எதிர்பார்க்க முடியாது என கனடா பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வைரசினால் நாளொன்றிற்கு பத்துபேரிற்கு மேல் பாதிக்கப்படாத ஹொங்கொங் தற்போது வெளிநாடுகளில் இருந்து பலர் தாயகம் திரும்பிய பின்னர் நாளொன்றிற்கு 50 நோயாளிகள் இனம் காணப்படும் நிலையை எட்டியுள்ளது.

கொரோனா வைரசிற்கான உலகின் சிறந்த உதாரணமாக கருதப்பட்ட சிங்கப்பூர் இரண்டாவது சுற்று ஆபத்தினை எதிர்கொள்கின்றது.

corona_singapore1சிங்கப்பூர் அலட்சியமாக காணப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகளின் மத்தியில் கடந்த நான்கு வாரத்தில் நால்வர் பலியாகியுள்ளதுடன் 1100 பேர் நோய் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சிங்கப்பூர் கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

தென்கொரியாவில் இரண்டாவது சுற்று வைரஸ் குறித்த அச்சம் காணப்படும் அதேவேளை சீனாவில் வெளிநாடுகளில் இருந்து தாய்நாடு திரும்பியவர்கள் மற்றும்; வெளிநாட்டவர்கள் காரணமாக அச்சம் தோன்றியுள்ளது

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com