இந்தியாவின் தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு படகு மூலம், கடத்த முயன்ற 2 ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் அடங்கிய 75 மூடைகளை நடுக்கடலில் வைத்து நாட்டுபடகுடன் இந்திய க்யூ பிரிவு பொலிசார் பறிமுதல் செய்தனர்.

மண்டபம் வடக்கு மீன் பிடி துறைமுகம் அருகே கரையில் உரிய பதிவு எண் இல்லாத  நாட்டு படகு ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்ததை அவதானித்த கியூ பிரிவு பொலிசார்,  படகில் ஏறி சோதனை செய்தபோது, படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டை மூட்டையாக மஞ்சள் படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்தது க்யூ பிரிவு  பொலிசார் மேற்கொண்ட  விசாரணையில்  நாட்டுபடகு தங்கச்சிமடத்தை  சேர்ந்தது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என  க்யூ பிரிவு பொலிசார்  தெரிவித்தனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட மஞ்சளின் இலங்கை பெறுமதி சுமார் 65 இலட்சம் என க்யூ பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply