ilakkiyainfo

உண்மைகளை உலகிற்கு மறைத்தனர்- சீன அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்க மாநிலம் வழக்கு

உண்மைகளை உலகிற்கு மறைத்தனர்- சீன அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்க மாநிலம் வழக்கு
April 22
20:20 2020

சீன அரசாங்கத்திற்கு   எதிராக அமெரிக்காவின் மாநிலமொன்று வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அமெரிக்காவின் மிசூரி மாநிலமே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் ஆபத்து குறித்த உண்மைகளை சீன தலைவர்கள் மறைத்தனர் என மிசூரி மாநிலம் குற்றம்சாட்டியுள்ளது.

குடியரசுக்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மிசூரிமாநிலத்தின்  அதிகாரிகள் சமஸ்டி நீதிமன்றில் சீனாவிற்கு எதிரான வழக்கை தாக்கல் செய்துள்ளதுடன் சீனா நஸ்டஈட்டை செலுத்தவேண்டும், எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாதுகாப்பு உபகரணங்களை பதுக்கும் சீனாவின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொவிட் 19 மூலம் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்த உண்மைகளையும் அது மனிதர்கள் மத்தியில் பரவக்கூடியது என்பதையும்   சீனாவின் தலைவர்கள் மறைத்தனர், எனமிசூரியின் சட்டமா அதிபர் எரிக் ஸ்கிமிட் தெரிவித்துள்ளார்.

 

சீன அரசாங்கத்தை இந்த நடவடிக்கைகளிற்காக பொறுப்புக்கூறச்செய்யவேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் மிசூரிமாநில அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

வுகானில் வைரஸ் குறித்து வெளியான ஆரம்ப கட்ட தகவல்களை சீன அதிகாரிகள் தணிக்கை செய்தனர், முன்கூட்டியே எச்சரித்தவர்களை மௌனமாக்கினர் என மிசூரி அதிகாரிகள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

வைரஸ் மனிதர்களிடமிருநது மனிதர்களிற்கு பரவாது என சீன அதிகாரிகள் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர் எனவும் மிசூரி அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை அமெரிக்காவின் இறைமை விடுபாட்டுரிமை காரணமாக வெளிநாட்டு அரசாங்கங்களிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை சாத்தியமில்லை என்பதால் இந்த வழக்கு வெற்றிபெறுவதற்கான சாத்தியம் குறைவு என ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com