முல்லைத்தீவு தேராவில் பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

 

ஊரடங்கு தளர்த்தபட்ட நேரத்தில் பொருட்கள் கொள்வனவுக்காக மோட்டார்  சைக்கிளில் சென்ற இளைஞர்கள் இருவர் தேராவில் தேக்கம் காட்டு பகுதியில் வீதியின் வளைவில் எதிரே வந்த கயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.

 

accபடுகாயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் வண்டி மூலம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

 

acc-1மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.