அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், எலி வேடமணிந்து நடமாடி வருகிறார். எலியின் தலை போன்ற முகக்கவசம், மற்றும் வால் அணிந்த அவர், எலியின் பாணியில் நடமாடுகிறார்.

 

ஜொனதன் லியோன்ஸ் என்பவரே இவ்வாறு விசித்திர வேடமணிந்து நடமாடுகிறார். கொரோனா பரவல் தடுப்புக்காக, சமூக இடைவெளியைப் பேணுவதற்கு இந்நடவடிக்கை தனக்கு உதவுவதாக அவர் கூறுகிறார்.

தலையை மறைக்கும் முகக்கவசம் அணிந்திருப்பதால்,  ‘மக்கள் என்னிடமிருந்து 6 அடி தூரம் விலகியிருக்கிறார்களா என நான் கவலையடைய வேண்டியதில்லை’ என்கிறார் லியோன்ஸ்.

 

அவர், எலி வேடத்துடன் நியூ யோர்க் ரயிலில் பயணம் செய்யும் காட்சி அடங்கிய வீடியோவொன்று அண்மையில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

அதையடுத்து, ‘முகக்கவசம் அணிந்தமைக்காக உங்களுக்கு நன்றி’ என நியூயோர்க் போக்குவரத்து அதிகார சபை தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தது.

 

பாரிய பீட்ஸா துண்டு ஒன்றை எலி போன்று அவர் காவிச்செல்லும் காட்சியும் சமூகவலைத்தளங்களில் வைரலாகியமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share.
Leave A Reply