கட்டடத்தின் உச்சியில் வைத்து யுவதியை முத்தமிட்ட ஈரானிய சாகச வீரர் கைது! (வீடியோ)

ஈரானிய பிரபல சாகச வீரர் ஒருவர் கட்டடமொன்றின் உச்சியில் வைத்து யுவதியொருவருடன் முத்தமிடும் படங்களை வெளியிட்டநிலையில் கைது செய்யப்பட்டுள்ளர்.
அலிரெஸா ஜபாலகி (Alireza Japalaghy) எனும் 28 வயதான இந்த இளைஞர் செங்குத்தான கட்டங்களில் ஏறுவது, இரு கட்டங்களின் உச்சிகளுக்கு இடையில் பாய்வது போன்ற சாகசங்களில் ஈடுபடும் பார்க்கர் வீரர் ஆவார்.
ஈரானில் மிகப் பிரபலமான பார்க்கர் வீரராக (parkour athlete) அலிரெஸா விளங்குகிறார். சமூக வலைத்தளங்களில் தனது சாகசங்களைப் படம்பிடித்து வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவரை 133,000 இற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
அண்மையில் கட்டடமொன்றின் உச்சி விளம்பில் வைத்து யுவதி ஒருவருடன் தான் முத்தமிடும் படத்தை சமூக ஊடகங்களில் அலிரெஸா வெளியிட்டிருந்தார். மேற்படி யுவதி கட்டைகாற்சட்டையும் டொப்ஸும் அணிந்திருந்தார்,
இதையடுத்து ஆபாசமான நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக அவர் கைது செய்யப்பட்டார் என ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் தெஹ்ரானின் கணினி விவகார பொலிஸார் கைது செய்துள்ளனர் என தெஹ்ரான் நகரின் பொலிஸ் தலைவர் ஹொசைன் ரஹிமி தெரிவித்தார் என ஈரானின் ஐ.எஸ்.என்.ஏ. செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
அலிரெஸாவுடன் படத்தில் காணப்படும் பெண்ணும் தேடப்படுவதாகவும் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸ் அதிகாரி ஹொசைன் ரஹிமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முன்னாள் பொலிஸ் அதிகாரியான தனது தந்தை காணாமல் போயுள்ளார் எனவும் இது குறித்து விசாரணைகளை பொலிஸார் நிறுத்திவிட்டனர் எனவும் அலிரெஸா ஜபாலகி கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment