ஒரு இளம் ஜோடி, பெற்றோரின் அனுமதியின்றி இணைந்து வாழ விரும்பியதையடுத்து கோபம் அடைந்த காதலியின் பெற்றோர் காதலனை தலைகீழாக கட்டி தொங்கவிட்ட சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.

 

23 வயதான இளம் பெண்  தனது   20 வயது காதலனுடன் இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.

இந்த ஜோடி  ஒன்றாக வாழ்வதைக் கண்டுபிடித்த பெண்ணின் குடும்பத்தினர் கோபமடைந்தனர். அவர்களின் குடும்ப வழக்கத்தை மீறியதாகக் குற்றம் சாட்டி ஆத்திரமடைந்த பெற்றோர் இளைஞனை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கியுள்ளதுடன் அவர்களின் மகளை வீடு திரும்புமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

 

குறித்த இளைஞர் அவரின் பெற்றோரால் மீட்கப்பட்டு வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். எனினும் அவர் வீடு திரும்பியதும் கடுமையான தலைவலி இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தனது மகன் மிருகத்தனமாக தாக்கப்பட்டதாக அவரின் தாயார் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தனது மகனுக்கு எதிரான ‘மனிதாபிமானமற்ற துஷ்பிரயோகம்’ என்று அவரின் தாயார் மேலும் தெரிவித்துள்ளார்.