பி.எம்.டபிள்யூ ரக கார் ஒன்­றுக்கும் 10 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்­க­ளுக்கும் ஆசைப்­பட்ட நபர் ஒருவர் 31 இலட்ச ரூபாயை இழந்த சம்­பவம் யாழில் இடம்­பெற்­றுள்­ளது.

ஒரு மாத காலத்­துக்கு முன்னர் அவ­ரது மகளின் கைத்­தொ­லை­பே­சிக்கு, லண்­டனில் இடம்­பெற்ற சீட்­டி­ழுப்பு ஒன்றில் உங்­களின் கைத்­தொ­லை­பேசி இலக்­கத்­துக்கு புதிய ரக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும் 10 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்­களும் கிடைத்­துள்­ள­தா­கவும் இது தொடர்­பி­லான மேல­திக தக­வல்­களைப் பெற்­றுக்­கொள்ள கீழுள்ள மின்­னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்­ளு­மாறு குறுஞ் செய்தி ஒன்று வந்­துள்­ளது.

இதனை நம்பி குறித்த பெண் அந்த மின்­னஞ்­ச­லுடன் தொடர்பை ஏற்­ப­டுத்­தி­ய­போது, சீட்­டி­ழுப்பில் வெற்றி பெற்­றுள்­ளீர்கள் என கூறி சில போலி ஆவ­ணங்கள், கார், காரின் திறப்பு படம் மற்றும் கட்­டுக்­கட்­டாக ஸ்ரேலிங் பவுண்கள் உள்ள புகைப்­ப­டங்­கள் மின்­னஞ்சல் ஊடாக அவ­ருக்கு அனுப்பப்­பட்­டுள்­ளது.

வைப்பகப்படம்

அதன் பின்னர் குறித்த மின்­னஞ்­சலில் இருந்து முதல் கட்­ட­மாக ண்­டனில் வரி கட்ட வேண்டும் என கோரி 92 ஆயிரம் ரூபாவை வங்­கியில் வைப்­பி­லி­டு­மாறு கோரி­யுள்­ளனர்.

அதனை நம்பி இவர்கள் வங்­கியில் பணத்தை வைப்­பி­லிட்­டுள்­ளனர். பின்னர் ஒரு கிழமை இடை­வெ­ளியில் திணைக்­க­ளங்­க­ளுக்கு வரி கட்ட வேண்டும் உள்­ளிட்ட சில கார­ணங்­களைக் கூறி மின்­னஞ்­சல்­களை அனுப்பி கட்டம் கட்­ட­மாக 31 இலட்ச ரூபா பணத்தை அந்தக் கும்பல் பெற்­றுள்­ளது.

இறு­தி­யாக கடந்த ஒரு சில தினங்­க­ளுக்கு முன்னர் உங்­க­ளுக்­கான பண பரி­சிலும் காரும் இலங்கை வந்து விட்­டது எனவும் அதனை பெற்­று­கொள்ள கொழும்பு வெள்­ள­வத்தை பகு­திக்கு வரு­மாறும் கூறப்­பட்­டுள்­ளது.

அதனை நம்பி குறித்த குடும்­பத்­தினர் கொழும்பு சென்­றுள்­ளனர்.  அங்கு அவர்­களை சந்­தித்த நபர் ஒருவர் கறுத்தப் பெட்டி (சூட்கேஸ்) ஒன்றைக் கொடுத்து, பரி­சுத்­தொ­கை­யான ஸ்ரேலிங் பவுண் பணமும், காரின் திறப்பும் உள்­ளது எனவும் கூறி அந்த பெட்­டியைக் கைய­ளித்­துள்ளார்.

asweqqqபெட்­டியை உடனே திறந்து பார்க்­கா­தீர்கள். இந்தப் பரி­சுத்­தொகை தொடர்பில் இலங்கை அர­சாங்­கத்­துக்குத் தெரிய வந்தால் இலங்­கையில் விசா­ர­ணை­களை எதிர்­கொள்ள வேண்­டி­வரும் அத்­துடன், வரி­யாக பெருந்­தொகை கட்ட வேண்டி வரும் நீங்கள் வீடு செல்­லுங்கள். இந்த பெட்­டியின் திறப்பை தபால் மூலம் அனுப்பி வைக்­கிறேன் எனக் கூறி குறித்த மர்ம நபர் அங்­கி­ருந்து சென்­றுள்ளார்.

அதன் பின்னர் வீடு திரும்­பிய இவர்கள் சில தினங்கள் கடந்த நிலை­யிலும் திறப்பு வராத நிலையில் மின்­னஞ்சல் ஊடாக அந்த மர்ம நபர்­களைத் தொடர்பு கொள்ள மின்­னஞ்­சல்­களை அனுப்­பிய போது பதில்கள் வர­வில்லை.

தம்மை கொழும்­புக்கு அழைத்த தொலை­பேசி இலக்­கத்தை தொடர்பு கொள்ள முயற்­சித்­த­போது, குறித்த தொலை­பேசி இலக்கம் செய­லி­ழந்து காணப்­பட்­டது.

அத­னை­யடுத்து சந்­தேகம் அடைந்­த­வர்கள் குறித்த பெட்­டியை உடைத்துப் பார்த்த போது, உடைந்த கண்­ணாடிப் போத்­தல்கள், பஞ்சு, நாணயத் தாள்கள் அளவில் வெட்­டப்­பட்ட கட­தாசித் துண்­டுகள் என்­பன காணப்­பட்­டுள்­ளன. அதன் போதே அவர்கள் தாம் ஏமார்ந்­ததை உணர்ந்­துள்­ளார்கள்.

இது தொடர்பில் நேற்றுமுன்தினம் திங்­கட்­கி­ழமை காங்­கே­சன்­துறை பிராந்­திய பொலிஸ் அத்­தி­யட்­சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த மோசடி கும்பல் பல்வேறு வங்கி கணக்குகள் ஊடாகவே பணத்தை ஏமாற்றிப் பெற்றுள்ளனர் எனவும், அது தொடர்பிலான விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் பொலி ஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply