Site icon ilakkiyainfo

கை – கால்கள் கட்டப்பட்ட நிலையில் யுவதி மீட்பு

அம்பாறை – தமன, சீனத் தோட்டம் பகுதியில், கை – கால்கள் கட்டப்பட்ட நிலையில், யுவதியொருவர், இன்று (09) காலை மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட யுவதி, அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மகள் கடத்தப்பட்டுள்ளதாக பெண்ணொருவர், வென்னப்புவ – கந்தானகெதர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்ட யுவதியே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிகத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version