உணவு, உடைக்கான தேடுதல் வேட்கையைவிட, பாலியல் ரீதியான தேடுதலுக்கு மனித மனம் அதிகம் ஏங்குகிறது.

அந்த வகையில் தற்போது ஆண்களையும், பெண்களையும் அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது, ‘செல்போன் செக்ஸ் உரையாடல்’.

கொரோனா தொடர்புடைய ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிலே முடங்கிக் கிடக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆபாச படங்கள் அதிக அளவில் பார்க்கப்படுவதாக போலீசார் எச்சரிக்கிறார்கள். அதோடு செல்போன் ஆபாச உரையாடலும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

செல்போன்கள் இப்போது அதனை உபயோகிப்பவரின் கைக்குள்ளும், அவரது வீட்டு படுக்கை அறைக்குள்ளும் எல்லாவற்றையும் கொண்டு வந்து காட்சிகளாகவும், ஒலிகளாகவும் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

 

இதனால் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருந்தாலும், கெட்ட விஷயங்கள் ஒன்றிரண்டு ஆங்காங்கே நடந்து, சம்பந்தப்பட்ட நபர்களை ஆழ்ந்த சோகத்திற்குள் அமுக்கிவிடுகிறது.

செல்போன் மூலம் இணையதளங்கள் வழியாக பாலியல் காட்சிகளை பார்த்து ரசித்தவர்கள், இப்போது பெண்களின் குரல்களில் வசியம் கொண்டு, அவர்களது கிளர்ச்சியூட்டும் பேச்சுக்கு அடிமையாகி, பணத்தை இழப்பதோடு, மிகுந்த மன உளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள்.

மனித மனம் விந்தையானது. அது ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைந்தது. உணவு, உடைக்கான தேடுதல் வேட்கையைவிட, பாலியல் ரீதியான தேடுதலுக்கு மனித மனம் அதிகம் ஏங்குகிறது.

புதிது புதிதாக எந்த வழியில் அது கிடைத்தாலும் அனுபவித்துப் பார்க்கத் துடிக்கிறது. அந்த வகையில் தற்போது ஆண்களையும், பெண்களையும் அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது, ‘செல்போன் செக்ஸ் உரையாடல்’.

இந்தியாவை பொறுத்தவரையில் கணவனும்-மனைவியும் பாலியல் பற்றி அதிகம் பேசுவதில்லை. தாம்பத்தியம் வைத்துக்கொள்ளும் மனநிலைக்கு அவர்கள் வரும்போது, கிளர்ச்சியூட்டும் உரையாடல் அவர்களுக்குள் நின்றுவிடுகிறது.

செயல்தான் நடக்கிறது. அதனால் பாலியல் ரீதியான பேச்சுக்கு அவர்கள் மனம் அதிகம் ஏங்குகிறது. அந்த ஏக்கம்தான் ‘போன் செக்ஸ்’ வியாபாரிகளுக்கு மூலதனமாகிவிடுகிறது.

அழகான பெண்களிடம் பேச தயங்கும் ஆண்கள் இப்போதும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படி நேரடியாக பேச தைரியமில்லாத ஆண்களுக்குள், அழகான பெண்களிடம் அந்தரங்கமான விஷயங்களை பேசவேண்டும் என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.

அப்படி ஏங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஆணிடம், ஒரு பெண் பாலியல் ரீதியாக போனில் பேசும்போது, அதன் மூலம் தன் ஏக்கத்தை தீர்த்துக்கொள்ள அவர் விரும்புகிறார்.

அதுவும் தனது படுக்கை அறையில் யாருக்கும் கேட்காத நிலையில், மற்றவர்கள் யாராலும் தொந்தரவு தர முடியாத நிலையில் அந்த ‘பேச்சு இன்பம்’ கிடைக்கும்போது, ‘அதையும் அனுபவித்து பார்த்துவிடலாம்’ என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது.

எதிர்முனையில் பேசும் பெண்ணின் பேச்சு அந்த ஆணை கிளர்ச்சியடைய வைத்துவிடுகிறது. உலக அளவில் பெண்களைவிட, ஆண்களே இதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

கொரோனா காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை மளமளவென உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

போன் மூலமான பேச்சு இன்பத்தில் அளவற்ற ஆர்வம் ஏற்படும்போது, அவர்களுக்கு நேரடியான பாலியல் உறவில் நாட்டம் குறையும்.

எல்லையற்ற ‘பேச்சு இன்பம்’ பின்பு ஒருவித மனநோயாக மாறும். பேச்சு இன்பம் மனதை பாதிக்கும் நிலைக்கு செல்லும்போது மதுவுக்கு அடிமையானவர்களைப் போன்று, புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களைப் போன்று, இதற்கும் அடிமையாகி விடுவார்கள்.

பின்பு அதில் இருந்து அவர்களை மீள வைப்பது கடினம். பேச்சு இன்பத்தால் மனதளவில் பாதிக்கப்படுகிறவர்களுக்கு குற்றஉணர்வு, சுயபச்சாதாபம், தூக்கமின்மை, எதிலும் ஆர்வமின்மை, அளவுக்கு அதிகமான சோர்வு, சக மனிதர்கள் மீது எரிச்சல் போன்றவை அதிகம் ஏற்படும். பொருளாதார நெருக்கடியும் அவர்களுக்கு தோன்றும்.

அன்பு, நட்பு, காதல் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களும், தன்னம்பிக்கை இல்லாதவர்களும், நேருக்கு நேர் பெண்களை பார்த்து பேச கூச்சம் கொண்டவர்களும், அதிக மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களும், பேச்சு இன்ப செயல்பாடுகளுக்கு எளிதில் அடிமையாகிவிடுவார்கள்.

வசதிபடைத்த முதியோர்களான ஆண்கள் இந்த விஷயத்தில் மிக கவனமாக இருக்கவேண்டும். ஏன்என்றால் இந்த பலவீனத்தை அவர்கள் வெளிப்படுத்திவிட்டால், இதை பயன்படுத்தி பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் புகுந்துவிடுவார்கள்.

அந்தரங்கமான பேச்சுக்களை அவர்கள் ஆதாரமாக்கி ‘பிளாக்மெயில்’ செய்யும் சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன.

போன் செக்ஸ்சில் யாரும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அப்படியே ஈடுபட்டிருந்தாலும் விரைவாக அதில் இருந்து மீளும் வழியைத் தேடவேண்டும்.

மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும் இந்த கொரோனா பீதிகாலகட்டத்தில் அவர்கள் தனிமையில் இருப்பதை தவிர்க்கவேண்டும்.

குடும்பத்தினரோடு சேர்ந்து விளையாடி மகிழவேண்டும். குடும்பத்தினரோடு மகிழ்ச்சியை கொண்டாடுகிறவர்கள், ‘பேச்சு இன்பத்துக்கு’ அடிமையாக மாட்டார்கள்.

Share.
Leave A Reply