ilakkiyainfo

கொரோனா வைரஸ் இலங்கையில் மரண கணக்கை தொடங்கியது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 113 ஆக உயர்வடைந்தது.

கொரோனா வைரஸ் இலங்கையில் மரண கணக்கை தொடங்கியது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 113 ஆக உயர்வடைந்தது.
March 28
16:04 2020

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவரே கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு அங்கொடை ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ள குறித்த நபருக்கு நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தை மேற்கோள்காட்டி அரசாங்கம் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 113 ஆக உயர்வடைந்துள்ளது.

f0819eaf13f3500d140df687488182e5_XLஇன்றைய தினம் புதிதாக 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.

கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் இதுவரை சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 119 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, சுவிட்சர்லாந்தில் வசித்த இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்திருந்தார்.

கடந்த 25ஆம் தேதி அவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com