சமூக ஊடகங்களை மூடிவிடப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இதேவேளை அவர் சமூக ஊடகங்கள் தொடர்பான நிறைவேற்று அதிகார உத்தரவொன்றில் அவர் கையெழுத்திடவுள்ளார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

 

பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ் அப் முதலான சமூக ஊடகங்கள் தற்போது உலக மக்களின் தொடர்பாடலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில், டுவிட்டர் முதலான சமூக ஊடக நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி ட்ரம்புக்கும் இடையிலான முறுகல்நிலைக்கு மத்தியில் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தபால்மூல வாக்களிப்பில் மோசடிகள் குறைவாக இருக்கும் என்பதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என ஜனாதிபதி ட்ரம்ப் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இத்தகவலில் பெக்ட் செக்கிங் (உண்மை சோதனை) இணைப்பை டுவிட்டர் நிறுவனம் இணைத்திருந்தது.

அத்துடன், ட்ரம்பின் தகவல் ஆதாரமற்றது எனத் தெரிவிக்கும் பக்கமொன்றுக்கான இணைப்பையும் டுவிட்டர் நிறுவனம் இணைத்திருந்தது.

இதன்பின், டுவிட்டர் நிறுவனம் பேச்சு சுதந்திரத்தை தடுக்கிறது என ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.

புழமைவாத குரல்களை அத்துடன், சமூக ஊடகங்கள் மௌனமாக்குகின்றன என குடியரசுக் கட்சியினர் கருதுகின்றனர். நாம் அவற்றை (சமூக ஊடகங்களை) வலிமையாக ஒழுங்குபடுத்துவோம் அல்லது மூடிவிடுவோம்.

2016 இல் அவர்கள் என்ன செய்ய முயற்சித்தார்கள் என்பதை நாம் கண்டோம். அதில் அவர்கள் தோல்வியுற்றார்கள். ‘ என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இதேவேளை அவர் சமூக ஊடகங்கள் தொடர்பான நிறைவேற்று அதிகார உத்தரவொன்றில் இன்று வியாழக்கிழமை அவர் கையெழுத்திடவுள்ளார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அந்த உத்தரவு விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, அமெரிக்க காங்கிரஸில் இது தொடர்பாக சட்டங்கள் இயற்றப்படாமல் சமூக ஊடங்கள் நிறுவனங்கள் தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்ப் எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்ற கேள்வியும் ஊடகங்களால் எழுப்பப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply