ilakkiyainfo

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும் கைதாவர்!

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும் கைதாவர்!
April 07
05:19 2020

நாட்டின் தற்போதைய நிலைமைகள்  தொடர்பில்   சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பகிர்ந்தார்கள் என்ற சந்தேகத்தில்  இதுவரை  9 பேரை பொலிஸார் கைது  செய்துள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்று (07)  காலை இலங்கை வானொலிக்கு வழங்கிய தொலைபேசி ஊடான செவ்வியிலேயே  அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,  இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பெண்ணாவார். இவரும் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை,  சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பதிவிடுவோர் மட்டுமல்ல அவற்றைப் பகிர்ந்து கொள்வோரையும் கைது செய்வதற்கான  நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் விடயங்களைக் கண்காணிப்பதற்காக எம்மிடம் தனிப் பிரிவு ஒன்று  செயற்படுவதுடன் அனைத்தையும் அந்தப் பிரிவு கண்காணித்து வருகிறது.

 இதுதவிர, தவறான தகவல்களைப் பதிவிடுவோர் தொடர்பில் பொதுமக்களும் எமக்குத் தகவல்களை வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com