ilakkiyainfo

சிந்திக்க தூண்டும் சந்திப்பு! –ஏ.எல்.நிப்றாஸ் (கட்டுரை)

May 10
01:44 2015

 

சில விட­யங்கள் நம்ப முடி­யா­த­வை­யா­கவும் ஆச்­ச­ரி­ய­மா­ன­வை­யா­கவும் இருப்­ப­துண்டு. நடை­பெ­றாது என்று நாம் எண்­ணி­யி­ருந்த ஒரு நிகழ்­வாக அது இருப்­ப­தற்­கான நிகழ்­த­கவே அதி­க­மாகும்.

அண்­மைக்­கா­ல­மாக நமது நாட்டின் அர­சி­ய­லா­னது இவ்­வா­றான அனு­ப­வங்­களை தொடர்ச்­சி­யாக தந்து கொண்­டி­ருக்­கின்­றது.

மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்தில் பத்­தோடு பதி­னோ­ரா­வது அமைச்­ச­ராக பத­வி­வ­கித்த மைத்திரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி வேட்­பா­ளா­ராக முன்­னி­றுத்­தப்­பட்­டது, அவ­ரது வெற்றி, எந்­த­வித சச்­ச­ர­வு­களும் இல்­லாமல் ஜனா­தி­பதிப் பதவி ஒப்­ப­டைக்­கப்­பட்­டமை, 19ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் நிறை­வேற்­றப்­பட்­டமை எனத் தொடங்கும் அபூர்­வ­மான நிகழ்­வுகள் மைத்­தி­ரி­பால சிறி­சேன மஹிந்த ராஜ­ப­க் ஷ சந்­திப்பு வரை வந்து நிற்­கின்­றன.

தோல்­வி­யுற்ற நகர்­வுகள்

கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் வெளி­யாகிக் கொண்­டிருந்த வேளையில் ஆட்­சியை தக்க வைத்துக் கொள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ கடு­மை­யான பிர­யத்­த­னங்­களை மேற்கொண்­டி­ருந்தார்.

அது கைகூ­டாமல் போய்­விட்ட பிறகும் அதி­கா­ரம்­மிக்க பதவி மீதான அவ­ரது வேட்கை தணி­ய­வில்லை என்­பது கண்­கூடு.

இலங்­கையின் வர­லாற்றில் பத­விக்­காலம் முடி­வுற்ற பின்னர் அல்­லது தோற்­க­டிக்­கப்­பட்ட பின்னர் எந்த­வொரு ஜனா­தி­ப­தியும் இதற்கு முன்னர் செய்­தி­ராத அர­சியல் நகர்­வு­களை மஹிந்த மேற்­கொண்டு வரு­கின்றார்.

ஆட்­சியை தக்­க­வைப்­ப­தற்கு மஹிந்த மேற்­கொண்­ட­தாக நம்­பப்­படும் சதித்­திட்­டங்­களை ஆதா­ர­பூர்வமாக நிரூ­பிக்க முடி­யாமல் போனமை அவ­ருக்கு அதீத தைரித்தை அளித்­தி­ருக்கும்.

ஆரம்­பத்தில் சுதந்­திரக் கட்சி தம்­பக்கம் இருக்­கின்­றது என்ற பலத்தை காட்டி அதன்­மூலம் நினைத்­ததை சாதிப்­ப­தற்கு நினைத்தார்.

மக்கள் அலையை காண்­பித்து தமக்கு ஆத­ரவு இருப்­ப­தாக ஒரு பிர­மையை உரு­வாக்­கினார். பின்னர் பொது பல­சே­னா­வையும் அவர்­க­ளது கூட்­டா­ளி­க­ளான இன­வாத அமைப்­புக்­களை பயன்­ப­டுத்தி தனக்கான பிர­சா­ரங்­களை முடுக்­கி­விட்டார்.

அதன் பிற்­பாடு 19ஆவது திருத்­தத்தை தோற்­க­டிக்கும் முயற்­சியில் இறங்­கினார். ஆனால் இப்­ப­டி­யான எல்லா நகர்­வு­களும் தோல்­வியில் முடி­வ­டைந்­தன அல்­லது அவர் எதிர்­பார்த்த பலனை தர­வில்லை.

அது மாத்­தி­ர­மன்றி கடந்த மூன்று வாரங்­க­ளாக நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்ற அதி­ரடி நட­வ­டிக்­கைகள், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் ஏனைய ஊழல்­வா­திகள் மற்றும் மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கும் வயிற்றைக் கலக்­கி­யுள்­ளது.

மைத்­திரி அர­சாங்கம் மெத்­தனப் போக்­கையும் மென்­மை­யான அணு­கு­மு­றை­யையும் கடைசி வரையும் கடைப்­பி­டிக்கப் போவ­தில்லை என்­பது அவர்­க­ளுக்கு உணர்த்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

blogger-image-1000577265முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­ப­க் ஷ கைது செய்­யப்­பட்டு தொடர்ந்தும் சிறை வைக்­கப்­பட்­டுள்ளார்.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கு காலக்­கெடு விதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அம்­பா­றையில் நடை­பெற்ற தெயட்ட கிருள கண்­காட்­சியின் நிதி மோசடி தொடர்­பாக மேலும் முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைதா­கி­யுள்ளார். இதற்கு முன்­னரும் பின்­னரும் பலர் விசா­ரிக்­கப்­பட்­டுள்­ளனர்.

எல்­லா­வற்­றுக்கும் மேலாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­வுக்கே இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு விசா­ர­ணைக்­கான சமிக்­ஞையை ஏற்­க­னவே வெளிப்­ப­டுத்தி விட்­டது.

எனவே, புதிய அர­சாங்கம் மேற்­கொண்ட இவ்­வா­றான அச்­ச­மூட்டி எச்­ச­ரிக்கை செய்யும் அதி­ர­டி­களால், ஒட்­டு­மொத்­த­மாக முன்­னைய ஆட்­சியை நாச­மாக்­கிய எல்­லோரும் கிட்­டத்­தட்ட ‘பிச்சை வேணாம் நாயைப் பிடி’ என்ற நிலை­மைக்கே வந்­தி­ருக்­கின்­றார்கள்.

முன்னாள் அரச தலை­வரும் இதற்கு விதி­வி­லக்­கல்ல என தோன்­று­கின்­றது. இல்­லை­யென்றால், தன்ன­ளவில் இன்னும் ஒரு ஜனா­தி­ப­தி­யாக தன்னை நினைத்துக் கொண்­டி­ருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ­ப­க் ஷ, தன்­னு­டைய இறு­மாப்பை தளர்த்திக் கொண்டு ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சே­ன­வு­ட­னான சந்­திப்­புக்கு வலிய வந்­தி­ருக்க மாட்டார் என்றே கணிக்க முடியும்.

unnamed-129சந்­தித்த துரு­வங்கள்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ குழு­வி­ன­ருக்கும் இடை­யி­லான சந்­திப்பு கடந்த இரு தினங்­க­ளுக்கு முன்னர் பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் உள்ள ஜனா­தி­ப­தியின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது.

காலத்தின் மாற்­றத்­தையும்  இறை­வனின் நாட்­டத்­தையும் பார்த்­தீர்­களா? தனது அர­சாங்­கத்தில் தனக்குக் கீழே, பிர­ப­ல­மற்ற ஒரு சுகா­தார அமைச்­ச­ராக இருந்த ஒரு­வரை நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக சந்திக்க வேண்­டிய நிலைமை மஹிந்த ராஜ­ப­க் ஷவுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

தான் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவை மஹிந்த எவ்­வாறு நடத்­தினார் என்­பதை நாடே அறியும்.

இவ்­வா­றான ஒரு நிலையில் 63 இலட்சம் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்டு, குற்­றச்­சாட்­டுக்கள் பலவற்றுக்கும் ஆளா­கி­யுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை சந்­தித்துப் பேசு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால இட­ம­ளித்­தமை மிகவும் நல்­ல­தொரு முன்­மா­திரி.

நல்­லாட்­சியின் இலட்­ச­ணங்­களுள் ஒன்­றா­கவும் இது இருக்­கலாம். அதேபோல் பகை­யையும் வஞ்சத்தை கொஞ்­ச­நேரம் மறந்து விட்டு, ஜனா­தி­பதி தரப்­பி­ன­ருடன் பேசு­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி முன்­வந்­த­மையும் வர­வேற்­கப்­பட வேண்­டி­யதே.

அன்­றைய தினம் பிற்­பகல் 1.35 இற்கு ஆரம்­பித்த பேச்­சு­வார்த்தை ஒரு மணித்­தி­யா­லமும் 10 நிமிடங்களும் இடம்­பெற்­றது.

அடிப்­ப­டையில் இச் சந்­திப்பை நடாத்­து­மாறு மஹிந்த தரப்பே கோரி­யி­ருந்­த­மையால் பேசு­பொருட்களையும் அவர்­களே கொண்டு வந்­தி­ருந்­தனர். அதன்­படி ஐந்து முக்­கிய விட­யங்கள் குறித்து இங்கு பேசப்­பட்­டி­ருக்­கின்­றது.

1. எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொது வேட்­பா­ள­ராக மஹிந்த ராஜ­ப­க் ஷவை பெயர் குறிப்­பிட வேண்டும் என்று எதிர் தரப்­பினர் கோரி­யுள்­ளனர்.

இதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி, யாரையும் பிர­தமர் வேட்­பாளர் என்று பெயர் குறிப்­பிட்டு அறி­விப்­பது சுதந்­திரக் கட்­சி­யி­னதோ அல்­லது ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னதோ சம்­பி­ர­தாயம் அல்ல என்று கூறியுள்ளார்.

அத்­துடன் யாரை பிர­தான வேட்­பா­ள­ராக நிறுத்­து­வது என்­பது தொடர்பில் கட்­சியின் மத்­திய குழுவே தீர்­மா­னிக்கும் என்று சொல்லி அதற்கு முற்­றுப்­புள்ளி வைத்­துள்ளார்.

2. உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை கலைக்­காது அதன் ஆயுட்­கா­லத்தை நீடிக்­கு­மாறு மஹிந்த முன்­வைத்த கோரிக்­கையை மறு­த­லித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஆட்­சிக்­காலம் முடி­வுற்­றி­ருந்த மன்றங்­களின் காலம் மேலும் நீடிக்­கப்­ப­ட­மாட்­டாது.

முன்­னமே நீடிக்­கப்­பட்ட காலப்­ப­கு­தி­யுடன் (மே 15 மற்றும் 31) முடி­வு­றுத்­தப்­பட்டு செய­லா­ளர்­களின் கீழ் கொண்டு வரப்­படும். ஆனால் எந்த உள்­ளு­ராட்சி மன்­றத்­தையும் எமது அர­சாங்கம் விசே­ட­மாக கலைக்கப் போவ­தில்லை என்றார்.

3. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியை பலப்­ப­டுத்­து­மாறும் எதிர்­வரும் தோ்தலில் ஐ.ம.சு.மு.வாக இணைந்து செயற்­பட வேண்டும் என்றும் மஹிந்த இங்கு கோரிக்கை ஒன்றை முன்­வைத்தார். அதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி, இதில் பிரச்­சினை இல்லை. என்­றாலும் அதில் அங்கம் வகிக்கும் கட்­சி­களே இன்று பிள­வு­பட்­டுள்­ளன என்று சுட்­டிக்­காட்­டினார்.

4. தனது குடும்­பத்­தி­ன­ருக்கு எதி­ரான ஊழல் விசா­ர­ணைகள் தொடர்­பாக கவலை வெளியிட்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ, பொலிஸ் நிதி மோசடி விசா­ரணைப் பிரிவின் நட­வ­டிக்­கை­களை மட்­டுப்­ப­டுத்­து­மாறு கேட்டுக் கொண்டார்.

அவ்­வாறு செய்ய முடி­யாது என திட்­ட­வட்­ட­மாக கூறிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால, ஆனால் அர­சியல் பழி­வாங்கல் இல்­லாமல் சுயா­தீ­ன­மான விசா­ர­ணைகள் இடம்­பெறும் வகையில் கண்­கா­ணிப்­ப­தாக உறு­தி­ய­ளித்தார்.

5. கடை­சி­யாக, சுதந்­திரக் கட்­சியின் வேட்­பு­மனு சபையில் மஹிந்த ஆத­ரவு உறுப்­பி­னர்­க­ளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கோரிக்கை இங்கு முன்­வைக்­கப்­பட்­டது.

இதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி மைத்­திரி, கட்­சியின் உயர்­மட்ட மத்­தி­ய ­குழு உறுப்­பி­னர்­க­ளுடன் பேசிய பின்னர் எடுக்­கப்­படும் தீர்­மா­னத்தை அறி­விப்­ப­தாக கூறி­யுள்ளார்.

இந்த சந்­திப்பில் மேற்­கு­றிப்­பிட்ட 5 விட­யங்­களும் பேசி முடிக்­கப்­பட்ட நிலையில் அதா­வது பிற்­பகல் 3.45 மணிக்கு, தான் இன்­னு­மொரு நிகழ்­வுக்கு செல்ல வேண்டும் என்று கூறி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால எழுந்து கொண்டார். அவர் வெளி­யேறி சில நொடி­களில் மஹிந்த அணியும் புறப்­பட்டுச் சென்­றது.

இச்­சந்­திப்பில் மேற்­படி 5 விட­யங்­களும் பேசப்­பட்­ட­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. மறு­பு­றத்தில் சுதந்­திரக் கட்­சியின் செய­லாளர் அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலும் வேறுவி­த­மான சொற் பிர­யோ­கங்­க­ளுடன் இவ்­வி­ட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

இந்த சந்­திப்பில் மஹிந்த ராஜ­ப­க்ஷ பல விட­யங்­களை ஜனா­தி­ப­தி­யிடம் வின­ய­மாகக் கேட்டுக் கொண்டார். ஏனென்றால் அவ­ருக்கு வேறு தெரி­வு­களும் இப்­போ­தில்லை.

ஆனால் அவர் ஜனா­தி­ப­தியின் காலில் விழுந்­த­தாக சில ஊட­கங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

காலில் விழும் கட்­டத்­திற்கு இன்னும் மஹிந்த வர­வில்லை என்­பதும், காலில் விழு­வ­தென்றால் நான்கைந்து பேரை கூடவே கூட்டிச் சென்று ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு முன்னால் அதைச் செய்ய வேண்­டி­ய­து­மில்லை என்­பதும் இங்கு கவ­னிப்­பிற்­கு­ரி­யது.

உலக அர­சியல் சந்­திப்­புக்­களின் பொது­வான நியதி போல மிகவும் எதிர்­பார்ப்­புக்­குள்­ளா­கி­யி­ருந்த மைத்தி­ரி-­ ம­ஹிந்த சந்­திப்பும் இரு தரப்­புக்கும் 100 சத­வீத வெற்­றியை தராமல் நிறை­வு­பெற்றிருக்கின்றது.

முன்னாள் ஜனா­தி­ப­தியும்   இந்நாள் ஜனா­தி­ப­தியும் நல்­லெண்ண வெளிப்­பா­டாக இந்த சந்­திப்பை நடத்தி­யி­ருக்­கின்­றார்கள்.

தம்மைப் பற்­றிய நல்­ல­பிப்­ரா­யத்தை பொது மக்­க­ளி­டையே கட்­டி­யெ­ழுப்ப உதவும் என்­பது அவர்­க­ளது நம்­பிக்­கை­யாக இருக்­கலாம்.

ஒன்­றாக இருந்து பின்னார் ஒரு பூகம்­பத்தின் போது இரு துரு­வங்­க­ளான மலை­களைப் போல ஆகிவிட்­டி­ருந்த   ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் இவ்­வா­றான ஒரு சந்­திப்­புக்கு முன்­வந்­தது மிகவும் வர­வேற்­கத்­தக்க முயற்­சி­யாகும்.

ஆனால் மஹிந்த தரப்பு முன்­வைத்த கோரிக்­கை­களில் ஒன்­று­கூட மக்­க­ளுக்கு சார்­பா­ன­தாக, மக்களுக்கு நன்மை பயக்கக் கூடி­ய­தாக இல்லை என்­பது மன வருத்­தத்­திற்­கு­ரி­யது.

இந்த நாட்டில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­வுக்கு 58 இலட்சம் மக்கள் வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றார்கள். ஜனா­தி­பதி மைத்­தி­ரியை சந்­தித்த போது இந்த மக்­க­ளுக்கு உருப்­ப­டி­யான அனு­கூ­லங்­களை நேர­டி­யாக வழங்கக் கூடிய கோரிக்கை ஒன்­றை­யேனும் மஹிந்த குழு­வினர் முன்­வைத்­தி­ருக்­கலாம்.

அது மக்­க­ளுக்­கான வேண்­டு­கோ­ளாக இருக்கும் பட்­சத்தில் ஜனா­தி­பதி அதற்கு சாத­க­மான வாக்­குறுதிகளை அளித்­தி­ருக்க அதிக வாய்ப்­பி­ருந்­தது.

ஆனால், தமது சொந்த அர­சியல் மற்றும் கட்சி விட­யங்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுத்­ததன் மூலம், தமது அர­சியல் எப்­பேர்ப்பட்­டது என்­பதை வெ ளியு­ல­குக்கு காட்­டி­யி­ருக்­கின்­றது மஹிந்த தரப்பு.

புதுப்­புது சந்­தே­கங்கள்

எது எவ்­வா­றி­ருப்­பினும் இந்த சந்­திப்பு  எதிர்­கா­லத்தில் வேறு ஏதேனும் நகர்­வு­க­ளுக்கு இட்டுச் செல்­லுமா என்ற சந்­தே­கத்தை தோற்­று­வித்­துள்­ளதை மறுப்­ப­தற்­கில்லை.

குறிப்­பாக, மைத்­திரி மஹிந்த உறவு துளிர்த்து விடுமா என்­பதும் அதனால் பிர­தமர் ரணில் விக்கிரமசிங்கவின் கனவு சிதைந்­து­வி­டுமா என்­ப­துமே இன்­றைய கவ­லை­யாக இருக்­கின்­றது.

இது­வரை பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­ட­வில்லை என்­றாலும் இன்னும் மூன்று மாதங்­க­ளுக்குள் பொதுத் தோ்தலொன்று நடை­பெறும் என்­பது நிச்­ச­யிக்­கப்­பட்­டா­யிற்று.

rajapaksa_350_051513063437அந்த தோ்தலில் பிர­த­ம­ராகும் பேராசை மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு இருக்­கின்­றது. நிறை­வேற்றதிகார ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­பட்ட பிற்­பாடு உரு­வாகும் பாரா­ளு­மன்­றத்தில் அதி­காரமுள்ள பிர­தமர் பத­வி­யையும் ஒரு தட­வை­யேனும் சுகித்து விட வேண்டும் என்­பதில் அவர் குறியாக இருக்­கின்றார்.

தனக்கு ஏற்­பட்ட தோல்வி, இழப்­புக்­க­ளுக்கு ஒரு ஆறு­த­லாக அப்­ப­தவி இருக்கும் என்று மஹிந்த திடமாக நம்­பு­வது புல­னா­கின்­றது.

மைத்­தி­ரி­பா­ல­விடம் ஜனா­தி­பதி பத­வியை ஒப்­ப­டைத்த பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த மேற்கொண்ட ஒவ்­வொரு நட­வ­டிக்­கையும் பிர­மதர் பத­வியை இலக்கு வைத்­த­தா­கவே இருந்­தது.

ஆனால், கட்­டு­ரையின் ஆரம்­பத்தில் குறிப்­பிட்ட கார­ணங்­களால் அது சாத்­தி­யப்­ப­டாமல் போன­தா­லேயே இப்­போது நேர­டி­யாக சு.க.வின் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் வந்­தி­ருக்­கின்றார் என்­பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

தமது பக்கம் சாதக சூழல் இருந்­தி­ருக்­கு­மானால் மஹிந்த இந்த அள­வுக்கு இறங்கி வந்­தி­ருக்க மாட்டார் என்­பது சின்­னப்­பிள்­ளைக்கு கூட தெரிந்த விட­ய­மாகும்.

சுதந்­திரக் கட்சி பிள­வு­பட்­டுள்­ளது, ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு பல துண்டங்களாகியிருக்கின்­றது, பொது பல­சே­னாவை எதிர்த்­தால்தான் சிறு­பான்மை மக்­களை கவ­ரலாம் என்ற நிலைப்­பாடு உரு­வா­கி­யுள்­ளது.

சு.க. சார்பில் வேட்­பா­ள­ராக மஹிந்­தவை நிறுத்­து­வது என்றால் கூட கட்சித் தலை­வ­ரான மைத்­தி­ரி­பால ஒப்­புதல் அளிக்க வேண்­டி­யுள்­ளது.

சுதந்­திரக் கட்­சியை தவிர சுயேச்சைக் குழுவில் அல்­லது புதிய கட்­சி­யொன்றில் போட்­டி­யிட்டால் எல்­லா­வற்­றையும் பூச்­சி­யத்­தி­லி­ருந்து ஆரம்­பிக்க வேண்டும்.

இவ்­வா­றான ஒரு நிலையில் வெறு­மனே மக்கள் அலை என்று சொல்லிக் கொண்டு கூட்டம் கூட்­டு­வதால் மட்டும் பெரி­தாக ஒன்றும் நடந்­து­விடப் போவ­தில்லை என்­பதை உணர்ந்­ததன் அடிப்படையிலேயே, ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தற்­கான முஸ்­தீ­பு­களை எதிர்­த­ரப்பு மேற்கொண்டிருக்கின்றது.

இதன்­போது அவர்கள் பேசிய விட­யங்­களை வைத்துப் பார்க்­கின்­ற­போது முன்னாள் ஜனா­தி­ப­தியை பிரத­ம­ராக்கும் திட்­டத்தின் கடை­சிக்­கட்ட   முயற்­சி­யைதான் இப்­போது மஹிந்த ஆத­ரவு அணி­யினர் மேற்­கொண்டு வரு­கின்­றனர் என்­பது பட்­ட­வர்த்­த­ன­மாக தெரி­கின்­றது.

Untitled174-600x350அவ்­வாறு நடக்­கு­மாயின் நாட்டின் எதிர்­காலம் என்­ன­வாகும் என்­பது ஒரு புற­மி­ருக்க, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சியல் எதிர்­காலம் என்­ன­வாகும் என்­ப­தே­  பெ­ரிய கேள்­வி­யாக நம்­முன்னேஎழுந்தி­ருக்­கின்­றது.  இரு தரப்பு சந்­திப்பு இக் கேள்­வியை பல­மாக விதைத்­துள்­ளது.

இந்த நாட்டில் நிறை­வேற்­ற­தி­காரம் கிட்­டத்­தட்ட ஒரு சர்­வா­தி­கா­ரத்தின் அள­வுக்கு கோலோச்சிக்கொண்­டி­ருந்த ஒரு ஆட்சிச் சூழலை மாற்­றி­ய­மைத்­ததில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு முழு­முதற் பங்­குள்­ளது.

அவரும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவும் இல்­லை­யென்றால்  இந்த நாட்டில் நல்­லாட்சி உரு­வா­கி­யி­ருக்­கவும் மாட்­டாது எனலாம்.

ரணிலின் கனவு பிர­த­ம­ராக இருப்­பதே. ஜனா­தி­ப­தி­யாக தன்னால் வர முடி­யாது என்­பதை அனுபவங்களின் ஊடாக உணர்ந்து கொண்ட அவர் உச்­ச­பட்சம் தமக்கு பிர­தமர் பத­வியே கிடைக்கும் என்­பதை சரி­யாக முன்­ம­திப்­பீடு செய்­தி­ருந்தார். அது­போல இப்­போது அப்­ப­தவி கிடைத்­தி­ருக்­கின்­றது.

ஆனால் இன்று மீண்டும் ஏதா­வது காரண காரி­யங்­களின் அடிப்­ப­டையில் மஹிந்த ராஜ­ப­க் ஷ பிர­தான வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்டு விடு­வாரோ என்ற சந்­தேகம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

அவ்­வாறு தின்­பா­ருக்கு தேனெ­டுத்துக் கொடுத்­து­விட்டு ஏமாந்து போக ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒன்றும் அர­சியல் வெகு­ளி­யல்ல.

அதே­வேளை மைத்­தி­ரியும் மக்­களும் மஹிந்த ராஜ­ப­க் ஷ பிரதமராவதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தவும் இல்லை.

ஆனால், சுதந்திரக் கட்சியா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியா இந்த நாட்டின் ஆட்சியில் பிரதான அங்கம் வகிப்பது என்ற ஒரு பனிப்போர் உருவாகும் என்றால் நிலைமைகள் மோசமாக மாற்றமடையும்.

தற்போது தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு சுமுகமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், பொதுத் தேர்தல் எனறு வருகின்ற போது எந்தக் கட்சியை முன்னிலைப்படுத்துவது என்ற சிக்கல் உருவாவதை தவிர்க்க முடியாது.

அவ்வாறான ஒரு நேரத்தில் சுதந்திரக் கட்சியின் சார்பில் வேறு யாரேனும் ஒருவர் நியமிக்கப்பட்டால் அது வேறு விடயம்.

ஆனால் மைத்திரி மஹிந்தவுக்கு இடையில் ஏதேனும் அடிப்படையில் உடன்பாடு எட்டப்பட்டு அதன் வழியாக முன்னாள் ஜனாதிபதி பிரதமர் வேட்பாளாராகி விடுவாரோ என்ற அச்சம் பொதுவாக ஏற்பட்டிருக்கின்றது.

அப்படி நடந்தால், கோடிகளையும் பல மில்லியன்களையும் எழுதிவிட்டு புச்சியத்தால் பெருக்கிய கதையாகிவிடும் இலங்கையின் நல்லாட்சி.

–ஏ.எல்.நிப்றாஸ்–

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com