ilakkiyainfo

சோறு, புட்டு. வடை சாப்பிட்ட வடக்கு மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்! -யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிமன்றில் தெரிவிப்பு

சோறு, புட்டு. வடை சாப்பிட்ட வடக்கு மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்! -யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிமன்றில் தெரிவிப்பு
November 20
18:57 2020

சோறும், புட்டும் (பிட்டு) வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என்று யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்ணான்டோ, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் மன்றுரைத்தார்.

அவரது கருத்துக்கு கடும் ஆட்சேபனை வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், “சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையை மீறி வடக்கு மாகாண மக்களை இழிவாகப் பேசுகிறார்.

10 ஆண்டுகளாக மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் நான் வடக்கு மக்களைப் பேசுவதற்கு இவர் யார் எனக் கேட்கின்றேன்” என்றார்.

அதனால் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைக் கண்டித்த நீமிமன்று, அவரைக் கட்டுப்படுத்தியது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயத்திக்கத்துக்குள் நாளை நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதிக்கு இடையே இலங்கை குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத்தொல்லை என்ற வியாக்கியனத்தின் கீழ் விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கிலேயே யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ, தனது சமர்ப்பணத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

“உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு வருடாந்தம் 365 நாட்கள் உள்ளன. ஏன் நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை மட்டும் நினைவுகூர வேண்டும்.

விடுதலைப் புலிகள் அமைப்பினால் கூறப்பட்டதனால்தான் அந்தவாரம் கடைப்பிடிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்ட யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தியாக தீபம் திலீபன் உள்ளிட்டோருக்கு நினைவேந்தல் நடத்திய ஒளிப்படப் பிரதியை சான்றாக முன்வைத்தார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

April 2021
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com