வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் பகுதியில் தீயில் எரிந்த நிலையில், ஒரு பிள்ளையின் தாய் மரணமடைந்துள்ளார்.

குறித்த பெண் நேற்றுமுன்தினம் தனது வீட்டில் இருந்த போது தவறுதலாக தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

 

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (21) அவர் மரணமடைந்துள்ளார்.

விஜயா எனும் 24 வயதுடைய, ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது மரணம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.