தமிழ், தெலுங்கு மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகை அனுஷ்கா, வயதாக ஆக இளமையுடன் காட்சியளிக்கிறார். மேலும் நடிகைகளிலேயே உயரத்திற்கு ஏற்ற உடல் எடை கொண்டவர் என்றால் அது நம் அனுஷ்கா தான்.
ஆரம்ப காலத்தில் யோகா மாஸ்டராக இருந்த அனுஷ்காவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், அதனை சிறப்பாக பயன்படுத்தி, தன் கச்சிதமான உடலமைப்பாலும், அழகான முகம் மற்றும் புன்னகையால் ஏராளமான ரசிகர், ரசிகைகளைக் கவர்ந்தார்.
இன்னொரு முக்கியமான விஷயம், நம் அனுஷ்காவின் வயது 34 என்று சொன்னால் நம்புவீர்களா? கட்டாயம் முடியாது. அந்த அளவில் அனுஷ்கா தன் உடலை ஃபிட்டாக பராமரித்து வருகிறார்.
இதன் பின்னணியில் உள்ள ரகசியம் என்னவென்று தெரியுமா? அவரது டயட் மற்றும் அன்றாட பழக்கவழக்கங்கள் தான். இங்கு நடிகை அனுஷ்கா ஷெட்டியின் டயட் மற்றும் ஃபிட்னஸ் ரகசியம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

சரியான உணவுகள்
அனுஷ்கா எப்போதும் உண்ணும் உணவுகள் மீது மிகவும் கவனமாகவும், கட்டுப்பாட்டுடனும் இருப்பார். அந்த கட்டுப்பாடு தான் அவர்களின் சிக்கென்ற உடலமைப்பிற்கான முதல் காரணம். மேலும் இவர் மேலும் இவர் பெண்களை ஜங்க் உணவுகளில் இருந்து விலகி இருக்குமாறும், இந்த உணவுகளில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்புக்கள் தான் பெண்களின் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் .

தேன் மற்றும் பிரட்
அனுஷ்கா காலையில் எப்போதுமே கோதுமை பிரட் மற்றும் தேன் உட்கொள்வாராம். இதனால் வயிறு நிறைவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் இது பாதுகாக்கும் என்றும் கூறியுள்ளார்.

நீர்ம உணவுகள்
முக்கியமாக அனுஷ்கா நீர்ம உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வாராம். ஆனால் சோடா கலந்த பானங்களை தொடவேமாட்டாராம். மேலும் தன் ரசிகர், ரசிகைகளையும் சோடா பானங்களைத் தவிர்க்குமாறு கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி இவர் எப்போதுமே தண்ணீரை அதிக அளவில் குடிப்பாராம். தண்ணீரை அதிகம் குடிப்பதால், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, தன் முகம் பிரகாசமாக இருக்கிறது என்றும் பேட்டியில் கூறியுள்ளார்.