ilakkiyainfo

நயன்தாராவுடன் கடற்கரையில் நின்றும் பேசும் காட்சி – விக்னேஷ் சிவன் வெளியிட்டார்

நயன்தாராவுடன் கடற்கரையில் நின்றும் பேசும் காட்சி – விக்னேஷ் சிவன் வெளியிட்டார்
April 28
08:12 2020

ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய திரையுலக கதாநாயகிகளில் முதல் இடத்தில் இருக்கும் நயன்தாரா, `ஐயா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடித்தார்.
ஹரி டைரக்டு செய்தார். மறைந்த டைரக்டர் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. முதல் படமே வெற்றி பெற்றதால், நயன்தாரா ராசியான நாயகியாக கருதப்பட்டார்.
தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழி படங்களில் மட்டும் நடித்து வந்த அவர், தெலுங்கு பட உலகுக்கு சென்று, அங்கேயும் பிரபல நாயகி ஆனார்.
இந்தநிலையில், தென்னிந்திய பட உலகில் நம்பர்-1 இடத்தில் இருக்கும் நயன்தாராவுக்கு 34 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை.
ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் ஏற்பட்ட காதல் முறிந்து போனது. அதன்பிறகு நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்து இப்போதுவரை நீடித்து வருகிறது.
இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், கோவில்களுக்கு சென்று வருவதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
அதில், விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் கடற்கரையில் நின்றபடி பேசும் காட்சியை விளக்குகிறார் விக்னேஷ் சிவன். அதை ஆர்வத்துடனும், புன்னகையுடனும் கேட்டபடி நிற்கிறார் நயன்தாரா. இதுவரை வெளியிடாத இந்த வீடியோவை கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரித்து வரும் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com