ilakkiyainfo

நல்லூர் ஆலய கடமையில் பொலிஸாருக்குப் பதில் இராணுவம்?

நல்லூர் ஆலய கடமையில் பொலிஸாருக்குப் பதில் இராணுவம்?
July 30
05:50 2020

 

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் அடுத்தவாரம் மீளப்பெறப்பட்டு, இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம் பெற்று வருகிறது.

எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வைரவர் சாந்தி உற்சவத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வீதித் தடைகள், அடியவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் வருடா வருடம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வருடம் ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து ஆலய வெளி வீதிக்கு வெளிப்புறமாக இராணுவத்தினர் சிலரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலும் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், அடுத்த வாரம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி தொடக்கம் பொலிஸார் தேர்தல் கடமைக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

இதன் காரணமாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் மீளப்பெறப்பட்டு இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் ஒரு வாரத்துக்கு இந்த நடைமுறை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

ஆம் , நீ திரும்ப வர வேண்டும், ஏனெனில் கோட்டாபய வீட்டில் கோப்பை , குண்டி கழுவ ஒரு ஆள்...

இந்த குட்டி சாத்தான்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நான் சொல்ல தேவை இல்லை , இவங்களை ஒரு நாட்டில்...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com