அசாதாரண சூழந்நிலையினை கருத்திற்கொண்டு இன்றிரவு 9.00 மணிமுதல் நாளை அதிகாலை 4.00 மணிவரை வடமேல் மாகாணம், கம்பஹா மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் வடமேல் மாகாணத்துக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரையும், அதேபோல் கம்பஹா மாவட்டத்துக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6.00 மணிவரையும் அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டள்ளார்.