கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஜெர்மனி அமைச்சர். இது அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் (Thomas Schaefer). 54 வயதான இவர் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல், சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இதற்கிடையே நேற்று (சனிக்கிழமை) திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த 10 வருடங்களாக நிதித் தலைவராக இருந்த அவர், கடந்த சில மாதங்களாக, கொரோனவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிறுவனங்களுக்கும், அதன் தொழிலார்களுக்கும் இரவும் பகலுமாக உதவிக்கொண்டிருந்தார்.

இதனால் கடும் மனஉழைச்சலுக்கு ஆளானார் என்று கூறப்படுகிறது. எனினும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்காத்து கொள்ள வழி தெரியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். இவருடைய சடலம் நேற்று ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் கிடைத்தது.

`இத்தகைய சமயத்தில் தாமஸை போன்ற ஆட்கள்தான் அதிகம் தேவைப்படும்; அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது’ என்கின்றனர் அவருடன் வேலை செய்யும் சக நண்பர்கள் மற்றும் அதிகாரிகள்.

இவருக்கு ஒரு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். கொரோனாவால் ஏற்பட்ட விளைவுகளால் மிக முக்கியமான நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது இதுவே முதல் தடவை ஆகும். இந்த சம்பவம் ஜெர்மனியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply