ilakkiyainfo

பரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்

பரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்
April 02
16:23 2020

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா குறித்த பரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது, கற்களை வீசி தாக்கி விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சுகாதாரத் துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து களப்பணியாற்றி வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் டாக்டர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என பரிசோதனை செய்கின்றனர்.

ஒரு சில இடங்களில் மருத்துவர்களின் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுப்பதுடன், அவர்களை தாக்கவும் செய்கின்றனர். பரிசோதனைக்கு வரும்படி அறிவுறுத்தினாலும், நோயின் தீவிரத்தை அறியாமல் அலட்சியமாக இருப்பதுடன், அரசாங்கத்தை குறை கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் தாட் பட் பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா? என டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். 3 டாக்டர்கள் மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் என 5 பேர் அங்குள்ள மக்களிடம், காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் குறித்து கேட்டறிந்தனர்.

202004021423418052_Tamil_News_Coronavirus-Health-Officials-Attacked-By-Locals-In-Madhya_SECVPF.gifஇது அங்கிருந்தவர்களை ஆத்திரமடையச் செய்தது. டாக்டர்கள் மீது பெரிய கற்கள் மற்றும் கம்புகளை வீசி தாக்கி விரட்டியடித்தனர். வன்முறைக் கும்பலிடம் இருந்து சுகாதாரக் குழுவினரை போலீசார் மீட்டனர். அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறைக் கும்பல் தாக்கியதில் 2 பெண் டாக்டர்கள் பலத்த காயமடைந்தனர்.

டாக்டர்களை குறுகலான தெருவில் அந்த கும்பல் துரத்தி தாக்குவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களின் கடமையை அவமதிப்பதுடன், வைரஸ் பெருந்தொற்று பரவ வழிவகுப்பதாகவும் அமைந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் 90க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com