புங்குடுதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியா வழக்கில் சந்தேக நபர்களாக உள்ள 9 பேரும் விடுதலை செய்யப்படும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த முதலாம் திகதி (01.09.2015) அன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சந்தேகநபர்களின் இரத்தமாதிரிகள் அடங்கிய அறிக்கையை சட்ட வைத்திய அதிகாரி மயுரன், நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது மரபணு பரிசோதனை தொடர்பாக சந்தேக நபர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுதொடர்பாக மன்றில் வாக்குமூலம் வழங்கி விட்டு வந்த சட்ட வைத்திய அதிகாரியை வினவிய போது சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகள், சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட எவ்வித தடயப் பொருட்களுடனும் ஒத்துப் போகவில்லை.

அத்துடன் மாணவி வித்தியா சடலமாக மீட்கப்பட்ட இடத்திற்கு சென்று பரிசோதனை செய்தவேளை மழை சற்று பெய்து கொண்டிருந்தது.

அப்போது மாணவியின் மர்மப்பகுதி (யோனிப்பகுதி) எறும்புகளும், புழுக்களும் ஊர்ந்து கொண்டிருந்தன. மழை நீர் காரணமாக சடலத்தின் பல பகுதிகள் நனைந்து இருந்ததை அவதானித்தேன்.

நகக்கீறல்கள் சில வற்றுடன் ஆங்காங்கே முடிகளும் சிந்திக் காணப்பட்டன. இம்முடி மாணவியின்  முடியாக கூட இருக்கலாம் அல்லது குற்றத்தில் ஈடுபட்ட நபர்களது முடியாக இருக்கலாம் என நினைத்து சான்று பொருட்களாக அவற்றை சேகரித்தேன்.

யோனி பகுதியில் சிந்தப்பட்ட விந்தணுக்களையும் இனங்கண்டு சேகரித்தேன். அதில் சில கலங்கள் உயிருடன் இருக்கும் என நம்பினேன். தற்போது எனது பொறுப்பில் உள்ள குளிர்சாதன பெட்டியில் அவை பாதுகாப்பாக உள்ளது.

அத்துடன் என்னால் மீட்கப்பட்ட மயிர்கள் தொடர்பாக பகுப்பாய்வு மேற்கொள்ள வசதி குறைவாக உள்ள காரணத்தினால் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு நீதிமன்ற அனுமதியுடன் வழங்கப்படவுள்ளது.

ஆனாலும் நம்பிக்கையாக கூற முடியாது, தடயங்கள், ஆதாரங்களில் சந்தேகமாக தான் உள்ளது என தெரிவித்துள்ளார்.

நீதிமன்றில் சந்தேகநபர்கள் சார்பாக சட்டத்தரணி ஒருவர் ஆஜராகியவேளை அதனுடன் இரத்த மாதிரி குறித்து சந்தேக நபர்களுக்கு சாதகமாக பதில் கிடைத்தது முதல் அவர்களது (சந்தேகநபர்களின்) முகம் சந்தோசத்துக்கு சென்றதை அவதானிக்க முடிந்தது.

எது எவ்வாறு இருந்தாலும் தற்போது புங்குடுதீவு மாணவி கொலை சந்தேக நபர்களின் செயற்பாடுகளை அவதானிக்கின்ற போது விடுதலை செய்யப்படுவோம் என்கின்ற நம்பிக்கை அவர்களிற்கு எழுந்துள்ளதை காண முடிந்தது.

இம்மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டி பல அமைப்புகள், பாடசாலைகள் உள்ளிட்டவைகள் கண்டனங்கள் தெரிவித்தும் ஒன்றுமே நடைபெற்றதாக தெரியவில்லை.

வழக்கை விசாரிக்கும் நீதவான் கூட “இம்மாணவி கொலை, மனித குலத்திற்கு ஏற்ற ஒரு செயற்பாடு அல்ல” என தெரிவித்து வருகின்றார். ஆயினும் இதனை முறியடிக்க சந்தேகநபர்களது உறவினர்கள் பல இலட்சம் ரூபாய்களை செலவழிக்க தயாராக உள்ளனர்.

மாணவி வித்தியா உயிர் பிரிந்த இடம் இதோ இதுதான்.. -(அதிர்ச்சி படங்கள், வீடியோ)

unnamed-31unnamed-28unnamed-29unnamed-30

Share.
Leave A Reply