மட்டக்களப்பின் களுவாஞ்சிகுடியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இன்று (28) காலை இடம்பெற்றுள்ளது.

34 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரான துர்க்கா என்பரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி பெலிஸாரும், மட்டக்களப்பு தடயவியல் பொலிஸ் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply